அதிமதுரம்
தலைறந்த மருத்துவ மூலிகைகளில் ஒன்றான அதிமதுரத்தை பற்றி இன்றைய பதிவில் தெரிந்து கொள்வோம். அதிமதுரம் உலகின் அனைத்து மருத்துவ முறைகளிலுமே பயன்படுத்தப்படுகிறது. சீனமருத்துவத்தில் "முதன்மை மருந்து" என்ற அந்தஸ்து அதிமதுரத்திற்கு உண்டு.
அதிங்கம், அட்டி, மதுகம் என்ற பெயர்களிலும் அதிமதுரம் அழைக்கப்படுகிறது. இனிப்பு சுவையோடு இருப்பதால் 'மது'கம் என்ற பெயரும் இதற்கு உண்டு. அதிமதுரத்தின் வேர் இனிப்புச்சுவையுடையது அதனால், அதனை சிறப்பாக குறிப்பிடும் விதமாக லிகோரைஸ் {Liquorice} என்ற சிறப்புபெயரிலும் அழைக்கப்படுகிறது.
அறுசுவைகளையும் கசப்பு, துவர்ப்பு, காரம் என வகைபடுத்தி அறியும் தன்மை நம்முடைய நாவிற்கு உள்ளது. அதையும் தாண்டி, அவற்றிற்குள் இருக்கும் பிரிவுகளை எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறீர்களா? அதிமதுரத்தை சாப்பிடும்போது, இனிப்பு சுவையில், வேறொரு பரிணாமத்தை {அதித சுவையை} நம்முடைய நாவு அறியும்.
அதிமதுரத்தை வாயிலிட்டு சுவைக்கும்பொழுது, மிகவும் இதமான இனிப்புச்சுவை தொண்டையினுள் இறங்குவதை, வாழ்நாளில் மறக்கவே முடியாது. அதிமதுரத்தின் சுவையும், குளிர்ச்சியும் நீண்டநேரம் நாவிலும், தொண்டையிலும் நீடித்து நிற்கும். உமிழ்நீர் சுரப்பினை அதிகரித்து, நாவறட்சி, தொண்டை பிரச்சனைகளை குணமாக்குகிறது.
அதிமதுரத்தின் நன்மைகள்:
Liquorice Benefits:
மருத்துவபயன்பாட்டில், கண்நோய்கள், எலும்புநோய்கள் இருமல், சளி தலைவலி, மஞ்சள்காமாலை, புண்கள் போன்றவற்றை குணப்படுத்தப் பயன்படுகிறது. அதிமதுர வேர் மூக்கில் ரத்தம் வடிதல், காக்கை வலிப்பு, படர்தாமரை, விக்கல், அசதி, தாகம் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. நரம்புதளர்ச்சி மற்றும் ஆண்மைக்கோளாறு குறைபாட்டிற்கும் மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பித்தம், கப நோய்களுக்கு கசப்பில்லா இனிப்பு மருந்து அதிமதுரம்.
Liquorice Benefits |
●சுகபிரசவத்திற்கு,
சிசேரியன் பிரசவங்கள் இன்றைய காலகட்டங்களில் அதிகரித்து வருகிறது. அதற்கு பல காரணங்கள் இருந்தாலூம், அன்றைய காலகட்டங்களில் பலராலும் அறியப்படாத சொல்லாகவே இருந்தது. இருபது குழந்தைகளை கூட ஒரு பெண் சுக பிரசவத்தில், வீட்டிலேயே பெற்றுக் கொண்டனர். அக்காலங்களில் பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற அதிமதுரம் வேரினை கஷயமாக கொடுப்பார்கள். அதிமதூரம், தேவதாரம் போன்ற மூலிகைகளை பொடியாக அரைத்து நீரிலிட்டு காய்ச்சி, பிரசவ வலி வந்த பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டுமுறை கொடுக்க, எந்த சிக்கல்களும் இல்லாமல் பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெறும். இந்த குறிப்பு சித்த மருத்துவ நூல்களில் குறிபிடப்பட்டுள்ளது.
●அல்சர், மற்றும் வயிற்று புண்கள், குடல் புண்கள் இதனால் ஏற்படும் கடுமையான வலியையும் குணமாக்கும் ஆற்றல் கொண்டது அதிமதூரம். இத்தகைய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிமதூரத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, காலையில் சோறு வடித்த கஞ்சி தண்ணீருடன் பருகி வர, எவ்வளவு கொடுமையான அல்சர் வயிற்று புண்களும் குணமடையும்.
பிற வயிற்று பிரச்சனைகள் அனைத்திற்குமே அதிமதுரப் பொடியை சாப்பிடலாம். சிறந்த பலனைக் கொடுக்கும்.
●மூட்டுவலி பிரச்சனைகளுக்கு அதிமதுரம் ஒரு சிறந்த வரப்பிரசாதம் என்றே குறிப்பிடலாம்.
உடலின் காற்றின் தன்மை அதிகமாவதால், மூட்டுபகுதிகளில் வலியும் ஒருவித விறைப்புதண்மையையும் ஏற்படுகிறது. இதனை வாதம் என்று கூறுவார்கள். அதிமதுரப்பொடியை இரவு முழுவதும் ஊற வைத்த தண்ணீரை குடித்துவரும் பொழுது, மூட்டுகளில் ஏற்படும் வலிகள் குறைகிறது. வாதம் அதிகரிப்பதை அதிமதுரம் கட்டுக்குள் வைக்கிறது.
●சிறுநீரகத்தின் சிறப்பான செயல்பட்டிற்கு,
மனிதனின் வாழ்வில் சிறுநீரகங்கள் நன்றாக செயல்படுவது, ஆரோக்கிய நீண்ட நெடிய வாழ்விற்கு மிகவும் அவசியம். சிறுநீரகத் பாதை தொற்று, புண்கள் இவற்றால் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்க, அதிமதூரப்பொடியை எடுத்துக் கொள்வதால் முழுமையான பலன் பெறலாம். நோய்களை குணமாக்குவதுடன் புண்களை விரைவில் ஆற்றும். சிறுநீரகக் கற்கள் ஏற்படாமலும், ஏற்கனவே ஏற்பட்ட சிறுநீரகக் கற்களை கரைக்கவும் அதிமதுரப் பொடி பயன்படுகிறது.
● சளித்தொல்லை, தொண்டை கரகரப்பிற்கு,
அதிமதுரத்தை வாயில் வைத்து அடக்கி கொள்ளும் பொழுது, அதிக அளவில் உமிழ்நீர் சுரக்கும். அந்த உமிழ்நீரை சிறிது சிறிதாக விழுங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் தொண்டை கரகரப்பு நீங்கி, சளி தொல்லையும் அகலும். அதிக சளி பாதிப்பினால் ஏற்படும் தொண்டைகட்டுதலும் குணமாகிவிடும்.
● தலை முடி மிக நீளமாக வளர,
தேவையான அளவு அதிமதுரத்தை பசும்பாலில் ஊற வைத்து முடியின் வேர்கால்களில் படும்படி, அழுத்தி தேய்க்க வேண்டும். ஒன்றிரண்டு மணிநேரங்கள் அப்படியே தலையில், நன்றாக ஊறவிட வேண்டும். பிறகு தலைக்குளிக்கலாம். இவ்வாறு தலைமுடியை பராமரித்து வந்தால், தலையில் ஏற்படும் புண்கள், சொறி, சிரங்கு முதலியவையும் கூட குணமாகி ஆரோக்கியமாக முடி நீண்டு வளரும். நல்ல கருமை நிறத்தில் அடர்த்தியாகவும் வளரும். இளநரை வழுக்கை முதலியவையும் நாளடைவில் நீங்கிவிடும்.
● வழுக்கை பிரச்சனைகளுக்கு,
அதிமதுரத்தை அம்மியில் போட்டு, எருமைபாலோடு சேர்த்து பொடி செய்து, வழுக்கை உள்ள இடங்களில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து கழுவிவிட, வழுக்கை ஏற்பட்ட இடங்களில் விரைவில் முடிவளரும்.
● ஆண் பெண் மலட்டுதன்மை,
அதிமதுர பொடியை பசும்பாலில் கலந்து, ஒரு ஸ்பூன் அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்களுக்கு நரம்புகள் வலிமை பெறும், தாதுக்கள் உற்பத்தி அதிகரிக்கும். பெண்களின் கருப்பைகோளாறுகள் நீங்கி, விரைவில் கருவுற செய்யும்.
● மலச்சிக்கல் காரணமாக பலருக்கும்,
காலைநேரத்தில் மலம் கழிக்க முடியாமல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. அவர்களுக்கெல்லாம் ஒரு நாளின் தொடக்கமே, வேதனையோடு ஆரம்பமாகிறது. மலச்சிக்கல் பிரச்சனை குணமாக்க, அதிமதுரம், ரோஜா மொட்டுகள், பெருஞ்சீரகம்(சோம்பு) இவற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு நிழலில் உலர்த்தி, பொடி செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதிலிலிருந்து ஒரு கால்ஸ்பூன் அளவிற்கு , இரவில் தூங்குவதற்கு முன்பு சாப்பிட்டு வர, காலையில் மலம் கழிப்பது சுலபமாகி, நாளைடைவில் மலச்சிக்கல் முழுவதுமாக நீங்கிவிடும். வரும் காலங்களில் குடல் பிரச்சனை பாதிப்புகளும் கூட ஏற்படாது.
Licorice benefits |
அதிமதுரம் அழகு குறிப்புகள்:
சருமத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடியது. அதிமதுரத்தை பயன்டுத்துவதால் முகத்தில் உள்ள கருமைகள், கரும்புள்ளிகள், வடுக்கள் நீங்கி ஓர் இரவில் முகம் பளிச்சென மாறிவிடும்.
அதிமதுர பேஸ்பேக்
- அதிமதுரப் பொடி - 1 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
- அரிசி ஊறவைத்த தண்ணீர் அல்லது அரிசி வேகவைத்த தண்ணீர் -1 ஸ்பூன்
இவை மூன்றையும் குழைத்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி, உலர்ந்தபின் வெதுவெதுப்பான நீரில் கழுவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் நல்ல நிறமும், பொலிவும் சருமத்திற்கு கிடைக்கிறது. குறிப்பாக எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு மிகவும் சிறந்த பேஸ்பேக் இது.
எப்பொழுது பயன்படுத்தலாம்?
இந்த பேஸ்பேக்கை வாரம் ஒரு முறை அல்லது மாதம் இருமுறை பயன்படுத்தலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள், நேரமில்லாத காரணத்தினால் சரும அழகில் அக்கறை காட்ட முடியவில்லையே என வருந்துவார்கள். அவர்களுக்கெல்லாம் 'அதிமதுர பேஷியல்' சிறந்த வரப்பிரசாதமாகும் செலவும் நேரமும் கூட குறைவு தான். அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் ரசயாணங்களின் வீரியத்தால் சருமம் பாதிக்கப்படுகிறது. இது போன்ற மூலிகைகள் எல்லாம் எந்த கெடுதலும் செய்யாமல், ஆரோக்கியத்தை தரக்கூடியவை.
பிக்மண்டேஷன் எனப்படும் கருந்திட்டுகள்:
- அதிமதுரப்பொடி -1 ஸ்பூன்
- ஆப்பிள் சைடர் வினிகர் -1 ஸ்பூன்
- கெட்டிதயிர் - 1 ஸ்பூன்
இப்பொழுதெல்லாம் உலகில் பல்வேறு விதமான நோய்கள் உலகையே ஆட்டிப்படைகின்றன. நம்முடைய நாட்டின் ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகளில் சிகிச்சை பெற வெளிநாட்டினரே, அதிகமாக நம் ஊர்களுக்கு வருகிறார்கள். ஆனால் நமது மக்களோ, இரசயானங்கள் நிறைந்த ஆங்கில மருந்துகளை நாடுகின்றனர். நமது இந்தியநாடு மருத்துவ "மூலிகைகளின் சுரங்கம்" என்று குறிபிடப்படுகிறது. ஏராளமான உயிர்காக்கும் மூலிகைகள் நமது நாட்டில் விரவி காணப்படுகிறது. மூலிகைகளின் நன்மைகளை அறிந்து கொண்டு அவற்றை உணவாகவும், மருந்தாகவும், நடைமுறையில் பயன்படுத்தினாலே ஆரோக்கியமாக, நீண்டகாலம் வாழலாம்.
நன்றி!!
இயற்கை விவசாயி!!
திரு.சுதாகர்கிருஷ்ணன்.
1 Comments
Super
ReplyDelete