Translate

Ranakalli Health Benefits

 Kalanchoe Pinnata (ரணகள்ளி)


Sudagarkrishnanchannels
Ranakalli Health Benefits 


          மலைபாங்கான இடங்களிலும் கிராம புறங்களிலும் எளிதாக வளரக்கூடிய தாவரம் ரணகள்ளி {bryophyllum pinnatum}. இதற்கு "கட்டிபோட்டால் குட்டிபோடும்" என்ற சிறப்புபெயரும் உள்ளது. ரணகள்ளி மூலிகையின் இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி அடிபட்ட இடங்களில் கட்டுப் போடும் பொழுது ரணம் விரைவாக குணமடைந்து விடும். ரணத்தை ஆற்றுவதில் வல்லது, எனவே ரணகள்ளி எனப் பெயர் பெற்றது. ரணகள்ளி இலைகள் பார்ப்பதற்கு மனிதரின் நாக்கு போலவும், இலையின் ஓரங்களில் சிறுசிறு வெட்டு போல காணப்படும். ரணகள்ளி மூலிகையின் மருத்துவ குணங்களில் மிக முக்கியமான ஒன்று சிறுநீரக கல்லை கரைக்க உதவுகின்றது. இது எல்லோரும் அறிந்த ஒரு மருத்துவ குணம் தான். ஆனால் ரணகள்ளி மூலிகையில் இதையும் விட, அதிகமான மருத்துவ பயன்கள் உள்ளது. அதனை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். இந்த கட்டுரையை படித்து முடித்த பிறகு, நிச்சயமாக ரணகள்ளி செடியை தேடிப்பிடித்து உங்கள் தோட்டத்தில் வளர்க்க ஆரம்பித்துவிடுவீர்கள். ஒரு மருத்துவர் நம்மோடு எப்போதும் இருப்பதை போல ஆயிரம் நோய்களை தீர்க்கும் அற்புத மூலிகை ரணகள்ளி. தாமதிக்காமல் கட்டுரைக்குள் பயணிப்போம். வாருங்கள்!!

சர்க்கரை நோயை தீர்க்கும்:


       ரணகள்ளி மூலிகையின் இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வாழ்நாளில் சர்க்கரை நோய் நம்முடைய பக்கம் எட்டி பார்க்காது. சர்க்கரை நோய் பாதிப்புக்கள் எந்த அளவில் இருந்தாலும், நோயின் வீரிய தன்மையை கட்டுக்குள் கொண்டுவரும் ஆற்றல் ரணகள்ளி மூலிகைக்கு உள்ளது.

சிறுநீரகக்கல்லை கரைக்கும்:

  
  சிறுநீரகங்களை சித்த மருத்துவத்தில் "அரச உறுப்பு" என்றே குறிப்பிடுவார்கள். ஏனெனில் சிறுநீரகங்கள் இரத்தத்தை சுத்திகரித்து தேவையற்ற கழிகளை பிரித்து உடலிலிருந்து வெளியேற்றும் மிக முக்கிய பணியை மேற்கொள்கிறது. சிறுநீரகத்தில் கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு தான் தெரியும் அந்த வலியின் கொடுமை. தற்கொலை செய்து கொள்ள தூண்டுகின்ற அளவிற்கு வலி இருக்கும். மிகமிக கொடுமையானது அது.  உடனே ஆபரேஷன் செய்து அகற்றாவிட்டால் சிறுநீர்தொற்று, சிறுநீர்பாதை எரிச்சல் என மேலும் பல பக்க நோய்களின் பாதிப்புகளும் ஏற்படும். ரணகள்ளி மூலிகையின் இலைகள் சிறுநீரகத்தில் எவ்வளவு பெரிய கல் இருந்தாலும் ஏழே நாட்களில் குணப்படுத்தும். மூலிகையின் இலைகளை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதுவரை சாப்பிட்டு பழக்கமில்லாதவர்கள் சிறிய இலையை சாப்பிட்ட ஆரம்பித்து, இலையின் அளவை கொஞ்சம்கொஞ்சமாக அதிகரித்து ஏழு நாட்களும் ரணகள்ளி இலையை சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டு வரும் போது, சிறுநீரகக் கல்லை சிறுசிறு துகள்களாக  உடைத்து சிறுநீர் வழியே வலியே இன்றி வெளியேற்றும்.
இவ்வாறு ரணகள்ளி மூலிகையின் இலைகளை மருந்தாக எடுத்துக்கொள்ளும் தினங்களில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும், இறைச்சி மீன், முட்டை போன்ற உணவுகளையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.


காதுவலி:

  காதுவலிக்கு ரணகள்ளி மூலிகையின் இலைகளை கசக்கி காதில் இரண்டு சொட்டுகள் விட, காது வலி உடனே குணமாகும். காது சொட்டு மருந்துகள் தயாரிக்க சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைகளில் ரணகள்ளி முக்கிய இடம் வகிக்கிறது.

மலச்சிக்கல்:

     ரணகள்ளி இலையை கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை பவுடர் மலச்சிக்கலை குணமாக்குகிறது. சரிமான பிரச்சனைகளையும் குணமாக்குகிறது.


Sudagarkrishnanchannels
Ranakalli Health benefits 


புண்கள் வெட்டுக்காயங்கள்
:

    ரணகள்ளி மூலிகை இலைகளை நன்றாக மைய அரைத்து வெற்றிலையோடு சேர்த்து, புண்கள் காயங்கள் கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட, வலி உடனடியாக குறைந்து, காயம் விரைவில் குணமடையும்.

முடிவளர்ச்சி:

      இளநரை மற்றும் முடி கொட்டுதல் பிரச்சனைகளுக்கு  சிறந்த மருந்தாக பயன்படுகிறது. நரைமுடி வராமல் தடுக்கிறது. ரணகள்ளி மூலிகை இலைச்சாற்றிலிருந்து பெறப்படும் தைலம் முடிவளர்ச்சியை அதிகரிக்கிறது. நரைமுடியை சரிசெய்வதுடன், கருகருவென, அடர்த்தியாக முடிவளர உதவுகிறது.

கருப்பை கோளாறுகள்:


      பெண்களுக்கு ஏற்படும் கர்பப்பை கோளாறுகள் குணமாக்கவல்லது. கர்ப்ப்பை பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையோடு, சரியான முறையில் மருந்தாக எடுத்துக் கொள்ளும் போது சிறந்த பலனைத் தருகிறது.


தேள்கடிக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.





Watch this video to know more about the benefits of Ranakalli herb   👇
 



                  இரணகள்ளி மூலிகை, இலைகளிலே தண்ணீரை சேமித்து வைத்திருக்கும் தாவரம். Succulent Plants வகையைச் சார்ந்தது. காற்றிலுள்ள ஈரப்பதத்திலிருந்து தண்ணீரை எடுத்துக்கொண்டு உயிர்வாழும். இரணகள்ளி இரண்டடி முதல் நான்கு அடி வரை மட்டுமே வளரும் தாவரம். விதையில்லாமல் வளரக்கூடிய தாவரம். இலையின் ஓரங்களிலிருந்து புதிய கணுக்கள் உருவாகி புதிய செடிகள் உருவாகின்றது. பெரிய பராமரிப்பு இல்லாமல் சுலபமாக வளர்க்க கூடிய தாவரம். கடவுளின் படைப்பில் இயற்கையின் அழகை பாருங்கள். வியந்து போய்விடுவோம். பொதுவாக மூலிகை செடிகள் பெரும்பாலானவை பராமரிப்பு, பூச்சி தாக்குதல், செறிவான உரங்களுக்கு அப்பாற்பட்டவை. வேலிகளிலும் குளத்தின் ஓரங்களிலும், நடைபாதைகளிலும் சுலபமாக வளர்ந்து கிடக்கும்.




நன்றி!!

அன்புடன்.,
இயற்கைவிவசாயி!!
திரு.சுதாகர்கிருஷ்ணன்.











ALSO READ:







Post a Comment

0 Comments