 |
Sabja seeds |
எவ்வளவோ மருத்துவமனைகள், ஆராய்ச்சியாளர்கள், ஆயிரம், பத்தாயிரம், கோடிகணக்கில் மருத்துவர்கள் அவர்களால் எல்லாம் தீர்க்க முடியாத நோய்களை காடுகளில் காணப்படும் இரண்டு இலைகள் தீர்த்துவிடும். அத்தகைய தெய்வீக மூலிகைகளை எல்லாம் நாம் கண்டுகொள்வதில்லை. Atleast அந்த செடிகளின் பெயர் கூட தெரிந்து வைத்துகொள்வதில்லை. நம்முடைய மூதாதையர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்தனர். அவர்களாகவே வாழ்ந்தது போதும் என்று முடிவு செய்து, காடுகளிலோ, குகைகளிலோ வடக்கிருந்து, அதாவது உண்ணாநோன்பிருந்து உயிரை மாய்த்து கொள்வார்களாம். இத்தகைய வாழ்கை முறையை மறந்துவிட்டு, ஆரோக்கிய வாழ்கையினை தொலைத்ததுவிட்டு, தேடிகொண்டிருக்கிறோம் நம்முடைய அறியாமையின் ஆழத்திலே!திருவிழாக்களில் தொலைந்து போன பிள்ளைகளை போல நோய்களை கண்டு பயந்துபோய், அழுது புலம்புகிறோம். எத்தனையோ அற்புத மூலிகைகள் இன்னும் அழிந்துவிடவில்லை. நடந்துபோகும் இடங்களிலே, என்னை எல்லாம் கண்டு கொள்ள மாட்டாயா! என்று ஏங்கி நிற்கின்றன. அத்தகைய அற்புத மூலிகை, தெய்வீக மூலிகையில் ஒன்றான திருநீற்று பச்சிலை பயன்களை பற்றி இன்றைய கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
திருநீற்றுப்பச்சை/Ocimum Basillicum :
துளசி இனத்தை சார்ந்தது. வெள்ளை கலந்த ஊதா நிறத்தில் பூக்களை கொண்டிருக்கும். துளசியின் அனைத்து குணங்களையும் கொண்டது. தெற்காசியாவை சேர்ந்த இந்த தாவரம், இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் அதிகம் காணப்படுகிறது என்பது குறிபிடதக்கது. துளசி செடியை போலவே இதனை மாடிதோட்டத்தில் சுலபமாக வளர்க்கலாம். விதைகளிலிருந்து வளர்க்கலாம். பதியம் போடுதலின் மூலமாகவும் வளர்க்கலாம். மழைகாலங்களில் விதைக்க வேண்டும். அதிக வாசனை உடையது. அதனால் தேனிக்கள் அதிகமாக வரும். மகரந்தசேர்கை சுலபமாக நடைபெறும். எனவே பூக்காத, காய்க்காத செடியின் அருகில் திருநீற்று பச்சிலை செடியினை கொண்டு போய் வைத்தால், அந்த செடி பூத்து, காய்க்க ஆரம்பித்துவிடும்.
திருநீற்று பச்சிலையின் பயன்கள் என்ன,பயன்படுத்துவது எப்படி?
திருநீற்று பச்சிலையில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு போன்ற தாது உப்புகள் அடங்கி உள்ளது. பீட்டா கரோட்டின், விட்டமின் - ஏ சத்து அதிகமாக காணப்படுகிறது. சிட்ரால், சிட்ரோனெல்லால், ஐசோகுவர், செட்ரினலிமோனின், மென்த்தால் போன்ற வேதி பொருட்களும் அடங்கியுள்ளது. ஆன்டி- ஆக்ஸிடன்டாக செயல்பட்டு நோய் கிருமிகளை அழிக்கிறது. முகப்பருக்களால் பாதிக்கபட்டவர்கள் நிச்சயம் வளர்க்க வேண்டிய மூலிகை. எவ்வளவு மோசமான நிலையில் முகப்பருக்கள் இருந்தாலூம், திருநீற்றுபச்சிலையின் இலைகளை கசக்கி, சாறினை பருக்கள் மீது வைத்து வந்தால் போதும். பருக்கள் மறைந்து விடும். பருக்களால் பாதிகப்பட்டவர்கள் முகத்தில் பருக்கள் மறைந்தாலூம் வடுக்கள், முகஅழகை கெடுக்கும். அவர்களும் கூட வடுக்கள் மீது பச்சிலையின் சாறினை தடவி வரலாம். வயிற்று புண்கள் உள்ளவர்கள் வேரினை இடித்து, கஷாயம் செய்து காலை மாலை இரண்டு வேளை எடுத்து கொண்டால், வயிற்று புண்களை குணமடைய செய்யும். அஜிரண கோளாறுகளையும் குணமடைய செய்கிறது. தலைவலி, தூக்கமின்மை பிரச்சனைகளுக்கு திருநீற்று இலைகளை கசக்கி, முகர்ந்தாலே போதும். இதய படபடப்பு, மனசோர்வுகளுக்கும் தீர்வாக அமைகிறது. சிறுநீர் சம்பந்தபட்ட நோய்களை குணமாக்குகிறது. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி, சிறுநீரை பெருக்கி இரத்தத்தை சுத்தபடுத்துகிறது. காயங்கள், புண்கள், படர் தாமரை மீது வெளிபூச்சாக இதனை பயன்படுத்தலாம். பேன்,பொடுகு தொல்லை ஒழிய, சாதரணமாக நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய்களில் திருநீற்று பச்சிலையின் தைலத்தை கலந்து பயன்படுத்தினால், பேன், பொடுகு பிரச்சனைகள் ஒழியும். வாந்தி,ரத்த வாந்திக்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது. பச்சிலையின் சாறினை கண் கொப்பளங்கள், கண் கட்டிகள் மீது வைத்து வந்தால், உடனே நல்ல பலன் கிடைக்கும். திருநீற்று பச்சிலை இலைகளை உலரச்செய்து, தேநீர் செய்து பருகலாம். காய்ச்சல் நேரத்தில் ஆவி பிடிக்கவும் பயன்படுத்தலாம், திரூநீற்று பச்சிலை இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தினால், வியர்வை, தேவையற்ற கெட்ட நீர் வெளியேறி உடலுக்கு புத்துணர்ச்சி தரும். திருநீற்று பச்சிலையை மற்ற கீரைகளோடு சேர்த்து சமைக்கலாம். புற்றுநோய் செல்கள் பரவுவதை தடுக்கிறது. பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் வலிகளை குறைக்க திருநீற்று பச்சிலை விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. திருநீற்று பச்சையின், இலைகள், பூக்கள் விதைகள் ஆகியவற்றை தண்ணீரில் ஊறவைத்து ஆரோக்கிய மூலிகை குளியல் போடலாம். படை, தேமல் தோல் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
சப்ஜா விதைகள்:
சப்ஜா விதைகள் தமிழ் மருந்து கடைகளில் கிடைக்கும். சப்ஜா விதைகள் எள், கருஞ்சிரகம் போன்று இருக்கும். விதைகளை தண்ணீரில் ஊற வைத்தால் வழவழப்பாக மாறிவிடும். சப்ஜா விதைகளை சர்பத், ஜூஸ், பலூடா போன்றவற்றில் பயன்படுத்தி கொள்ளலாம். உடல் சூடு, நீர்கடுப்பு நீங்கி, நல்ல குளிர்ச்சியை தரும். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உணவில் மிகுதியாக பயன்படுத்தப்படுகிறது. மலச்சிக்கலை கட்டுபடுத்தும். சிறந்த நோய் எதிர்ப்பு காரணியாக திகழ்கிறது. சப்ஜா விதைகளில் சல்பர், ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ,பி,சி, துத்தநாகம், போன்ற ஊட்டசத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் இரத்தசோகையை கட்டுபடுத்துகிறது. ஏனெனில் சப்ஜாவிதைகள் அதிக அளவில் இரும்புசத்து கொண்டது. உடல் எடை குறைக்க விரும்புவர்கள் சப்ஜா விதைகள் சேர்க்கப்பட்ட பானங்களை பயன்படுத்தி, சுலபமாக உடல்எடையை குறைக்கலாம். அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் இப்பொழுது, உடல் எடைகுறைப்பதற்காக பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கொசுவிரட்டியாக திருநீற்று பச்சிலை பயன்படுகிறது. மிகுந்த நறுமணம் கொண்ட செடி. கொசுக்களை விரட்ட நீங்கள் உங்கள் தோட்டத்தில் வளர்க்கலாம். காய்ந்த இலைகளை கொசுக்கள் அதிகம் உள்ள இடங்களில் எரித்து, அதன் புகையை பரவ விடும் போது, கொசுக்கள், விஷஜந்துக்கள் எதுவுமே வீட்டிற்குள் வராது. வாந்தி சுரமருசி நில்லா; உருத்திர சடைக்கே உரையெனும் திருநீற்று பச்சிலை குறித்த அகத்திய அடிகளின் பாடல். ஜீரம், வாந்தி கப நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக திருநீற்று பச்சிலை உள்ளது, என்று அகத்திய முனிவரின் பாடல் நமக்கு தெளிவான கருத்தை முன்னிலை படுத்துகிறது. இயற்கை தந்த அரும்பெரும் மூலிகைகளை பாதுகாப்பது நமக்கு மட்டுமல்ல, நமது அடுத்த தலைமுறைக்கும் ஆரோக்கிய வாழ்வினை நம்மால் தர முடியும். நன்றி!!
2 Comments
Vry niz information... Tanq sir for saying so clearly..
ReplyDeleteநன்றி
ReplyDelete