Translate

MUSHROOM BENEFITS

 காளான் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா!


Sudagarkrishnanchannels
Mushroom Benefits 


 வெள்ளைநிற உணவுகளான சர்க்கரை, மைதா, வெள்ளை உப்பு, அஜினமோட்டோ போன்றவை விஷமாக கருதப்பட்டாலும், அவற்றிலிருந்து வேறுபட்டு, வெள்ளை உணவான காளான், அதிக ஊட்டசத்துக்கள் கொண்டதாக திகழ்கிறது. "தி பிண்டரஸ்ட் டயட்" என்ற நூலின் ஆசிரியரான மிடிஸி, காளானில் செலினியம், பொட்டாசியம், தாமிரம் இரும்பு, பாஸ்பரஸ் போன்ற பல்வேறு தாதுக்கள் உள்ளது. இவை பொதுவாக தாவர உணவுகளில் கிடைப்பதில்லை என்று கூறுகிறார்.


 காளான் என்பது மண்ணில் வளரும் ஒரு பூஞ்சை தாவரமாகும். உலகின் பல நாடுகளிலும் அதிகமாக விரும்பி உண்ணப்படுகின்ற உணவான காளான், எல்லாவித சூழ்நிலைகளிலும் வளரக் கூடியதாகும். உலகின் பல நாடுகளில் காளான் முறையாகப் பயிர் செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பொழுது காளான் வளர்ப்பு குடிசை தொழிலாகவும் செய்யப்படுகிறது. குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் தொழிலாக காளான் வளர்ப்பு உள்ளது.
கிழக்கு இமயமலைப் பகுதியான சிக்கிமில் காளான் அதிகமாக காணப்படுகிறது.
இயற்கையாக உருவான காளான்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதனின் உணவு பயன்பாட்டில், இருந்து வந்திருக்கிறது. இன்றைய பதிவில் காளான் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளுவோம்.


காளான் வளர்ச்சி:

   காளான்களில் பச்சையம் இல்லாததால், தனக்கு வேண்டிய உணவை ஒளிச்சேர்க்கை மூலமே காளான்கள் பெறுகிறது. எனவே காளான்கள் தங்கள் உணவிற்கு பிற உயிரினங்களை சார்ந்து இருக்க வேண்டி உள்ளதால், இவை ஒட்டுண்ணிகளாகவோ, சாறுண்னிகளாகவோ மரத்தின் மீதோ, காய்கறிகள் பழங்கள் மீதோ வாழ்கின்றன. 

காளான்களின் இனப்பெருக்கம் :

 மற்ற தாவரங்களைப் போல காளான்களுக்கு இலை பூ காய் கனி என்று எதுவுமில்லை எனவே காளான்கள் விதை தூள் மூலமே இனப்பெருக்கம் செய்கிறது. இவற்றின் இனப்பெருக்கம் எவ்வளவு வேகமாக நடைபெறுகிறதோ, அவ்வளவு விரைவாக அழியவும் நேரிடுகிறது.
 

காளானின் வகைகள்:

     காளானில் பல வகைகள் உள்ளது. நாட்டு காளான் தொடங்கி,. பால் காளான், அரிசி காளான், மொட்டை, மொக்கு சிப்பி, பூஞ்சைகாளான், நாய்குடை காளான் என, மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட காளான் வகைகள் உள்ளது. அதில் குறிப்பிட்ட சிலவகை மட்டுமே உண்ணதகுந்தவை.  பல காளான்கள் நச்சுதன்மை கொண்டவையாக உள்ளது. 
காளானில், சிப்பி காளான், வைக்கோல் காளான், பட்டன் காளான், மொக்கு காளான் இவையே உணவிற்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

பேக்கரி பொருட்கள் தயாரிப்பதிலும், பீர் தயாரிப்பதிலும் ஈஸ்ட் காளான் பயன்படுகிறது. ஆனால் இந்த ஈஸ்ட் காளான்தான் வாய்ப்புண் மற்றும் தொண்டை பகுதியில் புண்கள்  ஏற்படுத்தி, தொல்லை கொடுக்கிறது.

காளான் தரும் அளவில்லாத நன்மைகள்:

   காளானில் எண்ணிலடங்கா சத்துக்கள் உள்ளதால், இறைச்சிக்கு இணையான ஒரு உணவுப் பொருள் என்று காளானை குறிப்பிடலாம். 100 கிராம் காளானில் 35 கிராம் புரதச்சத்து உள்ளது. பொதுவாக புரதச்சத்து, முட்டை மற்றும் இறைச்சியில் காணப்படுகிறது. ஆனால் அசைவ உணவுகளில் புரதச் சத்து மட்டுமில்லாமல், கொழுப்புச் சத்தும் உள்ளது.  காளானில் புரதம் மட்டுமே உள்ளது, கொழுப்புச்சத்து இல்லை. இதனால் உடல் எடையும், கெட்ட கொழுப்பு சேர்வதில்லை. எனவே தான் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதயநோய், மலச்சிக்கல், மற்றும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. இன்றியமையாத எட்டு அமினோ அமிலங்கள் காளானில் உள்ளது. காளான் உணவுகள் எளிதில் செரிமானம் அடைகின்றன. இதனால் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் இந்த உணவுகளை கொடுக்கலாம்.
காளானை சூப் செய்து சாப்பிட்டு வந்தால், அம்மை, விஷக்காய்ச்சல், காலரா, மலேரியா போன்றவை குணமாகும். 
மூட்டு பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகும்.

👉 மற்ற காய்கறிகளிலிருந்து, பெற முடியாத  உயிர்சத்தான, உயிர்சத்து டி காளானில், அதிகமாக பெற படுகிறது.

● எலும்புகள் வளர்ச்சிக்கு உதவுகிறது:

  காளானில் செலீனியம் ரசாயன மூலக்கூறுகள் அதிகமாக உள்ளது. அதனால் காளான் சாப்பிடுவதால், உடலில் செலினீயம் சத்து அதிகரிப்பதால், தலைமுடி, எலும்புகள், பற்கள் இவற்றின் உறுதி தன்மைக்கும் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

● இரத்தசோகை:

 ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காளான் சிறந்த உணவாகும். காளான் சாப்பிடுவதால் உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கிறது. இதில் நிறைந்திருக்கும் இரும்புசத்தை உடல் வேகமாக கிரகித்துக்கொள்வதால், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, சோகை நோய் கட்டுப்படுத்தப் படுகிறது. உடலும் பலம் பெறுகிறது.

● கெட்டகொழுப்பை குறைக்கிறது:

   காளான் அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு, உடலில் தேவையில்லாத நச்சுக்களும் கெட்ட கொழுப்புகளும் சேர்வதில்லை. கொலஸ்ட்ராலின் அளவை சரியான விதத்தில் பராமரித்து, உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது.

● நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது:

     
      ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதற்கு மிகச்சிறந்த உணவாக காளான் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் தினமும் ஏ சிறிதளவு காளானை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

ஏர்கோத்தியோனின் என்ற மூலப்பொருள் காளானில் அதிகமாக உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்புதிறனை அதிகரிக்கிறது.

● புற்றுநோய்க்கு மருந்து:

    காளான் புற்று நோய்க்கு சிறந்த மருந்தாக திகழ்கிறது. நோய் பரவும் தன்மையையும் குறைக்கிறது. புற்று நோய் பாதித்தவர்கள் காளான் சாப்பிட்டு வந்த பொழுது, நல்ல பலன் கொடுத்ததாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.  அதிலும் குறிப்பாக மார்பக புற்றுநோய், ப்ராஸ்ட்ரேட் போன்ற நோய்களால் பாதிக்கபட்டவர்களுக்கு, புற்றுசெல்களை அழிக்கும் ரசாயனங்கள் காளானில் உள்ளது.

●இரும்புசத்து, செம்பு சத்து இரண்டும் காளானில் அதிகமாக இருப்பதால், இரும்புசத்து
சீரான இரத்த ஓட்டத்திற்கும், புதிய இரத்தம் உருவாவதற்கும், காயங்கள் ஆற்றுவதற்கும் உதவுகிறது. செம்புசத்து
ஈரலின் பணிகளை திறம்பட செய்ய ஊக்குவிக்கிறது.


உணவாக உண்ணப்படும் காளான்களில் பலவகை உள்ளது. அனைத்திலும், அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளது. பொட்டாஷியம் நரம்பு மற்றும் இரத்த நாளாங்களின் இறுக்கத்தை குறைக்கிறது. மேலும், இரத்த உயர் அழுத்தம் பிரச்சனைகளை குணமாக்குகிறது. 

   

Sudagarkrishnanchannels
Mushroom Benefits 

● வாய்புண், வயிற்றுப்புண், ஆசனவாய் புண்களுக்கு சிறந்த அருமருந்தாகும்.

● கடுமையான காய்ச்சலால் உடல் பலத்தை இழந்தவர்களும், உடல் இளைத்தவர்களும், காளானை பச்சை பட்டாணி, கோஸ் போன்ற மற்ற உணவுகளுடன் சமைத்து சாப்பிட்டு வர இழந்த பலம் மீண்டும் பெறலாம்.

● குழந்தை பேரு இல்லாதவர்களும் கர்ப்பப்பை வாய் புற்று நோய் உள்ளவர்களும் காளானைப் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்த பலனைத் தரும்.


காளான் தீமைகள்:

காளான் யாரெல்லாம் சாப்பிடக் கூடாது? அதன் தீமைகள் என்ன?

     இவ்வளவு நன்மைகளை காளான் கொடுத்தாலும் இதனால் சில கெடுதல்களும் இருக்கத்தான் செய்கிறது. காளானை சரியான முறையில் பயன்படுத்தாவிடில், அலர்ஜி முதல் உயிரிழப்பு வரை ஏற்படுகிறது. சரியான காளானைை தேர்வு செய்து, போதுமான அளவு பயன்படுத்தினால், அது அருமருந்தாகும். இல்லையெனில் அதுவே கொடிய விஷமாகிவிடும்.

 • காளானை சமைப்பதற்கு முன், காளானை சுத்தம் செய்து மிதமான வெந்நீரில், எலுமிச்சை பழச்சாறு கலந்து, சுத்தப்படுத்திய காளான்களை அதில் ஐந்து நிமிடங்கள் சேர்க்க வேண்டும். ஏனெனில் காளான் வெளிப்புறத்தில் உள்ள ஆக்ஸிஜனுடன் வினை புரிந்து கருப்பாக மாறிவிடும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் காளான் கருப்பாவதை தடுக்கிறது. கருப்பு நிறமடைந்த காளான்களை, சமையலுக்கு பயன்படுத்த கூடாது. வெந்நீரில் அலசிய பிறகு, ஒரு மெல்லிய துணியில் உலர்த்தி, ஈரம் காய்ந்த உடன் சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.
 • கடையில் வாங்கிய காளானை, மூன்று நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம். ஆனால் ஃப்ரீசரில் வைக்கக்கூடாது. பயன்படுத்திய மீதமுள்ள காளான்களை ஒரு இறுக்கமான காற்றுப்புகாத டப்பாவில் மூடியிட்டு வைத்து பயன்படுத்தலாம். பிசுபிசுப்பாக காளான் இருந்தால் பயன்படுத்தக்கூடாது.
 • காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் தாய்மார்கள் அவசியம் தவிர்த்துவிட வேண்டும்.
 • காளானில் பியூரின் சத்து அதிகமாக உள்ளதால் கீல்வாத நோய் உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடாது காளானை நன்கு சமைத்த பிறகே சாப்பிட வேண்டும்
 • காளான் மிகவும் நன்மைகள் வழங்க கூடிய பொருளாக இருந்தாலும், எல்லோராலும் சாப்பிட்டு விட முடியாது. சிலருக்கு சரும அலர்ஜி பிரச்சனைகள் இருக்கும். இவர்கள் காளானை தவிர்ப்பது சிறந்தது. அரிப்பு தடிப்பு போன்றவை சருமத்தில் ஏற்பட வாய்ப்புள்ளது.
  

காளான் பிரியாணி:


Sudagarkrishnanchannels
Mushroom  Benefits 


    சைவ பிரியாணிகளில் எத்தனையோ வகைகள் இருந்தாலூம் காளான் பிரியாணி போன்ற சுவையை எந்த பிரியாணியும் கொடுப்பதில்லை. மஷ்ரும் பிரியாணி சுவையில், மட்டன் பிரியாணியை ஒத்திருக்கும். அதிக ஊட்டசத்துக்களும், சுவையும் கொண்ட மஷ்ரும் பிரியாணி சமைப்பது எப்படி, என தெரிந்து கொள்ளுவோம் வாருங்கள். ஒருமுறை நான் குறிப்பிட்டுள்ள, இந்த முறையில் சமைத்து பாருங்கள். உங்கள் குழந்தைகளும் குடும்பத்தினரும் உங்களை பாரட்டி கொண்டாடுவார்கள். அப்பறம் அவர்களின் பேவரைட் உணவாக மஷ்ரும் பிரியாணி மாறிவிடும்.

தேவையான பொருட்கள்:

 • மஷ்ரூம் - ஒரு பாக்கெட்
 • வெங்காயம் - 1 பெரிய சைஸ்
 • தக்காளி -3 பழமாக
 • தயிர் - 100 கிராம்
 • இஞ்சி பூண்டு அரவை - 3 ஸ்பூன்
 • பாஸ்மதி அரிசி - 3 கப்
 • உப்பு - தேவையான அளவு
 • புதினா+கொத்தமல்லி- ஒரு கைப்பிடி
 • பச்சைமிளகாய் -2
 • தனிமிளகாய் தூள் -1 ஸ்பூன்
 • பிரியாணி மசாலா பொடி - 1/2 ஸ்பூன்
 • சிக்கன் மசாலா பொடி -1 ஸ்பூன்


தாளிக்க:

 • கடலை எண்ணெய் - 1 குழி கரண்டி அளவு
 • பட்டை- 2 இஞ்ச்
 • இலவங்க பூ -3
 • பிரியாணி இலை -1
 • சோம்பு - 1/2 ஸ்பூன்
 • ஸ்டார் அன்னாசி -1


செய்முறை:

    ந்த அளவு மூன்று பேருக்கு சரியாக இருக்கும். நீங்கள் எத்தனை நபர்களோ, அவற்றிற்கேற்ப பொருட்களை அதிகபடுத்தி கொள்ளுங்கள்.

  குக்கரில் அல்லது அடிகணமான பாத்திரத்தில் ஒரு குழி கரண்டி அளவு கடலை எண்ணெய் சேர்த்துகொள்ளவும். எண்ணெய் சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பட்டை, லவங்கம் பிரியாணி இலை, சோம்பு, ஸ்டார் அண்ணாச்சி இவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். ஒரு பெரிய சைஸ் வெங்காயத்தை நீளவாக்கில் அறிந்து சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கியதும் இரண்டு பச்சை மிளகாய்களை விதைகள் நீக்கி, கீறி சேர்த்துக் கொள்ளவும். ஒரு கைப்பிடியளவு புதினா கொத்தமல்லி தழைகளை சேர்த்துக்கொள்ளவும்.

தங்கிய வெங்காயத்துடன் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு அரவையை சேர்த்து கொள்ளவும். இஞ்சி பூண்டு பச்சை வாசனை போக வதக்கி கொள்ளவும். நன்கு பழுத்த தக்காளிப் பழங்களைப் பொடியாக நறுக்கி, நன்றாக வதக்கிக் கொள்ளவும். தக்காளி நன்கு வதங்க சிறிதளவு உப்பு சேர்த்துகொள்ளவும். இவ்வாறு செய்வதால் சுவையும் அதிகரிக்கும். வெங்காயமும், தக்காளியும் தொக்கு பதத்திற்கு வதங்கியதும் 100 கிராம் அளவு தயிரை சேர்த்துக் கொள்ளவும். இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.  

ப்பொழுது சுத்தம் செய்து வைத்திருக்கும் காளான்களை சேர்த்து வேக விடவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. காளான் வேகும் போது தண்ணீர் பிரியும். காளான் 5 நிமிடங்கள் வெந்த பிறகு, மீதமுள்ள தண்ணீரை கணக்கு வைத்து, ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு, 1 1/2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். இந்த தண்ணீரில் போதுமான அளவு உப்பு சேர்த்து, உப்பு சரிபார்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பாத்திரத்தில் செய்வதாக இருந்தால், ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு, ஒன்னேமுக்கால் கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

 ண்ணீர் நன்கு கொதித்ததும், ஒரு ஸ்பூன் தனி மிளகாய் தூள், அரை ஸ்பூன் பிரியாணி மசாலா பொடி, ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி சேர்த்து கொள்ளவும். நன்றாக கலந்து விட்டு, உப்பும் காரமும் சரிபார்த்து கொள்ளவும். மசாலா பொடிகள் அதிகமாக சேர்க்க கூடாது. சிறிய ஸ்பூனில் எடுத்து கொள்ளவும்.

ப்பொழுது அரை மணிநேரம் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து, குக்கரை மூடி ஒரு விசில் வைக்கவும். அடுப்பை அணைத்து, முழு பிரஷர் குறைந்ததும், குக்கரை திறந்து சாதம் உடையாமல் கிளறி விடவும். இப்பொழுது சூப்பரான மஷ்ரூம் பிரியாணி தயார்.

ஷ்ரும் பிரியாணியுடன் சாப்பிட தயிர் வெங்காய பச்சடி சூப்பராக இருக்கும். 

பாத்திரமாக இருந்தால், ஏழு நிமிடங்கள் அதிக அணலிலும், தண்ணீர் ஓரளவு குறைந்ததும் 15-நிமிடங்கள் தம்மிலும் {சிறிய தீயில்} வைக்க வேண்டும். 15- நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைத்து, பிரியாணியை திறந்து உடையாமல் கிளறிவிடவும்.
"நேற்று மழையில் முளைத்த காளான் நீ" என்று ஒரு பழமொழி கிண்டலாக சொல்வார்கள், இனி யாரையும் அப்படி சொல்லி விடாதீர்கள். ஏனெனனில் காளானின் பயன்கள் தாவர உணவுகளிலே இல்லை எனவும், தாவர உதவுகளின் கீரிடம் எனவும் போற்றபடுகிறது காளான்கள். காளான் உணவுகளை இன்றே குழந்தைகளுக்கு சமைத்து கொடுங்கள்!! 

ஆரோக்கியவாழ்வே!! அளவில்லாத சொத்து!!

நன்றி!! அன்புடன்,
இயற்கைவிவசாயி,
திரு.சுதாகர்கிருஷ்ணன்.

சமையல்குறிப்பு,
திருமதி.இந்திராபிரியதர்ஷினி.
Post a Comment

0 Comments