Translate

Pirandai Thuvaiyal

 பிரண்டை துவையல் செய்வது எப்படி?


Sudagarkrishnanchannels
Pirandai thuvaiyal 


தேவையான பொருட்கள்:

  • பிரண்டை- ஒரு கட்டு
  • வரமிளகாய்-8
  • கடுகு- இரண்டு ஸ்பூன்
  • உளுந்து- 4ஸ்பூன்
  • புளி- நெல்லிக்காய் அளவு
  • நெய்- 2 ஸ்பூன்
  • இஞ்சி- சிறிய துண்டு
  • பூண்டு- 5பல்
  • சிறிய வெங்காயம்- 10
  • கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி அளவு

தாளிக்க:

  • நல்லெண்ணெய்- 2ஸ்பூன்
  • கடுகு- 1/2 ஸ்பூன்
  • சீரகம்- 1/2 ஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு- 1/2ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு.

செய்முறை:

    பிரண்டைய சுத்தம் செய்து, உப்புத்தூள் கலந்த, புளிதண்ணீரில் பதினைந்து நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். முற்றிய பிரண்டையாக இல்லாமல், இளம் தண்டாக இருப்பது சிறந்தது. கைகளில் எண்ணெய் தடவி கொண்டு அல்லது கையுறை அணிந்து பிரண்டையை சுத்தம் செய்து கொள்ளவும். இளம் தண்டாக இருக்கும் போது, நாலைந்து துண்டுகளாக உடைத்து பயன்படுத்தலாம். நடுபகுதியாக இருக்கும்போது, உடைக்கும் போது நார் வரும், அதை மட்டும் அகற்றினால் போதும். அவரைக்காயில் நாம் நார் எடுப்போமே, அவ்வாறே ஓரங்களில் நாரினை அகற்றினால் போதும். முற்றிய தண்டாக இருக்கும் போது, நாற்புறமும் மேல் தோலை அகற்ற வேண்டும்.

பிரண்டையை மட்டும் தனியாக இரண்டு ஸ்பூன் நெய்யில் நிறம் மாறும் வரை வதக்கி கொள்ளவும். வாணெலியில் ஒரு ஸ்பூன் கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் கடுகு இரண்டு ஸ்பூன், உளுந்து நான்கு ஸ்பூன்  சேர்த்து சிவக்க வறுக்கவும். உளுந்து வறுபட்டதும், புளியை சேர்த்து வதக்கவும். அதன்பின்னர் ஐந்தாறு துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு இவற்றையும் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி கொள்ளவும். கறிவேப்பிலைக்கு பதிலாக புதினாவையும் சேர்த்துக்கொள்ளலாம். உங்கள் காரத்திற்கேற்ப வரமிளகாயை சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் துவையலுக்குத் தேவையான உப்பில் பாதியை மட்டும் சேர்த்து வதக்கி கொள்ளவும். முடிந்தளவு குறைந்த தீயில் வைத்து செய்வதே சிறந்தது. அனைத்துப் பொருட்களும் வதங்கிய பிறகு, ஆறவைத்து கொள்ளவும். இவற்றுடன் முன்பே வதக்கி ஆறவைத்த பிரண்டையையும் சேர்த்து அம்மியிலோ அல்லது மிக்ஸி ஜாரிலோ அரைத்துக்கொள்ளவும். தண்ணீர் வேண்டிய அளவு சிறிதுசிறிதாக சேர்த்து, உப்பு சரிபார்த்து அரைக்கவும். இப்பொழுது பிரண்டை துவையல் தயார். இப்படியே சாப்பிட பயன்படுத்திக்கொள்ளலாம்.


ஒரு வாணெலியை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி, எண்ணெய் சூடானதும், கடுகு அரை ஸ்பூன், சீரகம் அரைஸ்பூன், உளுத்தம்பருப்பு அரைஸ்பூன் சேர்த்து தாளித்து பிரண்டை துவையலில் சேர்த்துக்கொள்ளவும். பிரண்டை துவையல் இட்லி, தோசை, சாதத்திற்கும் ஏற்ற சிறந்த துணை உணவு. பிரண்டை துவையலின் சுவை சூப்பராக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள். இந்த துவையலில் புளியும் நல்லெண்ணெய்யும் சேர்க்கப்படுவதால் விரைவில் கெட்டுப்போகாது. அதனால் நீங்கள் குளிர்சாதனப்பெட்டியில் இரண்டு நாள் வரை வைத்து, பயன்படுத்தலாம்.

பிரண்டையில் உள்ள ஊட்டசத்துக்கள்:


Sudagarkrishnanchannels
Pirandai Thuvaiyal 

  • பிரண்டையை பயன்படுத்தி செய்யப்படும் துவையலை உணவில் சேர்த்துக்கொள்வதால், வாயுபிடிப்பு, கைகால் மூட்டுகளில் வலி, தசைபிடிப்பு இவற்றை குணமாக்குகிறது. உடல் சுறுசுறுப்படையச் செய்யும். மூளை நரம்புகளை பலப்படுத்தி, ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
  • ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை குணப்படுத்தி, ஈறுகள் வலிமையுடன் விளங்க உதவிசெய்கிறது. கழுத்து வலி முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை பிரண்டைத் துவையலை எடுத்துக்கொள்ளலாம். சிறந்த வலி நிவாரணியாக திகழ்கிறது.
  • வயிற்று செரிமான பிரச்சனைகளையும், அஜீரண கோளாறுகளையும் குணமாக்குகிறது. மூலம் தொடர்பான நோய்களுக்கு, பிரண்டை துவையல் சிறந்த பலனை கொடுக்கும். பிரண்டையை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வரும்பொழுது, மூல நோயின் பாதிப்புகள் நாளடைவில் குறைய தொடங்கி, முழுவதுமாக குணமடைகிறது.
  • பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை குணமாக்குவதுடன், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி, முதுகு வலி, கால் வலி போன்ற வலிகளை குணமடையச் செய்கிறது.
  • இரத்தத்தில் படியும் கொழுப்புகளினால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. பிரண்டைத் துவையலை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது, இரத்த ஓட்டம் சீராகி இதயம் பலப்படும். 
  • எலும்பு முறிவு, அடிபட்ட காயங்களினால் ஏற்படும் வீக்கங்கள் போன்றவற்றிற்கு, பிரண்டையை அரைத்து வெளிப்பூச்சாக பற்றுப்போட விரைவில் குணமடையலாம்.
  • பிரண்டை இலை துவையல்: பிரண்டையின் இலையை பயன்படுத்தியும் துவையல் செய்யலாம். பிரண்டை இலைத்துவையல் சாப்பிட்டுவருவதால், சர்க்கரை நோய், மூலநோய், குடல்புண், இரத்த அழுத்தம், இதய நோய்கள்  போன்றவை குணமடையும். பிரண்டை இலை துவையல் செய்வதற்கு, இளம் இலைகளை சேகரித்து, அதனுடன் பூண்டு இஞ்சி, வரமிளகாய், புளி புதினா கொத்தமல்லி இவற்றைை வதக்கி துவையல் செய்யலாம். பிரண்டைத் துவையலை போல, பிரண்டை இலையில் செய்யப்படும் துவையலும் பல மருத்துவப் பயன்களைக் கொண்டது.
  • பிரண்டை வற்றல்: முற்றிய பிரண்டையை, பொதுவாக நாம் சமையலுக்குப் பயன்படுத்த மாட்டோம். அத்தகைய பிரண்டைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, உப்புத்தூள் சேர்த்து, மோரில் ஊறவைத்து, வெயிலில் நன்றாக காயவைத்து சேமித்து வைத்துக் கொள்ளலாம். தேவையான பொழுது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். இதனால் நாக்கு சுவையின்மை, பசியின்மை போன்ற குறைபாடுகள் நீங்கும்.
  • வாரம் இரண்டு முறை பிரண்டையை உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கிய வாழ்விற்கான வழியாகும். முடிந்த அளவிற்கு நம்முடைய வீட்டுத் தோட்டத்திலோ அல்லது மாடி தோட்டத்தில் வளர்த்து பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. நன்றி!!






ALso READ:




Post a Comment

0 Comments