Translate

கத்தரிக்காய் வளர்ப்பு

கத்தரிக்காய் செடியில் தாறுமாறான அறுவடை எடுக்க  பத்து டிப்ஸ்கள்!!


Sudagarkrishnanchannels
Brinjal Cultivation  ன்றைய பதிவில் கத்திரிக்காய் செடியில் அதிக அறுவடையை எடுக்க சுலபமான சில  டிப்ஸ்களை பற்றி தெரிந்து கொள்வோம். கத்தரிக்காய்களில் அதிகளவு மருத்துவ குணங்கள் உண்டு. ஐரோப்பியர்கள் இதனை egg plant என்று கூறுவார்கள். விதையோடு சதைப்பகுதியில், ஆன்தோசையனின் மற்றும் ஃப்ளேவோனாய்டட்ஸ் என்ற, இரண்டாம் நிலை வேதிக் கூறுகள் இருக்கின்றன. இத்தகைய வேதிக்கூறுகள் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடியவை! கத்தரிக்காய் தோலில் பொட்டசியம் மெக்னீசியம், நார்ச்சத்துக்கள், ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. 

மனித உடலில் புற்றுநோய் காரணமாக இருக்கும், ஃபிரீரேடிக்கிள் என்ற திசுக்களை கட்டுப்படுத்த கூடிய ஆற்றல், கத்தரிக்காயில் உள்ள, பிளோலிக் அமிலத்தில் உள்ளது! பிளோலிக் அமிலம் மற்ற காய்கறிகள் பழங்களில் இருந்தாலும், புற்றுநோய் கிருமிகள் தொற்றாமல் தடுக்கக்கூடிய ஆற்றல் மட்டுமே பிற காய்கறிகளில் உள்ளது. ஆனால், புற்றுநோய் தாக்கிய பிறகும், புற்றுநோய் கிருமிகள் பரவாமல் தடுக்க கூடிய ஆற்றல், கத்தரிக்காயில் உள்ள பிளோலிக் அமிலத்திற்க்கு உண்டு! கத்திரிக்காயில் உள்ள அந்தோனாசைனின், என்கின்ற பொருள் சீரான ரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது. இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த கத்தரிக்காய் செடியை வளர்ப்பது ரொம்பவும் சவாலான விஷயம்தான்! ஆனால் இந்த பதிவில்  கூறியிருக்கும் பத்து டிப்ஸ்களை நீங்கள் செய்தாலே போதும்! கத்தரிக்காய் செடியை நாமும் மாடித்தோட்டம், அல்லது வீட்டு தோட்டத்தில், மிகச்சுலபமாக வளர்த்து விடலாம். 

கத்திரிக்காய் செடியில் தாறுமாறான காய்கறிகளைப் பெற பக்காவான பத்து டிப்ஸ்கள்:

      னது மாடி தோட்டத்தில் நான் முதன்முதலாக வைத்த செடி கத்திரிக்காய் செடி தான். முதன்முதலாக தோல்வியடைந்த செடியும் கத்தரிக்காய் செடிதான். பொதுவாக கத்தரிக்காயில் நிறையவகையான பூச்சி தாக்குதல்கள் ஏற்படும். அதனை எல்லாம் சமாளித்து தாறுமாறான அறுவடை எடுப்பது என்பது மிகவும் கடினமான காரியம்.  அதுவும் ஆர்கானிக் விவசாயத்தில்.! ஆனால் நீங்கள்   கத்திரிக்காய் செடியை வளர்த்து, ஓரளவு அறுவடையும் எடுத்துவிட்டால் உண்மையிலேயே, நீங்கள் சிறந்த இயற்கைவிவசாயிதான். 


 ஒருவர் கத்திரிக்காய் செடியை வளர்த்து, அறுவடை எடுத்துவிட்டால், அவர்கள் மற்ற செடிகளை சுலபமாக வளர்த்துவிடலாம், என்று என்னுடைய தகப்பனார் அடிக்கடி கூறுவார்கள்.


Sudagarkrishnanchannels
Brinjal Cultivation 


பருவம் பார்த்து பயிர்செய்:


 • மாடித் தோட்டம் அல்லது வீட்டுத் தோட்டத்தில்  வருடத்தின் அனைத்து மாதங்களும் கத்தரிக்காய் செடிகளை பயிரிடலாம். டிசம்பர் ஜனவரி முதல் மே மாதம் வரை! 
 • இருந்தாலும் ஆடிப்பட்டத்தில் தான் கத்தரிக்காய் செடிகள் அதிக காய்களை கொடுக்கிறது. எனவே கத்திரிக்காய் செடிகளை ஆடிப்பட்டத்தில் பயிரிடுவது சாலச்சிறந்தது. 
 • முடிந்தவரை கோடைகாலத்தில் கத்திரிக்காய் செடிகளை பயிரிடுவதை தவிர்ப்பது நல்லது. கோடைகாலத்தில் மாவுப் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். 
 • செடியில்  கத்தரிக்காய்கள் சிறிய வடிவத்திலேயே  வரும். ஏனென்றால் மழைக்காலத்தில் கத்தரிக்காய் செடிகளுக்குத் தேவையான ஊட்டசத்துக்கள் மழை நீரிலேயே இருக்கும். ஆனால் கோடைகாலத்தில் மழைநீர் கத்திரிக்காய் செடிகளுக்கு கிடைக்காமல் போவதால் கத்திரிக் காய்கள் சிறிய வடிவிலேயே காய்க்கின்றன.
 • கோடைகாலத்தில் கத்தரிக்காய்கள் கசப்புத் தன்மை உடையதாக இருக்கும். இது பொட்டாசியம் ஊட்டச்சத்து குறைபாட்டினால் வருவதுதான். அதற்கு சாம்பல் அல்லது வாழைப்பழத் தோலை தண்ணீரில் ஊறவைத்து செடிகளுக்கு கொடுப்பதினால் பொட்டாசியம் சத்து குறைபாடு நீங்கும்.
 • முடிந்தவரை கோடை காலத்தை தவிர்த்து மீதி உள்ள காலங்களில் கத்திரிக்காய் செடிகளை பயிரிடுவது சிறந்தது.

விதை விதைத்தல்/விதைநேர்த்தி:


     த்திரிக்காய் நாற்றுவிட்டு, பிடுங்கி எடுத்து நடக்கூடிய தாவரவகையை சார்ந்ததாகும். அதனால், குழித்தட்டில் விதைநேர்த்தி செய்து விதைக்கலாம். விதைநேர்த்தி செய்யும் போது டிரைக்கோடெர்மா விரிடி உயிர்-உரங்கள், அல்லது பஞ்சகவ்யா இவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்வது மிகவும் சிறப்பானது. கத்தரிக்காயின் விதைகள் மிகவும் சிறிய அளவில் இருப்பதினால் விதை நேர்த்தி செய்வதில் சிரமமாக இருக்கும். எனவே மண் கலவையிலேயே உயிர் உரங்களான டிரைக்கோடெர்மா விரிடி சூடோமோனஸ் இவற்றை கலந்து கத்தரிக்காய் விதைகளை விதைக்கலாம். கத்தரிக்காய் செடிகளின் விதைகளை விதை நேர்த்தி செய்வதினால் வேர் அழுகல் நோய் தண்டு அழுகல் நோய் பூஞ்சான்கள் இவைகள் வருவதை தடுத்து ஆரோக்கியமான கத்தரிக்காய் செடிகளை உருவாக்கலாம். 
கத்திரிக்காய் செடிகளை விதை நேர்த்தி செய்து விதைப்பதால் கத்தரிக்காய் செடியில் வரும் நோய் தாக்குதல், பூச்சி தாக்குதல் இவைகளை தவிர்த்து நல்ல விளைச்சலை சுலபமாக எடுக்கலாம்.

மண்கலவை தயாரித்தல்:

       த்தரிக்காய் செடிக்கு மண் கலவை என்று எடுத்துக்கொண்டால்,

 •  வண்டல்மண், 
 • களிமண் கலந்த வண்டல் மண், 
 • செம்மண் சிறந்தது.  

முக்கியமாக சிறந்த வடிகால் வசதியுடைய மண்ணாக இருப்பது சிறப்பம்சம். மண் கலவையுடன் வேப்பம் புண்ணாக்கு, மற்றும் உயிர்-உரங்கள் அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா சூடோமோனஸ் டிரைக்கோடெர்மா விரிடி, பொட்டாஷ் பாக்டீரியா சேர்ப்பது மிகவும் அவசியம். இயற்கை உரங்கள் மண்புழு உரம் அல்லது தொழு உரம் அல்லது இலை மக்கு உரம் அல்லது காய்கறி கழிவில் இருந்து கிடைக்கும் உரம் சேர்த்துக்கொள்ளலாம். மண் கலவையில் உயிர் உரங்களை சேர்ப்பதனால் கத்திரிக்காய் செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து எளிதாக கரைத்து  கொடுக்கும். வேப்பம் புண்ணாக்கு கத்தரிக்காய் செடிகளுக்கு கொடுப்பதினால் வேர் அழுகல் நோய், வேரில் வரும் பூச்சிகள், தண்டு அழுகல் நோய், இலைகளில் வரும் இலைப்பேன்கள், செம்பேன்கள் கம்பளிப்புழு, பச்சை புழுக்கள் காய்த்துளைப்பான் தண்டுதுளைப்பான் இவைகளை கட்டுப்படுத்தலாம். கத்திரிக்காய் செடிகளை நாற்று விட்டு, ஜான் அளவுக்கு வளர்ந்த பின்னர், பிடுங்கி நட வேண்டும். தோராயமாக 25 நாள் முதல் 30 நாட்கள் வரை பிடிங்கி நடலாம்.


கத்திரிக்காய் செடியினை பாதிக்கும் பூச்சிகள்/புழுக்கள்:


 •  த்தரிச்செடியில்  முப்பது முதல் நாற்பது நாட்களில் பக்கக் கிளைகள் வரும்போது, தண்டு துளைப்பான், கம்பளி பூச்சி தொல்லைகள் இருக்கும். அப்பொழுது வேப்ப எண்ணெயுடன், இயற்கை சோப்பு கரைசல் கலந்து தெளிக்கவேண்டும். வாரம் ஒரு முறை வேப்ப எண்ணெய் தவறாமல் தெளித்து வருவது சிறந்த பலனை தரும். 
 • அடுத்தது விளக்குப் பொறி (Pest Control) வைக்க வேண்டும். விளக்குப்பொறி வைப்பதினால் அந்த வெளிச்சத்தில் பூச்சிகள் கவர்ந்து இழுத்து விளக்குப்பொறி அடியில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரில் [எண்ணெய் கலந்த தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில்] விழுந்து, அதனால் பறக்க முடியாமல் இறந்துவிடும். முடிந்தவரை பாத்திரத்தில் விழுந்து கிடக்கும், பூச்சிகளை அடிக்கடி அகற்றி விடுவது நல்லது. 
 • கத்தரிக்காய் செடிகளில் வரும் தண்டுப்புழு, காய்த்துளைப்பான், தண்டுதுளைப்பான், தத்துப் பூச்சிகள் இவைகளை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி வைக்கலாம். இனக்கவர்ச்சிப் பொறி வைப்பதினால் பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து அழிக்கலாம். இனக்கவர்ச்சிப் பொறியில் உள்ள பூச்சிகளை உடனுக்குடன் எடுத்து அழித்து விடுவது நல்லது.
 •  அசுஉனி, இலைப்பேன், மாவுப்பூச்சிகள் தொல்லைகள் இருக்கும். இதற்கு இஞ்சி, பூண்டு, மிளகாய், கரைசல் மிகவும் நல்லது. அசுஉனி பூச்சிகளுக்கு, சாம்பல் இலைகளின் மீது காலைவேளைகளில் தூவி விடலாம்., அல்லது சாம்பல் கரைசலையும் பயன்படுத்தலாம்.

உரங்கள்:


Sudagarkrishnanchannels
Brinjal Cultivation       த்தரிக்காய் செடியில் நாற்பத்தைந்து நாட்களில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் கத்திரிக்காய் செடிகளுக்கு அமிலத்தன்மை கொடுப்பதினால் பூக்கள் நிறைய பூக்க ஆரம்பிக்கும். இச்சமயங்களில் புளித்த மோருடன் தேங்காய்ப்பால் கலந்து தயாரிக்கப்படுகின்ற, தேமோர் கரைசல், மீன் அமினோ அமிலம், அரப்பு மோர் கரைசல், மோர் பெருங்காயத்தூள் கரைசல், இவற்றில் உங்களிடம் உள்ள கரைசலை தெளிக்கலாம்.

 
ALSO READ 
👉 தேமோர் கரைசல் தயாரிப்பது எப்படி? அதனை செடிகளுக்கு, எப்பொழுது எப்படி பயன்படுத்த வேண்டும்?

👉 வேப்பம் புண்ணாக்கு கரைசல் தயாரிப்பது எப்படி?
 

இவ்வாறு பூக்கள் பூக்கின்ற நேரத்தில் தெளிப்பதால் பூக்கள் அனைத்தும் காய்கறிகளாக மாறும். காய்கறிகள் அனைத்தும் மிகவும் சுவையாக இருக்கும். மேலும் பூச்சி தாக்குதலும் குறையும். இந்த நேரத்தில் வீட்டிலேயே இருக்கும் காய்கறி கழுவிய தண்ணீர், அரிசி கழுவிய தண்ணீர் இவைகளோடு தண்ணீர் கலந்து செடிகளின் வேர் பகுதியில் ஊற்றி வரலாம். மண்புழு உரம் வேர்ப்பகுதியில் போட்டு கிளறி விடுவதனால் பூக்கள் உதிர்வு பிரச்சனைகள் சரியாகும்.

கடலை புண்ணாக்கு / வேப்பம் புண்ணாக்கு கரைசல்:


 த்திரி செடியில் பூக்கள் பூக்கும் போது, வேர் வழியாக கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கும் கலந்த கரைசலை ஊற்றினால் கத்திரிக்காய்கள் பெரியதாக, திரட்சியாக வரும். கடலை புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு கரைசல் தயாரிக்கும் போது புழுக்கள் வராமல் இருப்பதற்கு 75% கடலை புண்ணாக்கு 25% வேப்பம் புண்ணாக்கும் சேர்ந்து தண்ணீரில் ஊறவைத்து, முதலில் அந்தக் கரைசலில் மேல் படிந்திருக்கும் தண்ணீரை எடுத்து, சரிபாதி தண்ணீர் கலந்து செடிகளுக்கு ஊற்றி வரலாம். மீண்டும் அந்தக் கரைசலை கலக்கி விட்டு, மறுநாள் மேலே படிந்திருக்கும் தண்ணீரை எடுத்து ஊற்றி வரலாம். இதேபோல் தினமும் கரைசலை நன்றாக கலக்கிவிட்டு அந்த கரைசலின் மேல் படிந்திருக்கும் தண்ணீரை உபயோகப்படுத்தினால் புழுக்கள், எறும்புகள் போன்றவை செடிகளில் வருவதை தவிர்க்கலாம்.

கடலைப்புண்ணாக்கில், 

 • தழைச்சத்து-7.60 
 • மணிச்சத்து-1.50, 
 • சாம்பல்சத்து-1.30 விழுக்காடும், 
வேப்பம் புண்ணாக்கில்,
 • தழைச்சத்தும்,-5.20 விழுக்காடு
 •  மணிச்சத்து-1.90 விழுக்காடும், 
 • சாம்பல் சத்து-1.5 விழுக்காடும் உள்ளது.

 கத்தரிக்காயில் அதிக காய்கள் காய்க்க  வைப்பதற்கு இந்த சத்துக்கள் உதவுகிறது.

மழைக்கால பராமரிப்பு:


     த்தரிச்செடியில் மழைக்காலம், பனிக் காலங்களில், கத்தரிக்காய்களுக்கு அடியில் அழுகல் நோய் வரும். இந்த அழுகல் நோய், மழை பெய்யும் போது அல்லது பனி பொழிவின்போது தண்ணீர் கத்திரிக்காயின் அடியில் நின்று விடுவதினால் வருகிறது. கத்திரிக்காய் அழுகலை  சரிசெய்ய, சோற்றுக்கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கலந்து நன்றாக வடிகட்டி, அதை தெளிப்பான்கள் மூலம் கத்தரிக்காய்செடியின் பிஞ்சுகள், காய்கள், இலைகள் இவைகள் மேல் தெளித்து வருவதினால், கத்தரிக்காயில் வரும் கத்தரிக்காய் அழுகல் நோயை சரிசெய்யலாம், சோற்றுக் கற்றாழை திரவம் கத்திரிக்காயின் அழுகல் நோயை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கத்திரிக்காய் செடிகளில் வரும் பூச்சித்தாக்குதலையும், கட்டுப்படுத்துகிறது. 

சோற்றுக்கற்றாழை திரவம் சிறந்த வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது. சோற்றுக்கற்றாழை திரவத்தை கத்திரிக்காயின் வேர்ப்பகுதியில் ஊற்றுவதால், கத்திரிக்காய் செடியின் வேரில் வரும் பூச்சிகள், வேர் அழுகல் நோய், தண்டு அழுகல் நோய் இவைகளை சரிசெய்து கத்திரிக்காய் செடி ஆரோக்கியமாக வளர்ந்து அதிக காய்களை தருவதற்கு உதவி செய்கிறது. 

கத்திரிக்காய் கசப்புதன்மை நீங்க :


Sudagarkrishnanchannels
Brinjal Cultivation 


   த்தரிக்காய்கள் காய்க்கும் பருவத்தில், சாம்பல், அல்லது வாழைப்பழத்தோல் தண்ணீரில் கரைத்து ஊற்றி வந்தால், காய்கள் பெரியதாக வருவதுடன், காய்கள் கசப்புத்தன்மை இருக்காது. வேர்கள் நன்கு வளர்ச்சி பெறும். 

கத்தரிக்காய் செடியிலிருந்து வரும் கத்தரிக்காய்கள் பொட்டாசியம் சத்து குறைபாட்டினால் சிறியதாக இருக்கும் போதே முற்றி விடுகிறது. கசப்புத் தன்மையோடு இருக்கிறது. மழை நாட்களில் இந்தப் பிரச்சினைகள் அதிகம் வராது. ஏனென்றால் மழை நீரிலேயே அதிக சத்துக்கள் இருக்கின்றன. இதைப் பற்றி முன்பே நான் கூறியிருந்தேன். சாம்பல் தண்ணீரில் கரைக்கும் பொழுது ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 50 கிராம் சாம்பல் தண்ணீரில் கரைத்து கத்தரிக்காய் செடிகளின் வேர்ப்பகுதியில் ஊற்றி விடலாம். அல்லது வாழைப்பழத் தோலை எடுத்துக் கொண்டோமானால், ஐந்து வாழைப்பழத்தோல் 5 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து, அந்தத் தண்ணீரை வடிகட்டி அதனோடு சம அளவு தண்ணீர் சேர்த்து செடிகளின் வேர்ப்பகுதியில் ஊற்றி வரலாம்.

தொடர் பராமரிப்பு வேலைகள்:

 த்தரிச் செடி 6 மாதம் வரை நன்றாக காய்க்கும். அதற்கு பின்னர், (காய்த்து முடிந்தவுடன்), தேவையற்ற இலைகள் கிளைகளை அகற்றிவிட்டு திரும்பவும் தேமோர் கரைசல், கடலை புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு கரைசல், செடிகளுக்கு கொடுத்துவந்தால்,  நன்கு விளைச்சல் எடுக்கலாம். கடலைப் புண்ணாக்கு கரைசல் கொடுக்கும் போது, கண்டிப்பாக வேப்பம் புண்ணாக்கும் சேர்த்து தான் கொடுக்க வேண்டும்., இல்லை என்றால் புழுக்கள், எறும்புகள் கண்டிப்பாக வரும். எனவே கடலை புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கும் கலந்த கரைசலில் நாம் செடிகளுக்கு கொடுக்க வேண்டும். இந்தக் கரைசலோடு தொழுஉரம் அல்லது மண்புழு உரம் அல்லது காய்கறி கழிவு உரம் அல்லது இலை மக்கு உரம் இவற்றில் ஏதேனும் ஒன்றை நாம் கத்திரிக்காய் செடிகளுக்கு கொடுப்பதினால் கத்தரிக்காய் செடியிலிருந்து கத்தரிக்காயில் அதிக அளவில் அறுவடை செய்யலாம்.


விதை சேகரிப்பு :


       கத்தரிச்செடியில் ஒருமுறை  விளைச்சல் எடுக்கும் போதே, கத்திரிக்காய் செடியிலிருந்து இருந்து விதைகளை சேமித்து கொள்ளலாம். அடுத்த சீசனுக்கு விதைக்க, கடைகளில் வாங்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது. உங்களுக்கு  எந்த வகையினைச் சார்ந்த, கத்தரிக்காய் மிகவும் பிடிக்கிறதோ, அதனுடைய விதைகளை சேகரித்து வைத்து ஒவ்வொரு சீசனுக்கும், அதை வைத்து பயன்பெறலாம். கத்தரிக்காய் விதைகளை சேமிக்கும் போது, கவனமாக சேமிக்க வேண்டும்., இல்லையென்றால் விதைகளை சாப்பிடும் வண்டுகள் வந்து, கத்தரிக்காய் விதைகளை சேதப்படுத்தி விடும் கத்தரிக்காய் விதைகளை சாம்பல் சேர்த்து, சேமித்து வைப்பதினால் விதைகளை சாப்பிடும் பூச்சிகளின் தொல்லையில் இருந்து, கத்தரிக்காய் விதைகளை சுலபமாக பாதுகாக்கலாம்.

நன்றி!!

இயற்கை விவசாயி!!
திரு.சுதாகர்கிருஷ்ணன்.


கத்தரிக்காய்  தாவரம் வளர்ப்பதில் இன்னும் பல அரிய தகவல்களை அறிய வேண்டுமென்றால், கீழே இருக்கும் இந்த வீடியோவை கிளிக் செய்யுங்கள்.  Post a Comment

3 Comments

 1. கத்திரி அழுகல் நோய் எப்படி சரி செய்வது என்று குழப்பத்தில் இருந்தேன் மிக்க நன்றி அண்ணா உங்கள் பதிவிற்கு.

  ReplyDelete