Translate

Velvet Beans Benefits

        பூனைக்காலியின் பயன்கள் மற்றும்  பயன்படுத்துவது எப்படி?


             Monkey Tamarind/ பூனைக்காலி: அறிவியல் பெயர் : Mucuna pruriens ஆங்கில பெயர் : velvet bean 
 இந்த தாவரம் பபேசியே வகையச்சார்ந்த ஆப்பிரிக்க, ஆசியா போன்ற இடங்களில் வளரும் தகவமைப்பு கொண்டதாகும்.


Sudagar krishnan channels
Velvet beans Benefits 


  இன்று காலை நான் முகநூல் பக்கத்தை பார்த்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு விளம்பரம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அமேசான் வலைதளத்தில் 100-கிராம் பூனைகாலி விதைகள் 125-ரூபாய் என்று. அவ்வாறெனில் 1கிலோ 1000 ரூபாய்க்கும் மேல். என்ன கொடுமை பார்த்தீர்களா!! நண்பர்களே. பூனைகாலி தாவரம் கிராமப்புறங்களில் வேலிகளில் சாதரணமாக படர்ந்து வளர்ந்துகிடக்கும். இதற்கு காரணம் அமேசான்காரனோ அவனோ, இவனோ எவனோ இல்லை. நாம் தான். மறந்து போன அருமையான மூலிகை தாவரம் பூனைக்காலி. 

  உங்களுக்கு நிச்சயமாக பூனைகாலி பற்றி சொல்லியே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த பதிவை பதிவிட்டிருக்கிறேன். இந்த பதிவை படித்து இதன் அற்புதங்களை நீங்கள் தெரிந்து கொண்ட பின்னர்,.. நிச்சயமாக நம்ம மாடி தோட்டத்தில் இந்த தாவரத்தை வளர்க்க வேண்டும் என, உங்களுக்கு எண்ணம் ஏற்பட்டால் விதைகளை உங்களுக்கு நான் அனுப்பி வைக்கிறேன். ஆம்! உறவுகளே, உங்களுக்காகவே பயிற்சி தோட்டத்தில் அதிகளவு பயிரிட்டு விதைகளை சேகரித்து வைத்திருக்கிறேன்.

வாருங்கள் கட்டுரையில் பயணிப்போம்!!

பூனைக்காலி வெல்வெட் பீன்ஸ்:


    பார்பதற்கு புளியங்காய் போலவே காட்சி அளிக்கும் பூனைகாலி சுவையில் உருளைகிழங்கு போன்று இருக்கும். காரகுழம்பு, சாம்பார், பொரியல் என அன்றாடம் சமைக்கும் உணவுகளில் தாராளமாக பயன்படுத்தலாம். வெப்பமண்டல பகுதிகளில் குறைந்த தண்ணீரிலே வளரக் கூடிய தாவரமிது. விவசாய நண்பர்களே! உங்கள் நிலங்களில் கண்டிப்பாக இந்த பயிரை பயிரிடுங்கள். லாபம் கணிசமாக பெறலாம். பூனைக்காலி 170-நாளிலிருந்து 180-நாளில் அறுவடைக்கு தயாராகிவிடுகிறது.  பூனைகாலியை அறுவடை செய்த நிலங்களில் காணப்படும் மண்ணில் அதிகளவில் நைட்ரஜன் சத்துக்கள் நிறைந்திருக்கும். அறுவடைக்குப்பிறகு கீரைகளை விதைக்கலாம். அதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல, கீரைகளிலும் லாபத்தை நீங்கள் எட்ட முடியும். ஹோமியோபதி மற்றும் சித்தமருத்துவத்தில் பூனைகாலியின் தேவை அதிகமாக இருப்பதால் கிலோ 1000 ரூபாய் விலைக்கு வாங்கப்படுகிறது. 

       மாடிதோட்டத்தில் வளர்க்கும் போது இரண்டு அடி  அகலமான இரண்டு அடி ஆழமான பைகளில் வளர்ப்பது நல்லது. ஒரு பையில் இரண்டு விதைகளே போதுமானது. மண்கலவையில் தொழு உரம் அல்லது ஆட்டு உரம் சேர்த்துக் கொள்ளலாம். இவை இரண்டும் இல்லை என்றால் மண் புழு உரம் சேர்க்கலாம். பூனைக்காலி கொடி அதிகமாக படரும் என்பதால் பந்தல் போடுவது அவசியம். முக்கியமாக இந்த கொடிக்காக தனியாக பந்தல் அமைக்கவேண்டும். ஏனென்றால் இந்த கொடி அதிகமாக படரும். ஒரு முறை வைத்தால் மூன்று வருடம் தொடர்ந்து பலன் தரும். கீழே வைக்கும் போது மரத்தில் கூட ஏற்றி விடலாம். இதை கேரளாவில் அதிகமாக வளர்க்கிறார்கள். இதற்கு உரம் என்று பார்த்தால் ஆரம்பத்தில் கொடுக்கும் உரமே போதுமானது. தேவைபட்டால் அமிர்த கரைசல், ஜீவாமிர்தம் பஞ்சகவ்யம் கொடுக்கலாம். பூக்கள் பூக்கும் தருணத்தில் மீன் அமினோ அமிலம் அல்லது தேமோர் கரைசல் இலை வழியாக கொடுக்கலாம். பூச்சி தாக்குதல் என்று பார்க்கும் பொழுது பெரியதாக எந்த பூச்சிகளும் வருவதில்லை. அசுவினி பூச்சிகள் தொல்லைகள் எப்போதாவது இருக்கும். அதற்கு இஞ்சி பூண்டு மிளகாய் கரைசலை தெளித்து கட்டுப்படுத்தலாம். 

பூனைகாலியின் வியக்க வைக்கும் பயன்கள்:



Sudagar krishnan channels
Velvet beans Benefits 


குழந்தைஇன்மை,ஆண்மை குறைவு:

   இப்பொழுது எங்கு திரும்பினாலும் குழந்தை இன்மைக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் தான். குழந்தை இன்மை, மலட்டு தன்மை தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்ய பூனைக்காலி காயையோ அல்லது பொடியையோ வாரம் இருமுறை உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும். ஆண்மை குறைவு பிரச்சனைகளை குணமாக்கி விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. சித்த மருத்தும் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தில் ஆண்மை குறைவிற்காக தயாரிக்கப்படும் மருந்துகளில் பெரும்பான்மை பங்கு வகிக்கிறது. பூனைகாலி விதையுடன் நெல்லிக்காய் பொடி பனங்கற்கண்டு சேர்த்து தினமும் சாப்பிட ஆண்மை கோளாறுகள் நீங்குகிறது.

நரம்பு தளர்ச்சி, கைகால் நடுக்கம்:

    பார்கின்சன் சின்ட்ரோம் Parkinson's Disease எனப்படும் கைகால் நடுக்கம் நோய்க்கு அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் கூட மருந்து கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இந்த கைகால் உதறல் நோய் 60 வயதிற்கு மேற்பட்டவர்களை முன்பெல்லாம் அதிகம் பாதித்தது. ஆனால் தற்பொழுது 40-வயதினரையும் பாதிக்கிறது. உலகில் கிட்டதட்ட 10-மில்லியன் பேரை இந்த நோய் அதிகம் பாதித்துள்ளது. மூளையில் நியுரான் நரம்பு திசுக்கள், உடல் இயக்கம், நோய் எதிர்ப்பு திறன், மனநலம் இவற்றையெல்லாம் பாதித்து உடல் இயக்கமே அற்ற நிலை ஏற்படுகிறது. டோபாமைன் என்ற வேதிபொருளின் சுரப்பு குறைவு காரணமாகவே நரம்பு தளர்ச்சி கைகால் உதறல் ஏற்பட்டு, நோய் பாதித்தவர்கள் செயலற்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
 மேலை நாடுகளே மருந்து கண்டுபிடிக்காத நோய்க்கு மிகப்பெரிய மருந்தாக சித்த மருத்துவத்தில் பூனைக்காலி திகழ்கிறது. எவ்வளவு அற்புதமான விஷயம். பூனைகாலியில் அதிகளவு டோபாமைன்  வேதிபொருள் நிறைந்துள்ளது. இந்த பூனைகாலி விதைகளை தண்ணீரில் இட்டு கஷாயம் போல காய்ச்சி குடித்துவந்தால் நடுக்க வியாதிகளுக்கு குட்பை சொல்லி விடலாம். 

சர்க்கரை நோய் மற்றும் ஹைப்போதைராய்ட்:
    

    சர்க்கரை நோய் பாதித்தவுடன் வாழ்கையே பாழாய் போய்விட்டது என்று வருத்தப்படுபவர்கள் ஏராளம். மருந்து மாத்திரைகளுடனே வாழ்க்யை கழிக்க வேண்டும் என்கிற எண்ணத்தினால் சர்க்கரை நோய் பாதித்தவர்கள் வாழ்கையையே வெறுக்கும் சூழல். பூனைகாலி காயையோ கொட்டைகளையோ உணவில் சேர்த்துக்கொள்ளும் போது சர்க்கரை நோய் கட்டுபடுத்தப்படுகிறது. வராமலும் தடுக்கப்படுகிறது.
   ஹைப்போ தைராய்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்களும் உணவில் கண்டிப்பாக எடுத்து கொள்ள சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தில் பரிந்துரைக்கப் படுகிறார்கள். உடல்நிலை அதிகரிப்பு, மயக்கம் போன்றவற்றையும், முறையற்ற மாதவிடாயையும் கூட குணப்படுத்துகிறது.

உயர் இரத்த அழுத்தம், high cholesterol அதிக கொழுப்புசத்து :

       இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு சத்து பாதிப்புகளால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த மருந்தாகிறது பூனைக்காலி. இவர்கள் பூனைக்காலியை தொடர்ந்து உணவில் பயன்படுத்தலாம். பல மருத்துவமனைகள் ஏறி இறங்கி அதிக பணம் கொடுத்தும் தீராத நோய்களையும் கூட குணப்படுத்தும் ஆற்றல் இந்த பூனைகாலி விதைகளில் உள்ளது. 


கேன்சர் புற்று நோய் செல்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது பூனைக்காலி.
      

உணவாக பயன்படுத்துவது எப்படி?

    கட்டுரையின் ஆரம்பத்திலே கூறியது போல நாம் அன்றாடம் சமைக்கும் கார குழம்பு, வத்தக்குழம்பு, சாம்பார், பொரியல் கூட்டு போன்ற உணவு வகைகளில் முருங்கைகாய், கத்தரிக்காய் போலவே பூனைக்காலி காயையும் பயன்படுத்தலாம். பிஞ்சாக இருக்கும்போதே பயன்படுத்துவதே நல்லது. முற்றிய பின்னர் நார் போல வர ஆரம்பிக்கும். நன்றாக முற்றிய பின்னர் விதைகளை வறுத்து பொடி செய்து பயன்படுத்தலாம். பூனைகாலியில் இரண்டு வகை உள்ளது. ஒன்று வெள்ளை நிற விதைகளையும், இரண்டாவது கருப்பு நிற விதைகளையும் கொண்டது. இதில் கருப்புநிற விதைகளே அதிக பலன் தரக் கூடியது.

தேநீர்:

 பூனைக்காலி தேநீர் அருந்துவதால் நோய் எதிர்ப்புதிறன் அதிகரிக்கிறது, சர்க்கரை, தைராய்டு, உடல் சோர்வு, முளைபாதிப்புகள் குறைகிறது. கட்டுக்குள் இருக்கிறது. கைகால் நடுக்கம் படபடப்பு மயக்கம் இவையாவும் அறவே ஏற்படுவதில்லை.

தயாரிப்பு முறை:


        பூனைகாலி விதைகளை சிறுதீயில் நன்றாக வறுத்து அதனுடன் இரண்டு ஏலக்காய்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை சாதரணமாக டீ தயாரிக்கும் முறையில் பாலுடன் சேர்த்து அருந்தலாம். அல்லது இந்த பொடியை ஒரு ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டுடன் சேர்த்து அருந்தலாம். இந்த பொடியை காற்று புகாத ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து தொடர்ந்து பயன்படுத்தலாம்


சாலட் வகைகளில், தால், சென்னாமசாலா போலவும் பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்த விதைகளை 10-முதல் 12-மணி நேரம் ஊற வைத்து பயன்படுத்த வேண்டும். உங்கள் உணவுகளுக்கு அதிக சுவையை கொடுக்கும்.




Nutritional Value Of Velvet Beans:



1. Proximate Composition Of Macronutrients (%/ 100 grams of edible velvet beans/Mucuna Prureins)

Carbohydrate - 52.56 %

Protein - 31.44 %

Lipid (Fats)- 6.73 %

Fibre - 5.16 %



2. Mineral Composition of seeds of Velvet Beans Plant (mg/100 grams of velvet beans)


 
 Velvet Beans [White]  Velvet Beans [ Block] 
Sodium 12.70 mg 25.70 mg
Potassium 1575mg 1343 mg
Calcium 87.80 mg 104 mg
Phosphorous 499 mg 376 mg
Magnesium 120 mg 109 mg
Iron 5.79 mg 7.47 mg
Zinc 5.26 mg 12.20  mg


யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்:


    கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் சிறு குழந்தைகள் பூனைகாலியை உணவாக எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். கல்லீரல் பாதிப்புகள் உள்ளவர்கள்.
அல்சர் நோயால் அவதியுறுபவர்கள்.

தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
அறுவைசிகிச்சைக்கு முன்பும், அறுவை சிகிச்சைக்கு பின்பும் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் தைராய்டு பாதித்தவர்கள் உங்கள் டாக்டரின் ஆலோசனைக்குப் பிறகு பயன்படுத்தலாம். அல்லது சிறந்த ஊட்டசத்து நிபுணரை ஆலோசித்து பின்னர் எடுத்துக்கொள்ளலாம்.
  எந்த உணவும் சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்ளும் போது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதிகளவில் பயன்படுத்தும் போது கட்டாயம் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.




                   சாவி  இல்லாமல் பூட்டுகள் தயார் செய்யப்படுவதில்லை என்று கூறுவார்கள், அது போல தீர்வே இல்லாத பிரச்சனையும் இல்லை. குணமாக்க முடியாத நோய்களும் இல்லை என முன்னோர்களின் மூலிகை மருத்துவத்தில் கூறிபிடப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் எல்லாம் நமக்கு இன்று பயன்படாமல் போகலாம். ஆனால் எங்கோ ஒரு உயிர் இதனால் பெறலாம். அதனால் உங்கள் குடும்பத்தினருக்கும்  நண்பர்களுக்கும் உறவினர்களும் இந்த பூனைக்காலியின் நன்மைகளை எடுத்து கூறுங்கள்!!.. அது தான் இந்த கட்டுரையின் நோக்கமே.
 

நன்றி!!
இயற்கை விவசாயி,
சுதாகர் கிருஷ்ணன்.











Also Read:















Post a Comment

2 Comments

  1. அருமை, எல்லோருக்கும் புரிய வேண்டும் எல்லோரும் பயனடையனும் என்ற உங்கள் விருப்பத்திற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Good helpful information. Hearty wishes for you. Thank-you.

    ReplyDelete