Translate

Madagascar Periwinkle (நித்திய கல்யாணி)

 நித்திய கல்யாணி வளர்ப்பு மற்றும் பயன்கள்

Sudagarkrishnanchannels
Nithya kalyani 

Catharanthus  roseus, bright eyes, Cape periwinkle, graveyard plant, Madagascar periwinkle, old maid, pink periwinkle, rose periwinkle

நித்தியக் கல்யாணி, நயனதாரா, பட்டிப்பூ, சுடுகாட்டு பூ

   


  மடகாஸ்கரில் மட்டுமே காணப்பட்ட இந்தச் செடி பின்னர் வெப்பமண்டல பகுதிகளுக்கும் மென் வெப்பமண்டல பகுதிகளுக்கும் பரவியது. இச்செடியின் பூக்கள் வெள்ளை நிறத்திலோ, இளஞ்சிவப்பு நிறத்திலும் காணப்படும். பூவிதழ்கள் கூடும் நடுப்பகுதியில் அடர்ந்த சிவப்பு நிறமாகக் காணப்படும்.

ந்தச் செடி ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வளரும். இரு மாதங்களில் 60 முதல் 80 சென்டி மீட்டர் உயரம் வளரும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் 2.5 - 9 சென்டிமீட்டர் நீளமும், 1- 3.5 சென்டிமீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். அகலமான இந்த இலைகளின் மேல் பரப்பு பளபளப்பாக இருக்கும். இலைகள் எதிரெதிராக அமைந்திருக்கும். இலைக்காம்பு 1-1.8 சென்டி மீட்டர் நீளம் இருக்கும். இலையின் நடு நரம்பு வெளிறிய பச்சை நிறத்தில் இருக்கும். இதன் இலைகள் மிகவும் கசப்பாக இருப்பதால் ஆடுமாடுகள் இதனை உட்கொள்வதில்லை.

நித்தியகல்யாணி தாவரம் எல்லா காலங்களிலும், எல்லா தட்ப வெப்பநிலையிலும் நன்றாக வளரும். இந்தியாவின் பல பகுதிகளில் பெருமளவு பயிர் செய்யப்படுகிறது. பின்பு மருந்து தயாரிப்பதற்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நீரின்றி அமையாது உலகு என்பதைப்போல பூவின்றி ஒருநாளும் இருக்காது நித்தியக்கல்யாணி என்பார்கள். இரவில் ஒரு பூ உதிர்ந்தால் கூட, அதற்கு ஈடாக மற்றொரு பூ காலைக்குள் பூத்து விடும். அதனால் தான் நித்தியமும் {தினமும்} பூத்துவிடும் கல்யாணி {மணப்பெண்} என பெயர் பெற்றது

மருத்துவ பயன்கள்:

 வரலாற்று காலம் தொட்டே நித்தியகல்யாணி பலவித நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்து இருக்கின்றனர். பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதற்காக பயன்படுத்தி வந்துள்ளனர்நித்திய கல்யாணியின் இலைகள், பூக்கள், வேர்கள், தண்டுகள் என அனைத்து பாகங்களும் மிகுந்த மருத்துவப் பயன்கள் கொண்டது. நீரிழிவு, சிறுநீர்த்தாரை, ரத்த புற்றுநோய், மன நோய்கள், ரத்த அழுத்தம், மாதவிடாயின் போது ஏற்படும் வலிகள், மாதவிடாய் தொடர்பான நோய்கள் போன்றவற்றை குணமாக்கவும், அழகுசாதன பொருட்கள் தயாரிப்பிலும் நித்தியகல்யாணி பயன்படுகிறது. நூற்றுக்கும் மேலான மருத்துவ வேதிப் பொருட்களை உள்ளடக்கியது நித்திய கல்யாணி தாவரம்.

பாரம்பரிய மருத்துவத்தில் தன்னிகரற்ற நாடான சீனாவில், இந்த மூலிகை தாவரத்திற்கு என்று, அவர்களின் மூலிகை மருத்துவத்தில், மிகப் பெரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

புற்றுநோய்க்கு மருந்தாகிறது:


    நித்திய கல்யாணி தாவரத்திலிருந்து சர்க்கரைநோய், இரத்த புற்றுநோய் போன்ற பல நோய்களுக்கான மருந்துகள் பிரித்து எடுக்கப்படுகிறது. குறிப்பாக வின்பிளாசிட்டின், வின்க்கிரிஸ்ட்டின் போன்ற புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட, உயிர் வேதிப் பொருள்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலும் மேலை நாடுகளிலும் இதற்கான ஆய்வுகள் நடைபெறுகின்றன. நித்தியகல்யாணி செடியினை நேரடியாக உட்கொள்வது தீவிர நச்சுத்தன்மை உடலில் உண்டாகும்.


சிறந்த காற்று சுத்திரிப்பான்:


   நித்தியகல்யாணி செடி நம் சுற்றுச்சூழலில் உள்ள கார்பன் டை ஆக்சைடை தனக்குள்ளே உட்கிரகித்துக் கொண்டு, 100 சதவீதம் ஆக்சிஜனை நமக்கு தருகிறது. ஆகவே இதனை தாராளமாக நம் வீட்டில் வைத்து வளர்க்கலாம். அடுக்கு மாடி குடியிருப்புகளில் (அப்பார்ட்மெண்ட் வீடுகளில்) இருப்பவர்கள் இந்த வகையான செடிகளை வளர்த்து வந்தால், உங்களுக்கு சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும். இப்பொழுது தண்ணீரிலும் கூட இந்த செடியை வளர்க்கிறார்கள்.


நீரிழிவுக்கு மருந்தாகிறது:


  சித்த மருத்துவத்தில், நீரிழிவு நோய்க்கு மருந்தாக நித்தியகல்யாணி பூக்கள் பயன்படுத்தப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள், இதன் வேர் சூரணம், ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து இரண்டு  மூன்று முறை உட்கொண்டால் சிறுநீர்ச் சர்க்கரை குறைந்து, நோய் கட்டுப்படும்.

 நித்திய கல்யாணியின் பூக்களை தேவையான அளவு தண்ணீரில் போட்டு காய்ச்சி கால் பங்கு அளவிற்கு வற்றி வரும் பொழுது அதனை வடிகட்டி ஒரு நாளைக்கு 4 வேளை வீதம் எடுத்து வந்தால், அதிக தாகம், அதிக சிறுநீர்ப் போக்கு, அதனால் ஏற்படும் உடல் பலவீனம் சரியாகும். அதிக பசி என்றாலும், பசியின்மையும் தீரும்.  நீரிழிவுக்கு இதன் வேர் பொடியை தினமும் அரை ஸ்பூன் வெந்நீரில் கலந்து எடுத்து வர வேண்டும். மலரை கஷாயம் போட்டு குடித்து வரலாம்.Sudagarkrishnanchannels
Nithya kalyani 


சிறுநீர் தாரை நோய்கள் குணமாக:

 நித்தியகல்யாணி பூக்களை கஷாயம் செய்து தினமும் நான்கு வேளைகள் 25 மில்லி அளவு எடுத்து வர நோய் விரைவில் குணமாகும். நித்திய கல்யாணி வேரை, காய வைத்து பொடி செய்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு, வெந்நீர் குடித்து வர சிறுநீர் தாரை தொடர்பான நோய்கள் அனைத்தும் குணமடையும்.


 •  உடல் அசதி குணமாக நித்யகல்யாணி பூக்களை தண்ணீரில் இட்டு, பாதியாக சுண்ட காய்ச்சி குடித்து வரலாம்.
இன்றும் கிராமங்களில், இதன் இலைச்சாற்றை எடுத்து, வண்டு கடிகளுக்கு மேற் பூச்சாகப் பயன்படுத்துவது உண்டு.
 ஹவாய் தீவுகளை சார்ந்த மக்கள் நித்தியகல்யாணி இலைகளை வதக்கி பசையாக செய்து, இரத்த கசிவை நிறுத்த பயன்படுத்துவர்.

நித்தியகல்யாணி வேருடன், மிளகு சீரகம் சேர்த்து நீர் விட்டு அரைத்து தேநீராக்கி பருகுவதால், பல் வலி, உடல் வலி ஆகியன நீங்கும்.

நித்திய கல்யாணி பூக்கள், இலைகள்,  மாதுளை தோல் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு அதனை, அரை டம்ளராக சுண்டக்காய்ச்சி தேவையான அளவு தேன் சேர்த்து தினமும் இருவேளை சாப்பிட அதிக இரத்தப் போக்குடன் கூடிய மாதவிலக்கு குணமாகும்.

வயிற்றுவலி, வயிற்றுகடுப்பு:

   நித்தியகல்யாணி செடியின் துளிர் இலைகள் 5, 6 எடுத்து அதனுடன் சிறிது சுக்கு, சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து தினமும் இருவேளை அருந்தி வர, வயிற்று வலி, வயிற்று கடுப்பு ஆகியன விரைவில் குணமாகும்.

 •  நித்திய கல்யாணி பூக்களுடன் சிறிது மிளகு சேர்த்து தேனீராக்கி குடிப்பதால் ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு குணமாகும். 
 • நித்யகல்யாணி பூக்களை ஒரு டம்ளர் நீர் விட்டு ஊற வைத்து அந்தத் தண்ணீரில் கண்களை கழுவ கண்நோய்கள் குணமாகும். ஆறாத புண்களை கூட இந்த தண்ணீரில் கழுவி வர விரைவில் ஆறும்.


நித்திய கல்யாணி வளர்ப்பு:

 •  மாடிதோட்டத்தில் வளர்க்க, செவ்வக வடிவ தொட்டிகள் ஏற்றதாக இருக்கும்.


அதிகப் பராமரிப்பு தேவையில்லை. குட்டையாக வளர்வதால், பால்கனியில் கூட சுலபமாக வைத்து வளர்க்கலாம்.
நித்தியகல்யாணி பூச்செடி எல்லாவித காலநிலையும் நன்றாக வளரக்கூடிய செடியாகும். வருடம் முழுவதும் பூக்கள் பூத்துக் கொண்டே இருக்கும்‌. ஒருமுறை  செடியை வைத்து விட்டால், தொடர்ந்து விதைகள் விழுந்து, அதிலிருந்து செடிகள் வளர்ந்து, நமக்கு பூக்களை கொடுத்துக்கொண்டே இருக்கும். 

நித்தியகல்யாணி பூச்செடி மாடித்தோட்டத்தில் வளர்க்கும் போது உங்கள் தோட்டத்தில் இருக்கும் எந்த மண் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். 
 • தோட்டத்து மண் இரண்டு பங்கு, மணல் அல்லது தேங்காய் நார் ஒரு பங்கு,
 • மண்புழு உரம் அல்லது தொழு உரம் ஒரு பங்கு, 
 • வேப்பம் புண்ணாக்கு ஒரு கைப்பிடி
 • உயிர் உரங்கள் அனைத்திலும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு 
 இந்த அளவுகளில்  மண் கலவை தயார் செய்து, ஐந்தில் இருந்து ஏழு நாட்கள் ஈரப்பதத்தோடு வைத்திருந்து செடி அல்லது விதைகளை நடவு செய்ய ஆரம்பிக்கலாம். 

 • நித்தியகல்யாணி பூச்செடிக்கு உரங்கள் என்று பெரியதாக எதுவும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் தேவை இல்லை என, குப்பையில் சேர்க்கும், அரிசி கழுவிய தண்ணீர், சாப்பாடு வடித்த கஞ்சி, காய்கறி கழுவிய தண்ணீர் இவற்றை தினமும் ஊற்றிக் கொண்டு வந்தாலே, நன்றாக வளர்ந்து பூ பூக்க ஆரம்பிக்கும். 
 • செடியில் பூக்கள் பூக்க ஆரம்பித்தவுடன் பூக்களைச் செடியில் விடாமல் பறித்து விடுவது நல்லது. அப்போதுதான் அதிக பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்.


பூச்சிகள் மேலாண்மை


நித்திய கல்யாணி பூ செடியில் பெரியதாக பூச்சிகள் தாக்குதல் அதிகம் வருவதில்லை. அவ்வப்போது அஸ்வினி பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். முக்கியமாக பனிக்காலங்களில் அஸ்வினி பூச்சிகள் தொல்லை இருக்கும். பூச்சிகளை  கட்டுப்படுத்துவதற்கு இஞ்சி, பூண்டு, மிளகாய் கரைசல், தெளித்து கட்டுப்படுத்தலாம். அல்லது வேப்ப எண்ணெய் கரைசல் தெளித்து கட்டுப்படுத்தலாம். ரசாயனம் கலந்த மருந்துகளை தெளிக்காமல் இருந்தாலே, அஸ்வினி பூச்சிகளின் எதிரியான பொறி வண்டுகள் வந்து அசுவினி பூச்சி தொல்லைகளை சரி செய்து விடும்.

நோய் மேலாண்மை


நித்திய கல்யாணி பூ செடியில் வைரஸ் நோய்கள் வருவதுண்டு. வைரஸ் நோயை ஆரம்பத்தில் கண்டறிந்து மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் புளிக்க வைத்த மோரை ஒரு லிட்டருக்கு 9 லிட்டர் தண்ணீர் கலந்து இலைகள் முழுவதும் நனையும்படி தெளித்து விடலாம். தொடர்ந்து வாரத்தில் இரண்டு நாட்கள் தெளித்து வருவதால் வைரஸ் நோய்களை கட்டுப்படுத்தலாம். வைரஸ் நோய்களை ஒரு செடியிலிருந்து, மற்றொரு செடிக்கு பரப்பிவிடும். வெள்ளை ஈக்களை, மஞ்சள் அட்டை வைத்து சுலபமாக கட்டுப்படுத்தலாம்.

       
 லாபம் தரும் நித்தியகல்யாணி - விவசாயம்

  ஒரு முறை பயிரிட்டால், ஆண்டுக்கு மூன்று முறை பூக்கள் அறுவடை செய்யலாம். அத்துடன் ஒரு முறை அறுவடை செய்யும் பூக்கள், ஏக்கருக்கு 20 ஆயிரம் விதத்தில், மூன்று முறைக்கு 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால், ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. எனவே விவசாயிகள், இந்த செடியினை தாரளமாக தங்கள் நிலங்களில் பயிர் செய்யலாம்.

நித்தியகல்யாணியை வீட்டில் வளர்க்கலாமா?


சுடுகாட்டுப் பூ என அழைப்படும் நித்தியகல்யாணியை வீட்டில் வளர்க்கலாமா? சாஸ்திரங்கள் கூறுவது என்ன?

    நித்தியகல்யாணி பூக்கள் பொதுவாக சுடுகாட்டில் அதிகமாக பூத்துக் கிடக்கும். அதனால் இது சுடுகாட்டுப் பூ என அழைக்கப்படுகிறது. இறந்த மனிதன் உடலை புதைத்த பின்பு அவர்கள் மேல் இந்தச் செடியை நட்டு வைப்பது வழக்கம். இதன் காரணம் என்ன தெரியுமா? நித்தியகல்யாணி செடி அபூர்வ மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த செடியை வாழும் காலத்தில் மனிதன் பயன்படுத்தி இருந்தால், அவன் தன்னுடைய வாழ்நாளை அதிகரிக்கலாம்., என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே, அக்காலங்களில் இவ்வாறு சுடுகாட்டில் செய்யப்பட்டது.
 
மற்றபடி, இவ்வளவு அபூர்வ சக்திகள் கொண்ட நித்தியகல்யாணி செடியை நிச்சயமாக, வீட்டில் வைத்து வளர்க்கலாம்.

நித்தியகல்யாணி செடிக்கு வாஸ்து தோஷம் என்பது இல்லை, விருட்ச சாஸ்திரத்திலும் நித்தியகல்யாணி செடிக்கு தோஷங்கள் என்று எதுவும் கூறப்படவில்லை; எனவே நித்தியகல்யாணி செடி என்பது தோஷங்கள் அற்றது என்பதால் வீட்டில் எந்த திசையிலும், எந்த இடத்திலும் தாராளமாக வைத்து வளர்க்கலாம். இதனால் கிடைக்கும் பலன்கள் எண்ணற்றவை என்பதை நினைவில் நிறுத்தி, நித்தியகல்யாணி செடி சுடுகாட்டு செடி என்ற தவிர்த்து விடாமல், வீட்டில் அதிர்ஷ்டமும், நன்மைகளும் உண்டாக இதனை வளர்த்து பயன்பெறலாம்.புரட்சி கவிஞர் பாரதிதாசனின் பேரன், திரு. வீரமணி அவர்கள் , 
கொரானா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதாவது " நித்திய கல்யாணி தாவரத்திலே கொரானாவை ஒழிக்கும் மருத்துவ கூறுகள் உள்ளது என்றும், இதனை அனைவருக்கும் பயன்படுத்த வேண்டும் என்றும் கடிதத்தில் குறிபிட்டுருந்தார். இது தொடர்பான பதிவு நக்கீரன் அக்டோபர் 2020 இதழில் வெளியாகி இருந்தது. நேரமிருந்தால் படித்து பாருங்கள். 

இந்த தாவரத்தினை நம் இல்லங்களில் வளர்க்கும் போது, பெரும்பாலும் மருத்துவமனைகளே நமக்கு தேவைபடாது என்பது திண்ணம்.


நன்றி,
இயற்கை விவசாயி, 
திரு.சுதாகர்கிருஷ்ணன்.குறிப்பு புத்தகங்கள்:

 • Drugdigest - Catharanthus roseus 
 • Flora of China - Catharanthus roseus 
 • Collage of Micronesia - Catharanthus roseus
 •  Huxley A., ed 1992 - New RHS Dictionary of Gardening Macmillan ISBN - 0333 - 47494 - 5
 • Jepson Flora - Catharanthus roseus 


பின்குறிப்பு:

   சிலருக்கு நித்தியகல்யாணி கஷாயம் தலைச்சுற்றல், வாந்தி போன்ற பல பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். முதலில் சிறிதளவு சாப்பிட்டு பரிசோதித்துவிட்டு பின் பயன்படுத்தலாம். அல்லது தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசித்து பின் பயன்படுத்தலாம். நித்திய கல்யாணியின் இரண்டு நிற பூக்களுமே ஒரே மருத்துவ குணங்களை கொண்டது. அதனால், இரு நிற பூக்களையும் மருத்துவத்துக்கு பயன்படுத்தலாம். பூக்களும், செடிகளும் கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் நித்தியகல்யாணி பொடி கிடைக்கிறது அதனை பயன்படுத்தலாம்.

Post a Comment

0 Comments