Translate

செம்பருத்தியின் மருத்துவ பயன்கள்

Sembaruthi Medicinal Uses 


Sudagarkrishnanchannels
Medicinal uses of Sembaruthi 


செம்பருத்தி/செவ்வரத்தை/Hibiscus Rosa-sinensis 

 செம்பருத்தி மலர் கிழக்கு ஆசியாவை தாயகமாக கொண்டது. மலேஷியா நாட்டின் தேசிய மலர். சீனரோஜா என்றும் அழைக்கப்படுகிறது. செம்பருத்தி - செடி இனத்தை சார்ந்தது. இந்தியா இலங்கையில் அதிகம் காணப்படுகிறது. சீனா, பசுபிக் தீவுகளில் உணவாகவும் எடுத்து கொள்ளப்படுகிறது. பூக்கள் பலநிறங்களிலும், பல அடுக்கு இதழ்களை கொண்ட வகைகளும் காணப்படுகிறது. இவைதவிர கலப்பு பிறபாக்கம் மூலமும் பலநிறங்களில் அழகிய இனங்களை உருவாக்க முடியும். செம்பருத்திக்கு, ஜப்பாத்து செடி, செவ்வரத்தை, ஜபம் என்ற பெயர்களும் உள்ளது. ஜபா புஷ்பா, ருத்ர புஷ்ப, ரக்த கார்பாச என்று ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பெயர் குறிப்பிடப்படுகிறது.

செம்பருத்தி செடி வளர்ப்பு முறை:

  செம்பருத்தி செடியினை கட்டிங்ஸ் மூலம் வளர்ப்பது தான் சிறந்தது. அதாவது, பதியம் போடுதல் மிகவும் சிறப்பானது. பதியம் போடுவதற்கு கற்றாழை ஜெல், தேன், பட்டைப்பொடி இவற்றினை ரூட்டிங் ஹார்மோனாக பயன்படுத்தி கொள்ளலாம். வருடம் முழுவதும் பூக்களை தரக் கூடிய செடி.

செம்பருத்திக்கு சிறந்த மண் கலவை, 
 செம்பருத்தி தாவரம் செம்மண் அல்லது தோட்டத்து மண்ணில் நன்றாக செழித்து வளரும். 
 • தோட்டத்துமண்- இரண்டு பங்கு
 • தேங்காய்நார் கழிவு- 1பங்கு 
 • உயிர்-உரங்கள் 
    • சூடோமோனாஸ் 
    • டிரைக்கோடெர்மாவிரிடி 
     • அசோஸ்பைரில்லம் எல்லாம்- 1ஸ்பூன்
 • தொழு உரம்-1பங்கு 
 • மண்புழு உரம்
 • காய்கறிகழிவு உரம்-1பங்கு 
 • வேப்பம் புண்ணாக்கு-1கைப்பிடி.
இவையெல்லாம் ஒரு தொட்டிக்குரிய மண் கலவை.  தயார் செய்த மண்கலவையை ஒருவாரம் வரை நிழற்பாங்கான இடத்தில் வைத்திருந்து, பிறகு நீங்கள் செடியினை நடவு செய்யலாம்.  நிழற்பாங்கான இடத்தில் மண்கலவையை ஏழு நாட்கள் வைத்திருக்கும் போது, தினமும் காலையும் மாலையும் தண்ணீர் தெளித்து வர வேண்டும். அப்பொழுது தான் நுண்ணுயிர்கள் வளர்ச்சி ஏற்பட்டு, செடி செழித்து வளர்ந்து, செழிப்பான மண் தயாராகிவிடும்.
 நர்சரியிலிருந்து செடியாக வாங்கி வந்தாலும் இவ்வாறே மண்கலவை தயார் செய்து நடவு செய்யலாம். நர்சரி தோட்டத்திலிருந்து வாங்கி வந்த செடிகளை மூன்றுநாட்கள், அப்படியே வைத்திருந்து பிறகு நடவு செய்ய வேண்டும். செடியை இடமாற்றி வைக்கும் போது, அந்த அதிர்ச்சியில் செடி இறந்துவிடும் வாய்ப்பு கூட உள்ளது. அதனால் உங்கள் தோட்டத்து காலநிலையில் மூன்று நாட்கள் வைத்திருந்து பின்னர் நடவு செய்யுங்கள்.

Sudagarkrishnanchannels
Medicinal uses of Sembaruthi 


பாதுகாப்பு முறைகள்/அடிப்படை தகவல்கள்:

 1. வாரம் ஒரு முறை மண்ணைகிளறிவிட்டு தண்ணீர் ஊற்றவும். 
 2. செடியினை காவாத்து செய்துவிடுவது மிகவும் அவசியம், அப்பொழுது தான் பக்க கிளைகள் வைத்து, அடர்த்தியாக வளரும். காவாத்து செய்ய செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் சிறந்தது. 
 3. ஒரு வருடச் செடி என்றால், மூன்றுமாதத்திற்கு ஒரு முறை உரம் அளிக்க வேண்டும். 
 4. 2-வருடச்செடி என்றால் இரண்டு மடங்கு உரமளிக்க வேண்டும்.
 5. பஞ்சகவ்யா முப்பதிலிருந்து ஐம்பது மில்லிலிட்டர் என்ற அளவில் கலந்து மாதம் ஒரு முறை வேர் பகுதிக்கு கொடுக்கலாம். 
 6. மாதம் ஒரு முறை பூச்சிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வேப்பம் எண்ணெய்யை  சோப்பு கரைசலுடன் கலந்து தெளித்துவிட வேண்டும்.
 7. உரங்கள், மண்புழு உரம், தொழு உரம்,காய்கறி கழிவு உரம் அடி உரமாக உங்களிடம் இருக்கும் எதேனும் ஒரு உரத்தை கொடுக்கலாம். 
 8. செம்பருத்தியும், மாவு பூச்சியும் பிரிக்க முடியாத ஒன்று. செம்பருத்தி செடியை மாவுப்பூச்சிகள் அதிகம் பாதிக்கும். மாவு பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து நான் நிறைய பதிவுகளை எழுதி இருக்கிறேன் உங்களுக்கு நேரம் இருந்தால் இந்த வலைதளத்தில் பாருங்கள். 
 9. சுலபமான வழிமுறையை மட்டும் இப்பொழுது அறிந்து கொள்ளலாம். குளிர்சாதனபெட்டியில் வைத்திருந்த ஐஸ்வாட்டர் போதுமானது. தண்ணீர் மாவு பூச்சிக்கு ஆகாத ஒன்று எனவே ஐஸ் வாட்டரை வேகமாக மாவுப்பூச்சி உள்ள செடியின் மீது நல்ல ஒரு ஸ்பிரேயரை கொண்டு வேகமாக பீய்ச்சி அடிக்கவும். மாவு பூச்சிகள் எல்லாம் கீழே கொட்டி விடும். அதன் பிறகு எப்போதும் போல வேப்பம் எண்ணையை தெளித்து வரலாம்.

செம்பருத்தியின் மருத்துவ பயன்கள்:

   செம்பருத்தி பூவை தங்க பஸ்பம் என்று சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் அதிகளவு மருத்துவ பயன்கள் கொண்டது. செம்பருத்தி செடியில் இலைகள், பூக்கள், வேர் பகுதி அனைத்தும் மருந்தாகப் பயன்படுகிறது. இதயநோய்க்கு நல்ல அருமருந்தாக அமைகிறது. இதய படபடப்பு, வலி, ரத்த குழாய் அடைப்பு போன்றவற்றையும் குணமாக்கவல்வது. 

Sudagarkrishnanchannels
Medicinal uses of Sembaruthi 


இதய நோய் உள்ளவர்கள், காலை வெறும் வயிற்றில் பூக்களை எடுத்து கொண்டால் இதய நோய் குணமடையும். ஜூஸாகவோ, டீயாகவோ கூட அருந்தலாம். மாதவிடாய் கோளாறுகள், கருப்பை கோளாறுகள், ஒழுங்கற்ற மாதவிடாய், வெள்ளைபடுதல் இதற்கு அருமருந்தாய் திகழ்கிறது. 
வயது வந்தும் பருவம் அடையாதவர்களுக்கு, நெய்யில் பூக்களை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்கள், கர்பப்பை பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படுகின்ற நோய்களுக்கும் மருந்தாகிறது. வயிற்றுபுண் வாய் புண்களுக்கும் தீர்வாக அமைகிறது. ஒருமாத காலத்திற்கு தினமும் பூக்களின் பத்து இதழ்களை தின்று வந்தால் வாய் புண்கள் குணமடையும்.

அஜிரணக்கோளாறுகளை நீக்குகிறது. Ldl கொழுப்பின் அளவினை குறைப்பதில் சக்தி வாய்ந்தது. தமனிகளின் அடைப்புகளை நீக்குவதன் மூலம், கொழுப்பின் அளவை குறைக்கின்றது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நிச்சயமாக பயன்படுத்த வேண்டும். 

தலைமுடி பிரச்சனைகள், இது அனைவரும் அறிந்த ஒன்றே. பொடுகு ஈறு பேன் தொல்லை, நரைமுடி, முடி உதிர்தல் பிரச்சனைகளுக்கு செம்பருத்தி பூக்களை எண்ணெய்யில் போட்டு காய்ச்சி பயன்படுத்தலாம்.  செம்பருத்தி பூக்களுடன், வேப்பம் பூக்களையும் அரைத்து தலையில் பேக் போல போட்டு,  ஊற வைத்து குளித்து வந்தால், பேன் தொல்லை ஒழியும். முடியும் ஆரோக்கியமாக வளர்ச்சி பெறும்.

 உடலுக்கு குளிர்ச்சியையும்,மன அமைதியையும் தரக்கூடியது. கண்நோய்கள், சூடு கட்டி, கண் எரிச்சல், கண் நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. இரத்தசோகை நோயினை குணமாக்கி, ஹூமோகுளோபின் அளவு அதிகரிக்கச் செய்கிறது, ஹூமோகுளோபின் அதிகரிக்க செம்பருத்தி இதழ்களை காய்ச்சி வடிகட்டி அதனுடன் தேன் கலந்து பருகலாம். 

செம்பருத்தி பூக்களை பயன்படுத்தி குளியல் சோப்பு, ஷாம்பு வீட்டிலேயே சுலபமாக தயாரித்து பயன்படுத்தலாம். ஆவாரம்பூ, பாசிபருப்பு, கஸ்தூரி மஞ்சள், செம்பருத்தி பூக்கள் கலந்த பொடியினை சோப்புக்கு பதிலாக பயன்படுத்தலாம், தோல் நோய்கள் கட்டுபடுவதோடு, தோல் மினுமினுப்பு அடையும். சியக்காயுடன் கலந்து ஷாம்புக்கு பதிலாக பயன்படுத்தலாம். தசைவலியை போக்குவதோடு, தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டது.

நீர் சுரகமூளைபலம், நினைவாற்றல் அதிகரிக்க மகரந்த காம்பை நீக்கிவிட்டு, இதழ்களை பிள்ளைகளுக்கு கொடுக்கலாம். நல்லமலமிளக்கி, உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும்.

 ஷூபிளவர் என்று வெளிநாடுகளில் அழைக்கப்படுகின்றது.  காலணிகள் தயாரிப்பில் செம்பருத்தி பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் சாயம் மிக முக்கிய இடத்தை வகிப்பதால், ஆங்கிலத்தில் ஷூ பிளவர் என அழைக்கப்படுகிறது.

செம்பருத்தி செடியில் பல்வேறு வகைகள், அழகிய  வண்ணங்கள் நிறைய இருக்கின்றன். கலப்பினம் (ஹைபிரட் ) செய்யப்பட்ட பூச்செடிகளும் உள்ளது. செம்பருத்தியில் முப்பது வகைகள் தன்னிடம் உள்ளதாக நர்சரி கடைகாரர் ஒருவர் என்னிடம் கூறினார்.
 
செம்பருத்தியில் மருத்துவ பயன் கொண்டது,  ஐந்து இதழ்களை கொண்ட, ஒற்றை அடுக்கு சிவப்பு செம்பருத்தி தான்.  

Sudagarkrishnanchannel
Sembaruthi medicinal uses 

   படத்தில் காண்கின்ற செம்பருத்தி வகைகள் அனைத்தும் என்னுடைய மாடி தோட்டத்தில் நான் பாதுகாத்து பல வருடங்களாக வளர்த்து கொண்டிருக்கும் எனது செம்பருத்தி செடிகள். சிலர் தபால்தலைகள், நாணயங்களை சேகரிப்பதை போல,  பல்வேறு வகையான, பல்வேறு வண்ணங்களை கொண்ட செம்பருத்தி செடிகளை சேகரிப்பது (வளர்ப்பது) எனக்கு பிடிக்கும். நன்றி!!


செம்பருத்தி செடியில் அதிக பூக்களை பூக்க வைக்க சூப்பரான 5-டிப்ஸ்கள்.👇👇


Post a Comment

0 Comments