Translate

Ashwagandha { அஸ்வகந்தா }

 அஸ்வகந்தா மூலிகையின் நன்மைகள்

Sudagarkrishnanchannels
Health Benefits of Ashwagandha 

Withania somnifera, அமுக்கிரா கிழங்கு, இருளிச்செவி, வராக கர்ணி, அசுவம், அமுக்கிரி


அஸ்வகந்தா மூலிகை மிகவும் பிரபலமான, அதிக நன்மைகளை கொண்ட மூலிகையாகும். நம் நாட்டின் ஆயுர்வேத சிகிச்சையில், காலம்காலமாக { 6000 ஆண்டுகளுக்கும் மேலாக } பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய மூலிகையாகும். அஸ்வகந்தா தாவரம், 150 முதல் 170 cm உயரம் வளரக்கூடியது. முட்டை வடிவ இலைகளை கொண்டது. இலைகளின் மேற்பரப்பில், மெல்லிய ரோம வளரிகள் காணப்படும். இச்செடியானது, சிவப்பு நிறத்தில் சிறிய காய்களை கொண்டிருக்கும்.

அஸ்வகந்தா என்ற வார்த்தை சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. இதற்கு குதிரை மற்றும் வாசனை என்பது பொருள். அஸ்வகந்தா மூலிகையின் நறுமணத்தையும், சக்தியையும் குறிப்பிடும் விதத்தில் இப்பெயர் பெற்றது. இதன் இலையை அரைத்து கட்டிகளின் மீது பூசினால், கட்டிகளை அமுக்கிவிடும். அதனால் இதனை தமிழில் "அமுக்கிரா" என அழைக்கின்றனர்.

அமுக்கிரா கிழங்கில் இரண்டு வகை உள்ளது. சீமை அமுக்கரா, நாட்டு அமுக்கரா. 

  • நாட்டு அமுக்குரா - பார்பதற்கு உருண்டையாகவும், தடிமணாகவும் இருக்கும்.
  • சீமை அமுக்கரா - பார்பதற்கு குச்சிகுச்சியாக இருக்கும். இதில் தான் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கிறது. சீமை அமுக்கிரா உள்ளுக்கு தருகிற மருத்துவத்திலும், நாட்டு அமுக்கிரா வெளிபூச்சாக தருகிற மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.


இன்றைய பதிவில் அஸ்வகந்தா மூலிகையின் பயன்களையும், பக்க விளைவுகளையும் தெரிந்து கொள்ளலாம். 


அஸ்வகந்தாவின் நன்மைகள்:

  அஸ்வகந்தாவிற்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. அது பல நோய்களிலிருந்து நம்முடைய உடலை பாதுகாக்கிறது. அஸ்வகந்தா வேர்கள், பழங்கள், இலைகள் என தாவரத்தின் பல்வேறு பகுதிகள் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அஸ்வகந்தா பொடி, மாத்திரைகள், சூரணம் என, பலவகையில் அஸ்வகந்தா மூலிகை, கடைகளில் விற்பனைக்கு கிடைக்கின்றன. அஸ்வகந்தா பல நோய்களை குணபடுத்துவது மட்டுமின்றி, மன ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.  

  • ஜலதோஷம், இருமல் போன்ற தொற்றுகளை எளிதில் குணபடுத்தும். குறிப்பாக பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சலை உடனடியாக குணபடுத்தும் எக்ஸ்பர்ட் அஸ்வகந்தா மூலிகை.
  • அஸ்வகந்தா பொடியை பாலில் கலந்து இரவில் குடித்தால், மனம் நிம்மதியடைந்து நல்ல உறக்கம் வரும். மன அழுத்தமும் குறையும். 


இரத்த சர்க்கரை, கொழுப்புக்களை குறைக்க உதவுகிறது:

    ஸ்வகந்தா நீரிழவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும். இது இன்சுலின் சுரப்பை அதிகரிக்கவும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. இரத்த குளுக்கோஸ் மற்றும் லிப்பிட் அளவுகளை கட்டுக்குள் வைக்க உதவுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றது. டைப் 2 நீரிழிவு மருத்துகளின் பண்புகள் அஸ்வகந்தாவில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆயுர்வேத சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கான மருத்துவத்தில் அஸ்வகந்தா இடம்பெற்றுள்ளது.

அஸ்வகந்தாவில் ஆன்ட்டி ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளது. இது ரத்தத்தில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. உடல் எடை அதிகரிப்பதையும் கட்டுக்குள் வைக்கிறது.

நினைவாற்றலை அதிகரிக்கிறது:

   அஸ்வகந்தா ஞாபகதிறனையும், புத்தி கூர்மையையும் அதிகரிக்க உதவுகிறது.  2017-இல் நேஷனல் லைப்ரரி ஆப் மெடிசினில் நடத்தப்பெற்ற ஆய்வுகள் இதனை உறுதிபடுத்தியுள்ளது. இந்த ஆய்வில் பங்கு பெற்ற மாணவர்களின் கவனத்தையும், உற்று நோக்கும் திறனையும் , நினைவாற்றலையும் அதிகரித்ததுள்ளது. அஸ்வகந்தா பொடியை எடுத்துக்கொள்வதன் மூலம் மூளை நரம்புகள் பலம் பெற்று, புத்தி கூர்மையும், ஞாபகதிறனும் அதிகரிக்கிறது.

  இதயத்தை பலப்படுத்துகிறது:

      அஸ்வகந்தா பொடி கலந்த, தேநீர் அருந்தி வருவதன் மூலம், இதயத்தில் தமனிகளில் ரத்தக் குழாய் அடைப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் ஆயுர்வேதம் நடத்திய ஆய்வுகளில், அஸ்வகந்தா மூலிகை VO2 அளவினை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. விஓ2 என்பது மிக உயர்ந்த அளவிலான ஆக்ஸிஜனாகும். எனவே அதிக உடல் உழைப்பு, வேலை பளுவின் போது, இதயம் நுரையீரல், தசைகளுக்கு தேவையான ஆக்ஸிஷனை தடை இன்றி, வேகமாகவும் சிறந்த முறையிலும் கொண்டு செல்லும் பணியை அஸ்வகந்தா செய்கிறது. எனவே இதயத்திற்கும் உடலிற்கும் சிறந்த ஆரோக்கியத்தை அளிக்கிறது.


கொரானாவிற்கு மருந்தாகிறது அஸ்வகந்தா:

இது 2020 மேமாத விகடன் இதழில் வெளியான தகவல்.

  

அஸ்வகந்தாவில் கொரனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் ஆன்டி வைரல் தன்மை இருக்கிறது. அதனால் அஸ்வகந்தாவை கொரனா சிகிச்சைகான மருந்திலும், கொரனா ஏற்படாமல் தடுக்கும் தடுப்பூசி மருந்திலும் பயன்படுத்தலாம் என்று டெல்லி ஐஐடி ஆராய்ச்சியாளர்களும், ஜப்பானின் நேஷனல் இன்ஸ்டியுட் ஆப் அட்வாண்ஸ்ட் இன்டஸ்ரியல் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி, ஆராய்ச்சியாளர்களும் இணைந்து தங்கள் ஆய்வு முடிவை அறிவித்திருக்கிறார்கள். எனவே அஸ்வகந்தாவில் கொரானா நோய் எதிர்பாற்றலை உடம்பிற்கு கொடுக்கும் காரணிகள் உள்ளது என்பது உறுதி.


சருமம், தலைமுடி உதிர்வு பிரச்சனைகள்:

  தோல் தொடர்பான பிரச்சனைகளை குணமாக்க அஸ்வகந்தா மருந்தாகிறது. இது சருமத்தில் உள்ள கொலஜேன் அளவை அதிகரிக்கிறது. இதனால் தோல் புத்துயிர் பெறுகிறது. 

மெலனின் இழப்பிலிருந்து முடியை பாதுகாத்து, முடி வேர்களை பலப்படுத்துகிறது. தலைமுடி உதிர்வு, இளநரை பிரச்சனைகளையும் சரிசெய்கிறது.

  

  

Sudagarkrishnanchannels
Health Benefits of Ashwagandha 

  அமுக்கிறா கிழங்குடன் சமமாக தோல் நீக்கிய சுக்கை வெந்நீர் விட்டு அரைத்து, வீக்கங்கள், கட்டிகள் மீது பற்று போட, விரைவில் வீக்கங்கள் வற்றி குணமடையும்.


அஸ்வகந்தா தடகள வீரர்கள், விளையாட்டு வீரர்களுக்கு அதிக சக்தியை அளிக்கிறது.

அஸ்வகந்தாவை தவறாமல் பயன்படுத்தும்போது, புற்றுநோய் காரணிகளை அழிக்கிறது. புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.


தைராய்டு சிகிச்சையில் அஸ்வகந்தா முக்கிய பங்கு வகிக்கிறது. உணவில் அஸ்வகந்தா எடுத்து கொள்வதன் மூலம், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்தலாம். மேலும் தைராய்டு தொடர்புடைய நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.


கண்புரைக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

விந்து உற்பத்தி அதிகரிக்க:

      அஸ்வகந்தா சூரணம் என்றதுமே, அது ஆண்களுக்கானது என்பதே பொதுவான எண்ணம். அந்தளவிற்கு அஸ்வகந்தா பயன்பாடு ஆண்களுக்கு அதிக நன்மைகளை கொடுக்கிறது. குதிரை போல உடல் வலிமையையும் திறனையும் கொடுக்கிறது. உடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்றி, உடலின் வெப்பத்தை தணித்து உடலுக்கு அழகையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.


அமுக்கிறா கிழங்கு, பூனைகாலி விதைகள் இவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து, பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர, நரம்புகள் நல்ல முறுக்கேறி, உடல் தளர்ச்சிகள் நீங்கும். ஆண்மை அதிகரிக்கும். விந்தணு குறைபாடுகள் நீங்கி, விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.

  • அமுக்கிறா - 50 கிராம்
  • நெருஞ்சி முள் - 50 கிராம்
  • ஜாதிக்காய் - 50 கிராம்
  • நீர்முள்ளி விதை -100கிராம்
  • பூனைகாலி விதைகள் - 150 கிராம்
  • ஓரிதழ் தாமரை -200 கிராம்

இவைகளை காய வைத்து பொடி செய்து, காலை மாலை  பாசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர, ஆண்மை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும். குறிப்பாக ஆண் குறியின் தளர்வை நீக்கி, ஆண் குறிக்கு வலிமை தந்து, உடலறவில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. ஆனால் இந்த சூரணத்தை தகுந்த அளவில், மருத்துவரின் ஆலோசனை பெற்று பயன்படுத்த வேண்டும்.

இடுப்புவலி, மூட்டுவலி , கைகால் வலிகளுக்கு:

 அமுக்கிறா கிழங்கை நீர் விட்டு பச்சையாக அரைத்து , கொதிக்க வைத்து, தைலம் பதத்திற்கு எடுத்து கொள்ள வேண்டும். இந்தத் தைலத்தை இடுப்பு வலி, மூட்டு வலி, கை கால் வலிகள், வீக்கம் இதன் மீது பற்று போல போட்டு வர உடனடியாக வலியும், வீக்கமும் குறைந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

அமுக்கிரா கிழங்கு உடன் தோல் சீவிய சுக்கு சேர்த்து அரைத்து பற்று போட மூட்டு வலிகள் குறையும்.


Sudagarkrishnanchannels
Health Benefits of Ashwagandha 


அஸ்வகந்தாவினால் ஏற்படும் பக்கவிளைவுகள்:

     அஸ்வகந்தாவில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், இதனால் சில பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது, என்பதை மறுக்க இயலாது. 

  • உயர் இரத்த அழுத்தம், பிபி நோயால் பாதிக்கபட்டவர்கள், அஸ்வகந்தாவை எடுத்துக்கொள்ளும் முன்னர், மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும். இது தவிற, பிபி குறைவாக உள்ளவர்கள் அஸ்வகந்தாவை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • அஸ்வகந்தாவை அதிகமாக உட்கொள்ளும் போது வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
  • தூக்கமின்மை பிரச்சனையை போக்க அஸ்வகந்தா பயன்படுகிறது. ஆனால் அதனை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் பொழுது நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்படுகிறது.
  • அஸ்வகந்தாவை சரியான நோய்க்கு சரியான அளவில் பயன்படுத்தாமல், அதிகமாக பயன்படுத்தினால் வாந்தி, குமட்டல், அலர்ஜி போன்ற பிரச்சினைகளும ஏற்படுகிறது.
  • நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், அஸ்வகந்தாவை திடீரென எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஆங்கில மருந்துகள், அஸ்வகந்தா இதன் கலவை ரத்தத்தின் அளவை குறைத்துவிடும். அதனால் மருத்துவரின் ஆலோசனை பெற்று பயன்படுத்த வேண்டும்.
  • அஸ்வகந்தா அதிகமாக எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு, உடல் வலி சோர்வு தலைவலி மயக்கம் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.



நன்றி!! 


இயற்கைவிவசாயி,
திரு.சுதாகர்கிருஷ்ணன்.

Post a Comment

1 Comments

  1. சகோதரா இந்த செடி அல்லது இதன் விதை கிடைக்குமா?

    ReplyDelete