சொடக்கு தக்காளி - அறிந்ததும் அறியாததும்!!
நம்முடைய சமையலறையின் அஞ்சறைப்பெட்டியினுள்ளே ஆயிரம் ஆயிரம் கைவைத்தியங்களை வைத்திருந்தது நம்முடைய முந்தைய தலைமுறை. ஆனால் நமக்கு சிறிய தலைவலிக்கும் காய்ச்சலுக்கும் ஆங்கில மருத்துவமனைகளில் அதிக செலவு செய்து வைத்தியம் பார்த்தால் தான் மனம் திருப்தி கொள்கிறது.
மாத்திரைகளுக்கு அடிமையாகிவிடும் உடம்பு நம்முடைய சொந்த மூளைக்கும் செவி சாய்ப்பதில்லை; 37 வயதே நிரம்பிய என் நண்பர் சர்க்கரை நோய் மாத்திரை தீர்ந்துவிட்டது. உடனே சென்று வாங்கிவர வேண்டும். மாத்திரை இல்லாமல் எனக்கு அந்தநாளே இயங்காது., என்கிறார். பார்ப்பதற்கே பாவமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. 80,90 -வயதுகளில் வர வேண்டிய நோய்களெல்லாம் இன்று 30-வயதிலே வர துவங்கிவிடுகிறது. இதற்கெல்லாம் காரணம் மறந்து போன அஞ்சறைபெட்டியின் அற்புதமும், மூலிகைகளின் மருத்துவமும் தான்!!.. மூலிகைகளில் தலை முதல் கால்வரை மருத்துவம் உள்ளது. இயற்கையிடம் இல்லாத மருத்துவம் என்று ஒன்றுமே இல்லை;
எங்களுடைய இந்த வலைதளத்தில் பல அற்புத மூலிகைகளை பற்றிய பதிவுகள் உள்ளது.
- பூனைக்காலி
- பிரண்டை
- திருநீற்றுப்பச்சிலை
- தும்பை பூ
- புதினா
- துளசி
- வெற்றிலை
- பச்சைசுண்டைக்காய்
- மூக்கிரட்டை
- கொத்தமல்லிகீரை
- குப்பைமேனி
- அம்மான்பச்சரிசி
- கல்யாணமுருங்கை
- செம்பருத்தி
- வல்லாரைகீரை
இந்த வரிசையில் "நாமெல்லாம் சிறிய வயதில் விளையாடி மகிழ்ந்த சொடக்கு தக்காளி தாவரத்தின் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
கூகுளில் தேடிபாருங்கள்; வெளிநாடுகளில் இதன் விலை 27,000-ரூபாய்.
மாடிதோட்டத்திலும் கூட சொடக்கு தக்காளி தாவரத்தினை சுலபமாக வளர்க்கலாம். பராமரிப்பே இல்லாமல், பெரிதாக பூச்சி தாக்குதல் ஏதுமின்றி சுலபமாக வளரக் கூடிய தாவரம் இது.
சொடக்கு தக்காளியின் பயன்கள்:
சொடக்கு தக்காளியை உணவாக எடுத்துக்கொள்ளும் போது, பல்வேறு நன்மைகளை உடல் பெறுகிறது. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. கெட்டகொழுப்புகளை அகற்றுகிறது. சொடக்கு தக்காளியின் நன்மைகள் அளப்பரியது. சொடக்கு தக்காளியின் இலைகளையும் காய்களையும் மஞ்சள் சேர்த்து அரைத்து கட்டிகள் மேல் போட்டு வர, வீக்கமும் வலியும் குறைந்து, கட்டிகள் ஓரிரு நாளில் முழுவதும் குணமடையும். சொடக்கு தக்காளி பழங்கள் சிறந்த சிறுநீர் பெருக்கி ஆகும். நுரையீரல் தொடர்பான தொற்றுகளையும் குணமாக்க உதவுகிறது.
உடல்எடைகுறைப்பு:
உடல் எடை குறைப்பில் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. நீங்கள் உடல் எடை குறைப்பில் பல பயிற்சிகள் எடுத்து கொண்டாலூம் உடல் எடையை குறைக்க முடியாமல் சில நேரங்களில் சோர்வு அடைந்து விடுவீர்கள். ஆனால் சொடக்குதக்காளி உங்களை ஏமாற்றாது. தக்காளி பழங்களை பச்சையாகவே கூட பறித்து சாப்பிடலாம். சாலட், குழம்பு வகைகளிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். உடல் எடை நீங்கள் நினைத்ததை விடவே வேகமாக குறைய ஆரம்பிக்கும். உடல் எடை குறைப்பில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் அறிந்த ஒன்று வைட்டமின் சி உணவுகள் உடல் எடையை வேகமாக குறைக்கும் என்பது. அதனால் தான் வைட்டமின் சி அதிகம் நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சுபழம்,நெல்லிகனிகள் போன்ற உணவுகளை உடல் எடை குறைப்பில் அதிகமாக பயன்படுத்துகின்றோம். சொடக்கு தக்காளியில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளதால் உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது.
கண்பார்வை குறைபாடுகள் தீர்வு:
அதிக நேரம் கம்ப்யூட்டர், செல்போன் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் உடல் சூட்டையும் கண்பார்வை கோளாறுகளையும் குணப்படுத்துவதற்கு சொடக்கு தக்காளி பழங்கள் சித்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. கண் மருத்துவத்தில் மிக முக்கிய இடம் வகிக்கிறது; ஏனென்றால் இதில் உள்ள
கரோட்டினாய்டுகள் மற்றும் வைட்டமின் ஏ
கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்கிறது. ஒரு பெரிய முழு கேரட்டில் கிடைக்கின்ற சத்துக்கள் அனைத்துமே சிறிய ஐந்து சொடக்கு தக்காளி பழங்களில் உடலுக்கு கிடைத்து விடுகிறது. அதனால் தவறாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண் ஆரோக்கியத்தை காக்க வேண்டும் என, எண்ணுகிறவர்கள் சொடக்கு தக்காளியை உணவில் இப்பொழுதிருந்தே சேர்த்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.
சர்க்கரை நோய்:
சர்க்கரை நோய் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களும் சர்க்கரை நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களும் உணவில் சொடக்கு தக்காளி பழங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் சர்க்கரையின் அளவை குறைப்பதுடன், சீராகவும் வைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுகிறது. ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி சொடக்கு தக்காளியில் சோடியம் மற்றும் கொழுப்புகள் இல்லை. எனவே சர்க்கரை நோயாளிகள் தாராளமாக இந்த பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயால் ஏற்படும் புண்கள், ஆறாத புண்கள் இவற்றையும் குணமாக்க சொடக்கு தக்காளியின் இலைகள் பயன்படுகிறது. இந்த இலைகளோடு தேங்காய் எண்ணெய் காய்ச்சி புண்கள் மீது தடவி வந்தால் நாளடைவில் புண்கள் வற்றி காயம் குணமாகிறது.
சளி இருமல் காய்ச்சல்:
வானிலை மாற்றத்தாலும் ஒவ்வாமை காரணமாகவும் சிலர் அடிக்கடி சளி இருமல் காய்ச்சல்களால் பாதிப்புக்குள்ளாவார்கள். சொடக்கு தக்காளியில் உள்ள வைட்டமின் சி - நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்குகிறது. சளி பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க தக்காளி பழங்களில் ரசம், சூப் போல செய்து சாப்பிட்டு வரலாம். சொடக்கு தக்காளியின் இலைகளையும், கனிகளையும் இடித்து, அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு டம்பளர் அளவு எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
புற்றுநோய்:
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சொடக்கு தக்காளியை எடுத்துக் கொள்ளும் பொழுது புற்றுநோய் செல்கள் உடல் முழுவதும் அதிகம் பரவாமல் அதனுடைய வீரியத்தைக் குறைக்கிறது. சொடக்கு தக்காளியில் மிகவும் அரிதான விதனலைட்ஸ் என்னும் வேதிப்பொருள் உள்ளது. அதனால் தான் இதன் விலை வெளிநாடுகளில் கிட்டதட்ட 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்றைய காலகட்டங்களில் உலக அளவில் பல கோடி பேர் புற்றுநோயால் பாதிப்பு அடைந்துள்ளனர். வருமுன் காப்பதே சிறந்தது என்பது நம் தமிழர்களின் வழக்கு. எனவே புற்றுநோயை வரவிடாமல் தடுக்க இப்பொழுதிலிருந்தே சொடக்கு தக்காளி பழங்களை உணவில் பயன்படுத்துவோம். பெண்களுக்கு அதிக பாதிப்பை கொடுக்கும், மார்பக புற்றுநோய் ஏற்படாமலும் தடுக்கிறது.
எலும்புகளை பலப்படுத்துகிறது:
சொடக்கு தக்காளியில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது. மேலும் தக்காளியிலுள்ள பெக்டின் என்கிற வேதிப்பொருள் எலும்புகளுக்கு தேவையான அளவு கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதனால் ஹெமாட்டிசம் மற்றும் டெர்மாட்டிஸ் போன்ற எலும்பு தொடர்பான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. மூட்டுவலியால் அவதிபடுபவர்களும் எடுத்துக்கொள்ளலாம். வலியின் தீவிரத்தை உடனடியாக குறைக்க உதவுகிறது.
Sodakku Thakkali health benefits |
மலச்சிக்கல்:
உடல் செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல் போன்றவற்றை சரி செய்கிறது. செரிமான மண்டலம் குடல் இயக்கங்களை சீராக வைக்க உதவுகிறது. சொடக்கு தக்காளியில் அதிகம் நார்ச்சத்து உள்ளதால் வயிறு உபாதைகள் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல பலனைத்தரும். உணவு எளிதில் ஜூரணமாகவும் உதவுகிறது.
இரத்தசோகை, அனிமீயா:
சொடக்கு தக்காளி பழங்களில் இரும்புச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. இதனால் ரத்த சோகை அனீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சொடக்கு தக்காளி பழங்களை தினமும் சாப்பிடுவது சிறந்த பலனை கொடுக்கும். அதிக விலை கொடுத்து இரும்பு சத்து மாத்திரைகளை சாப்பிட்டு வருவதால் சில பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது என்பது மறுக்கப்படுவதற்கில்லை. ஆனால் இயற்கை கொடுத்த அற்புதங்களில் பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை.
நினைவாற்றல்:
சொடக்கு தக்காளி பழங்களை சாப்பிட்டு வருவதால் நினைவாற்றல் மூளைசெறிவுத்திறன் அதிகரிக்கிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அல்சைமர், டிமென்ஷியா போன்ற மூளை தொடர்பான நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
தாய்பால் அதிகரிக்க:
பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்க, இலைகளை பசைபோல அரைத்து மார்பின் மீது பூசிவர தாய்பால் சுரப்பு அதிகரிக்கும்.
சொடக்கு தக்காளியில் ஆரஞ்சு மற்றும் தங்க நிற பழங்களும் உள்ளது. ஆனால் பரவலாக நம் நாடுகளில் பச்சை நிற பழங்கள் தான் அதிகம் காணப்படுகிறது. ஆனால் அனைத்து வகைகளும் ஒரே சத்துக்களை உடையதே. இதுவரை நீங்கள் பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஏன் சொடக்கு தக்காளி செடியினை பார்க்காதவர்கள் கூட இருக்கலாம். இது மழைக்காலம். தானாகவே நடைபாதைகளில் வளர்ந்துகிடக்கும். தேடி பாருங்கள். ஒன்று இரண்டு விதைகள் போதும். மாடிதோட்டத்தில் சுலபமாக வளர்க்கலாம். இதன் பயன்களை தெரிந்து கொண்ட பிறகும், பயன்படுத்தாமல் இருக்கலாமா?.
நன்றி!!🙏🙏🙏
இயற்கை விவசாயி!!
திரு.சுதாகர்கிருஷ்ணன்!!
2 Comments
அண்ணா அருமையான பதிவு இது நம்ம தோட்டத்தில் நிறைய இருக்கிறது
ReplyDeleteநன்றி
ReplyDelete