Brahma Kamalam
நிஷாகந்தி,Queen of the Night
"பிரம்மகமலம்" பெயரே எவ்வளவு அழகாக இருக்கிறது!! இது பிரம்மனின் நாபி கமலத்தில் இருந்து வந்ததாக சித்தர்களால் அறியப்பட்டது. அதனாலேயே பிரம்மகமலம் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்தப் பூவை வைத்திருக்கும் ஒரே கடவுள் அசாம் மாநிலத்தில் உள்ள கமாக்னி தேவி ஆகும். இந்த அற்புத மலர் மலரும் போது நாம் என்ன நினைத்து வேண்டினாலூம் அந்த எண்ணம் நிறைவேறும். இந்த மலர்களை இமாலயாவில் அதிகம் காண முடியும். ஈரப்பதம் மிகுந்த காலநிலையில் இந்த மலர் சிறப்பாக வளரும். பிரம்மகமலம் Nightqueen தென் அமெரிக்காவின் மெக்சிகோ காடுகளை பிறப்பிடமாக கொண்டது. இலங்கையில் இது "சொர்கத்தின் பூ" என்று அழைக்கப்படுகிறது. புத்தருக்கு அஞ்சலி செலுத்த விண்ணுலகினர், மண்ணுலகிற்கு பூவாக வருகிறார்கள் என அவர்கள் கருதுகின்றனர்.
ஐரோப்பாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் பெத்லகேமின் நட்சத்திரம் என்று இது கருதப்படுகிறது. இயேசு பிறந்தபோது, அவரை காண வந்த மூன்று அரசர்களுக்கு வழிகாட்டிய நட்சத்திரங்களின் குறீயீடாக அவர்கள் இதனை காணுகின்றனர்.
ஜப்பானியர்கள் தங்கள் அதிர்ஷ்ட மலர்தாவரமாக இதனை வளர்க்கின்றனர். இந்தமலர் சாதாரணமாக எல்லோரிடமும் கிடைப்பதில்லை. அதிர்ஷ்டமும் தெய்வ அருளும் கொண்டவர்களிடம் மட்டுமே கிடைக்கிறதாம்.
பிரம்மகமலம் வளர்ப்பு:
இந்த தாவரம் ஒரு இன்டோர் பிளாண்ட் போல தான். குறைந்த அளவு தண்ணீர் வெளிச்சம் இருந்தால் போதும். பிரம்மகமலம் கள்ளிச்செடி வகையைச் சார்ந்தது. இதனை பதியம் போடுவதின் {கட்டிங்ஸ்} மூலம் வளர்க்கலாம். நன்றாக வளர்ந்த செடி வருடதிற்கு ஒரே ஒரு முறை மட்டுமே பூக்கள் பூக்கும். பூக்கள் பொதுவாக, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் பூக்கும். பூக்கள் அதிக வாசனையோடு மனதை ஈர்க்கும் வல்லமை கொண்டது. வாசனை சந்தனமும் பன்னீரும் கலந்த தெய்வீக நறுமணத்தில் இருக்கும். இந்த வாசனை எட்டு ஊருக்கு வீசுமாம்.
Benzyl Salicylate என்ற வேதிப்பொருள்தான் பூவின் அதீத மணத்துக்கு காரணம். மலர் இரவில் மலர்வதால் மகரந்த சேர்க்கைக்காகவே, இவ்வளவு வாசனையை கொடுக்கிறதாம்.
ஒரு செடியிலே குறைந்தது 40 பூக்கள் பூக்கும். இரவு 12 மணிக்கு பூத்து, காலை 5- மணிக்கு சுருங்கி விடும். இதுதான் இதனுடைய சிறப்பே. ஏனெனில் பூக்கள் பொதுவாக சூரியன் வந்த பிறகு, காலையிலே பூத்து, மாலையிலே வாடிவிடும். ஆனால் பிரம்மகமலம் மலர் மாலையில் கூட அல்ல; இரவில் தான் பூக்கவே ஆரம்பிக்கும். பிரம்மகமலம் தாவரம் பார்பதற்கு ஓர்க்கிட் வகை தாவரங்களை ஒத்திருக்கும். பூக்கள் வெள்ளை நிறத்தில் பார்பதற்கு மிகமிக அழகாக இருக்கும்.
பிரம்மகமலம் தாவரத்தை நீங்கள் வளர்க்க விரும்பினால், தோட்டத்தின் நிழற்பாங்கான, ஈரப்பதம் மிகுந்த இடத்தில் வளர்க்கவேண்டும். நேரடியாக சூரிய வெளிச்சம் படாதவாறு மண் வளமான பாறை மண்ணாக இருப்பது சிறப்பானது. அதற்காக கடினமான மண்ணில் வைக்க கூடாது. தண்ணீரை உறிஞ்சி சேமித்து வைக்குமாறு மண்ணை தயார் செய்வது சிறந்தது. பிரம்மகமலத்திற்கு அதிக தண்ணீர் தேவையில்லை. அதனால் மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றினால் போதும். இந்த செடி மிக நீளமாக வளராது. இது ஒரு குறுந்தாவரம் தான். நீளமாக வளர்ந்தால், அந்த கிளையை கத்தரித்து வேறொரு தொட்டியில் வளர்க்கலாம்.
பிரம்மகமலம் தாவரத்தை வீட்டில் வளர்ப்பதால் நேர்மறை ஆற்றலும், வெற்றியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
பிரம்மகமலத்தின் மருத்துவ பயன்கள்:
இந்த தாவரம் அதிகளவு ஆக்ஸிசனை வெளியிடுகிறது. குழந்தை இல்லாத பெண்கள் பிரம்மகமல பூவினை நிழலில் உலர்த்தி பொடி செய்து சாப்பிட்டு வந்தால் குழந்தை பாக்கியம் பெறலாம். இருமல், சளிக்கு சிகிச்சை அளிப்பது முதல் பாலியியல் பிரச்சனைகள் வரை பல நோய்களுக்கும் பிரம்மகமலம் மலர் பயன்படுகிறது. தோல் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. இரத்த சுத்திகரிப்பிற்கும், கீழ்வாதம், மனநலக்கோளாறுகள், இதயம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது. பிளேக் நோய் சிகிச்சையிலும் பிரம்மகமலம் இடம் பெறுகிறது.
பாம்புகடித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது.
இருமல் மற்றும் சளி பிரச்சனைகள்:
பிரம்ம கமலம் பூவில் உள்ள ரைசோம்கள், பூக்கள் மற்றும் இலைகள் சளி மற்றும் இருமல் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. சுவாசக் குழாயில் நுண்ணுயிர்களின் பெருக்கத்தையும், அழற்சியையும் குறைக்க உதவுகிறது. ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
காய்ச்சல் குணமாக:
பாரம்பரிய மருத்துவத்தில் காய்ச்சல் தீர்க்கும் மருந்து, தயாரிக்கப்படும் கலவைகளில் பிரம்மகமலமும் இடம்பெற்றது. இதை குறித்த ஆய்வுகள் குறைவாக இருந்தாலும், ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துகொள்ளும் போது, தீவிர காய்ச்சல் குணமாகிவிடும் என்பதே ஆய்வுகள் கூறும் அறிக்கை.
கல்லீரல் சார்ந்த நோய்களுக்கு:
பிரம்ம கமலம் மலர் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், அதிக வாசனையுடன் இருந்தாலும் இயற்கையில் இந்த மலர் மிகவும் கசப்பானது. இதன்காரணமாக சிறந்த கல்லீரல் டானிக்காக விளங்குகிறது. பசியை தூண்ட உதவுகிறது. கல்லீரலில் ஏற்படும் குறைபாடுகளை நீக்குகிறது. மலரிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, கல்லீரல் அழற்சிக்கு சிகிச்சை அளிக்கவும், இரத்த ஓட்டத்தை சீராக்கவும் பயன்படுகிறது.
பாலியல் நோய்களுக்கு:
பிரம்மகமலம் மலர் பாக்டீரியாக்கள் பூஞ்சைகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு காரணிகளை கொண்டுள்ளது என ஆய்வுகள் நிருபித்துள்ளன. பாக்டிரியா காரணிகளில் ஈகோலை மற்றும் எஸ்.ஆரியஸ் போன்ற பாக்டீரியாக்களும் அடங்கும். இந்த பாக்டிரியாக்கள் மோசமான சிறுநீர்பாதை தொற்றினை ஏற்படுத்துகின்றன. பிரம்ம கமலமலர் மருத்துவம் பிறப்புறுப்பு தொற்றுநோய்களை குணபடுத்தி, பாலியல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. நோய்கிருமிகளுக்கு எதிராகவும், பால்வினை நோய்களுக்கு எதிராகவும் பிரம்மகமலம் மருத்துவ துறையில் பயன்படுத்தப்படுகிறது.
Brahma Kamalam
புண்கள் காயங்களை குணமாக்க:
காயங்கள், வீக்கம், புண்கள் இவற்றை குணமாக்க பயன்படுகிறது. பிரம்ம கமல மலரில் உள்ள கிருமிநாசினி வெட்டுகாயங்களையும் விரைவில் குணமாக்க உதவுகிறது. மலரை காயங்கள் மீது வைத்து கட்டும்போது, இரத்த கசிவு நிறுத்தபடுகிறது. தொடர் சிகிச்சையில் காயங்கள் விரைவில் ஆறுகிறது.
நரம்புக் கோளாறுகளை குணமாக்க:
பிரம்மகமல பூவில் அகோசெடின் என்ற ஃப்ளவோன் உள்ளது. இது இயற்கையான வலிப்பு எதிர்ப்பு காரணிகளை கொண்டுள்ளது. இது நரம்பு செல்களில் உள்ள தூண்டுதல்களை இயல்பாக்குவதன் மூலமாக, மூளையில் ஏற்படும் வலிப்புதாக்கங்களை குறைக்கிறது. பிரம்மகமல மலர் கைகால் பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. பிரம்ம கமலப் பூவில் ஆல்கலாய்டுகள்,{alkaloid} ஃபிளவனாய்டுகள், கிளைக்கோசைட்டுகள், சாபோனின்கள் போன்ற பலவகையான ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகள் உள்ளது. அவை அனைத்தும் நரம்பு மண்டலத்தை பராமரிக்க உதவுகின்றன.
மாதவிடாய் பிரச்சனைகள்:
மாதவிடாய் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த மருந்தாக பிரம்ம கமலமலர் திகழ்கிறது. வலிமிகுந்த மாதவிடாய், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிகமான உதிரபோக்கு மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கும் பண்புகள் இந்த பூவில் உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதற்கு பிரம்ம கமல மலரிலுள்ள ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள் காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சி முடிவு அறிவிக்கிறது.
வரம் அருளும் பிரம்மகமலம்:
நினைத்த காரியத்தை, வேண்டுதலை நிறைவேற்றும் பிரம்மகமலம் செடி. அதற்கென தனியாக வழிபாடு சடங்குகள் உள்ளது. அவ்வாறு செய்து வரும் போது, எந்த காரியமும் தடைபடாமல் நிறைவேறும்.
அதற்கு முதலில் வேருடன் கிடைக்கும் பிரம்மகமலச் செடியினை வாங்கி, உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நல்ல நாளில் நல்ல நேரத்தில் நடவு செய்ய வேண்டும். தொட்டியில் வைப்பதாக இருந்தால் , மண்தொட்டியில் நடவு செய்ய வேண்டும். பிறகு செம்பு தகட்டில் உங்கள் வேண்டுதலை எழுதி, திரவியபட்டை, சாம்பல் சேர்த்து வைத்து கட்டி, பிரம்மகமல வேர்பகுதியில் புதைத்து விட வேண்டும்.
தினமும் செடிக்கு தண்ணீர் விடும்போது, அதனுடன் சிறிது பாலும் பன்னீரும் சேர்த்து விட வேண்டும். அப்படியே வேண்டுதலையும் கூறி வந்தால், பிரம்ம கமலத்தில் பூ பூக்கும்போது, நிச்சயமாக வேண்டுதலும் நிறைவேறிவிடும். நினைத்த காரியம் நிச்சயமாக வெற்றி பெறும்.
அழிந்துவரும் மலர் இனங்களில் ஒன்றாக பிரம்மகமலமும் அடையாளம் காணப்படுகிறது. அதன் அலங்கார மதிப்பு, உயர் மருத்துவ பண்புகள் மற்றும் புராண இதிகாச முக்கியத்துவம் காரணமாகவும், சுற்றுலா பயணிகளாலும், பிரம்மகமலம் மலர் அதிகமாக விளையும் ஊர் பகுதியினை சார்ந்த மக்களாலும் அதிகம் விரும்பி பாதுகாக்கப்படுகிறது. ஆனால், அதுவும் ஓரளவு தான்.
பிரம்மகமலத்தின் வளர்ச்சி விகிதம் தற்காலங்களில் குறைந்து, இமயமலைபகுதிகளில், இருந்து கிட்டதட்ட மறைந்தேவிட்டது. மேலும் வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்பதற்காகவும், பிரம்மகமல மலரின் சட்டவிரோத கடத்தல் போன்ற பொருளாதார காரணங்களாலும் அழிவின் விளிம்பில் உள்ளது. காண்பதே அரிதாகிவிட்டது.
நன்றி!!
இயற்கைவிவசாயி,
திரு.சுதாகர்கிருஷ்ணன்.
ALSO READ
4 Comments
Sir yenakku Brahmma Kamalam plant venum sir
ReplyDeleteஇந்த செடியை நான் இது வரை பார்த்ததேயில்லை. பூ பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. நேரில் அதுவும் இரவில் பார்க்க மிகவும் தெய்வீகமாக இருக்கும் போலிருக்கிறது. இந்த செடி எங்கே கிடைக்கும்? மிக்க நன்றி சுதாகர் சார்.
ReplyDeleteSir super information
ReplyDeleteஎங்கள் ஊரான கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த வகை செடி உண்டு. நிஷாகந்தி என்று சொல்வோம்
ReplyDelete