Translate

மாவு பூச்சிகளை அழிப்பது எப்படி?

மாவு பூச்சியை (Mealy bugs) கட்டுபடுத்த  இயற்கை வழிமுறைகள்



மாவு பூச்சி/Mealy bugs,  உலகின் அனைத்து பகுதிகளிலும் மாவு பூச்சிகள் உள்ளது என்றாலும், வெப்ப மண்டல பகுதிகளில் அதிகமாக வசிக்கின்றது. ஆண் பூச்சிகள் இறக்கைகள் உடையதாய் இருக்கும். பெண் பூச்சிகள் நகர முடியாதவை. பெண் பூச்சிகள் தான் செடியின் சாறை உறிஞ்சி விடுகிறது. மாவு பூச்சிகள் அதிகம் தாக்கப்பட்ட செடிகள் நாளடைவில் இறந்துவிடுகின்றது. மாவு பூச்சிகள் ஆர்டிக் அண்டார்டிகாவில் அதிகம் காணப்படுவதில்லை. தாவரங்களின் பிளவுகள், வேர்கள் பழங்களின் அடிப்பகுதியிலிருந்து சாறுகளை எடுத்துக்கொள்கிறது. தாவரங்களிலிருந்து சாறை எடுக்கும்போது தன்னை பாதுகாத்துக்கொள்ள மாவினை போல திரவத்தை சுரக்கிறது. அந்த திரவத்தினை தன்னுடைய கேடயமாக பயன்படுத்திக் கொள்கிறது. மாவு பூச்சி தாக்கிய தண்டுகள், ஒருவித மாவு போல காட்சியளிக்கும். மாவுபூச்சிகளிலிருந்து  வெளியிடப்படும் கழிவுகளை உண்பதற்காக எறும்புகள் செடிக்கு படை எடுத்து வருகிறது. எறும்புகள் தான் மாவுப்பூச்சியை ஒரு செடியிலிருந்து இன்னொரு செடிக்கு கொண்டு செல்கிறது.


sudagarkrishnanchannels
Mealy bugs 


மாடித்தோட்டத்தில்   மாவுப்பூச்சியை  கட்டுப்படுத்த வழிகள்:

மாவு பூச்சிகள் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால், அது தோட்டம் முழுவதும் பரவி எல்லா செடிகளையும் பாதித்துவிடும். மாவுப்பூச்சியை கட்டுப்படுத்துவதற்கு சுலபமான வழி தண்ணீர்தான். தண்ணீர் மாவுபூச்சிகளுக்கு ஆகாதது. மாவு பூச்சிகளை கட்டுபடுத்த உள்ள வழிகளில் சுலபமான எளிமையான சிலவற்றை  இங்கு காணலாம்.

வழிமுறை/METHOD -1


 பிரிட்ஜில் வைத்து குளிரூட்டப்பட்ட நீரை எடுத்துக் கொள்ளுங்கள். மாவுபூச்சிகள் இருக்கும் இலைகளின் மீது இந்த தண்ணீரை வேகமாக சிறந்த ஸ்பிரேயரை கொண்டு, பீய்ச்சி அடியுங்கள். மாவுப்பூச்சிகள் எல்லாமே கீழே கொட்டி விடும் 98% சதவீகிதம் மாவுப்பூச்சி இதில் இருந்து கீழே கொட்டி விடும். திரும்பவும்  பூச்சிகள் செடிக்கு வராது. காலை அல்லது மாலை நேரத்தில் செய்ய வேண்டும். பின்னர் வேப்பெண்ணெய் 1-லிட்டர் தண்ணீரில் 2-மில்லி லிட்டர் வேப்பெண்ணெய்  0.5 மில்லி லிட்டர்  சோப்புக் கரைசலுடன் கலந்து செடியின் மீது தொடர்ந்து ஸ்பிரே செய்து வாருங்கள். இதனை நீங்கள் தொடர்ந்து பின்பற்றினாலே போதும். நாளடைவில் உங்கள் தோட்டத்தில் மாவு பூச்சிகள் தொல்லையே இருக்காது.

வழிமுறை/ METHOD -2

மைதா மாவு கரைசல்.
வீட்டின் சமையலறையில் கிடைக்கும்  எளிமையான பொருள். சுலபமான செலவில்லாத இயற்கை வழியாகும்- மாவு பூச்சிகளை விரட்ட. நல்ல வெப்பமான மதிய நேரத்தில், மாவு கரைசலை  செடிகளின் மீது பயன்படுத்த (ஸ்பிரே செய்ய) வேண்டும். மைதாமாவு 50-கிராம் 1-லிட்டர் தண்ணீரில் கலந்து, 2-மணிநேரம் ஊற விடுங்கள். பின்னர் அதனை வடிகட்டி,  ஸ்பிரேயரில் எடுத்து, ஸ்பிரே செய்ய வேண்டும். மைதாமாவு கரைசல் மாவுப்பூச்சிகள் மீது பட்டு காய்ந்து விடுகிறது. மாவு பூச்சிக்கு பாதுகாப்பாக உள்ள/ கேடயமாக உள்ள அதனுடைய மேலுறை பாதிக்கப்படுகிறது. எனவே மாவுப்பூச்சிகள் இறந்து  விடுகிறது.  பின்னர் தண்ணீரை வேகமாக மாவு பூச்சிகளின் மீது பீச்சி அடிக்கும் போது மாவு பூச்சிகள் எல்லாம் கீழே உதிர்ந்துவிடும். இது மிகவும் சுலபமான  வழிமுறையாகும்.  மைதா மாவு கரைசலை மாவு பூச்சிகளுக்கு பயன்படுத்துவது, குறித்து நான் வீடியோ ஒன்றை சேனலில் பதிவிட்டிருக்கிறேன். காணொளியை பாருங்கள். உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

வழிமுறை/ METHOD -3

மூன்றாவது வழிமுறையில் நாம் பார்க்க போவது உயிருள்ள பூஞ்சையை பற்றி யது. வெட்டிசினியம் லெக்கானி  பூஞ்சை. இந்த பூஞ்சை பூச்சி விரட்டியை பயன்படுத்துவது சுலபமானது. 1-லிட்டர் அளவிற்க்கு  10 மில்லி லிட்டர் வீதம் கலந்து தோட்டத்தில் செடிகளின் மீது தெளித்து விடுங்கள். வெட்டிசினியம்  நன்மை செய்யும் பூஞ்சையாகும். மாவு பூச்சிகளுக்கு  சிறந்த எதிரி.  இருபது நாளில் பூஞ்சைகள் நமது தோட்டத்தில் பரவி மாவு பூச்சிகளை காலி செய்துவிடுகிறது.  மிகவும் சுலபமான எளிய வழி.  மேற்கூறியவற்றை செய்ய இயலாதவர்கள் இந்த முறையை முயற்சி செய்து பார்க்கலாம்.  வெட்டிசினியம் பூஞ்சை ஆன்லைனில் சுலபமாக கிடைக்கிறது .


வழிமுறை METHOD -4

இந்த வழிமுறைக்கு எந்த செலவும் இல்லை. வீட்டில் கிடைக்கக்கூடிய தேவை இல்லாத ஒரு பொருளே இதற்கு போதுமானது. மீதம் ஆன வெள்ளை சோறு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளை சோற்றினை 1-லிட்டர் தண்ணீர் உள்ள பாட்டிலில் போட்டு மூடி விடுங்கள். பாட்டிலை குறைந்தது ஐந்திலிருந்து ஏழு நாட்கள் வரை நிழற்பாங்கான  இடத்தில் வைத்து விடுங்கள். தண்ணீரை தினமும் காலையும் மாலையும் குளிக்கி விடுங்கள். பின்னர் சோறு ஊற வைத்த தண்ணீரை வடிகட்டி மாவுப்பூச்சிகள் மீது வேகமாக பீச்சி அடிக்கும்போது மாவுப்பூச்சியை அழிக்கும் சிறந்த கரைசலாக இது விளங்குகிறது. மாவு பூச்சிகளை அழிப்பது சுலபமான காரியம் தான். ஆரம்பத்திலே பார்த்து அழித்துவிடுவதே சிறந்தது. இல்லையென்றால் தோட்டம் முழுவதும் பரவி தொல்லை கொடுக்கும். 1-லிட்டருக்கு ஒன்பது மடங்கு தண்ணீர் கலந்து செடிகளின் இலைகள் மீது தெளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்யலாம். பின்னர் குளிர்ந்த தண்ணீர் அல்லது வேப்ப எண்ணெய் தெளிக்கலாம். வெள்ளை சோற்றினை 7-நாட்கள் வரை ஊறவைப்பதால், கரைசலில் அமிலத்தன்மை உருவாகிவிடுகிறது. அமிலதன்மை நிறைந்த கரைசல் என்பதால் மாவு பூச்சிகளை சுலபமாக அழிக்க இயல்கிறது. மாவு பூச்சிகள் மட்டுமில்லாமல் பிற பூச்சிகள், புழுக்களையும் கூட பழைய சாதம்  கரைசல்  கட்டுபடுத்துகிறது. இதனை வேர்கள் வழியாக, வளர்ச்சி ஊக்கியாகவும் செடிகளுக்கு பயன்படுத்தலாம்.


sudagarkrishnanchannels
Mealy bugs 
 
இனி மாவுபூச்சிகளை கண்டு கலக்கமடைய தேவை இல்லை. மாவு பூச்சிகளை கட்டுபடுத்த இயற்கை வழிகளை தெளிவாக இந்த பதிவில் தெரிந்து கொண்டிருப்பீர்கள். பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்


நன்றி!

Post a Comment

0 Comments