Translate

குப்பை மேனியின் மருத்துவபயன்கள்.

குப்பை மேனி/Acalypha Indica 

Sudagar krishnan channels
Kuppai meni 

   சாதரணமாக நாம் நடந்து போகும் பாதைகளில் வளர்ந்து கிடக்கும் அரும்பெரும் மூலிகை  தான் குப்பை மேனி தாவரம். வேர், இலை, தண்டு, பூக்கள், காய்கள் அனைத்துமே மருந்ததாக பயன்படுகிறது. எவ்வளோ பெயர்கள் இருக்க, இந்த தாவரத்தினை ஏன் குப்பை மேனி என்று அழைக்கிறார்கள்,  என நண்பனிடம் கேட்டேன், நண்பன் கூறினான்!!-ஓ இதுவா, இந்தச்செடி குப்பை மேடுகளில் வளர்ந்துகிடக்கும், அதனால் அப்படி சொல்றாங்க என்று பெயர்விளக்கம் கொடுத்தான். ஆனால் அது அப்படி அல்ல: குப்பை போன்ற மேனியை (உடலை) கூட தூய்மை படுத்தி, ஆரோக்கியத்தினை அளித்து மேம்பட வைக்கும். இதுதான் குப்பைமேனி என்று பெயர் வரக் காரணம். அரி மஞ்சரி,குப்பி,பூனைவணங்கி, மார்ஜல மோகினி என பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. குப்பைமேனி தாவரம் ஐம்பது சென்டிமீட்டர் வரைவளரக் கூடியது. கார்ப்பும்,  கசப்பும் கலந்த ஒருவித சுவைகொண்டது, குப்பை மேனியின் இலைகள். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் அதிகம் காணப்படுகின்றது. குப்பைமேனித் தாவரம் ஓராண்டுகால தாவரமாகும், பின்னர் விதைகள் கீழே கொட்டுவதாலும், பறவைகள் மூலமும் தானாகவே பல இடங்களில் வளர்கிறது. பராமரிப்பு எதுவும் இல்லாமல் சுலபமாக வளர்க்க கூடிய தாவரம். வீடுகளில் மாடிதோட்டங்களிலும் வளர்க்கலாம். அளப்பறிய நன்மைகளை தன்னகத்தே நிறைவாய் கொண்டுள்ளது. அடர்பச்சை நிறத்தில் சிறிய மிளகு போன்ற விதைகளை கொண்டது. பூனைகள் இந்தசெடியின் அருகில் செல்லாது., ஆனால் பூனைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கும், விஷத்தன்மையை முறிக்கும் மருந்தாக பயன்படுகிறது. அதனால்தான் பூணைவணங்கி என்றழைக்கப்படுகிறது. இரவில் பூனைகள் குப்பைமேனியின் இலைகளை உண்ணும். குப்பைமேனி சிறியகிளைகளை கொண்டு அடர்த்தியாக வளரும் செடி. பலவித நோய்களுக்கு நாம் சாப்பிடும் மருந்துகள் நோய்களை குணமாக்குகிறதோ, இல்லையோ பல்வேறு புதுப்புது நோய்களையும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்தி விடுகிறது. ஆனால் இத்தகைய மருத்துவ மூலிகைகள் எல்லாம் உடலுக்கு எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. சிறிய நோய்களுக்கு கை வைத்தியம் போல, இத்தகைய மூலிகை இலைகளை நம்முடைய மூதாதையர்கள் வீடுகளில் பயன்படுத்தி வந்தனர்.

மருத்துவ பயன்பாடுகள்:


  • தலைவலி, ஒற்றை தலைவலி, சைனஸ் தலைவலி இவற்றிற்கெல்லாம் சிறந்த வலி நிவராணியாக உள்ளது. தலைவலியால் அவதிபடுபவர்கள் குப்பை மேனியின் இலைகளை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி சரியாகிவிடும். ஒற்றை தலைவலி மனிதனை படாய்படுத்தி விடும். ஒற்றைதலைவலிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. எவ்வித காரணங்கள் இருந்தாலூம் ஒற்றை தலைவலி ஏற்பட்டு அவதிப்படுபவர்களுக்கு குப்பைமேனி இலை சாற்றினை நல்லெண்ணெயுடன் கலந்து தடவினால் நல்ல பலன் கிடைக்கும். 
  • வயிற்று தொடர்பான நோய்கள் அனைத்தையும் குணமாக்கிடவல்லது. வயிற்று பூச்சிகளான கொக்கி புழு, நாடாப்புழு இதனை அழித்து, குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலியை குணமளிக்கிறது.
  • குப்பை மேனியின் இலைகளை அரைத்து, அதனுடன் தேன், சுண்ணாம்பு சேர்த்து பற்று போட, தொண்டைவலி, தொண்டை கட்டுதல், தொண்டை அழற்சி, வீக்கம் இவற்றிற்கெல்லாம் சிறந்த மருந்தாய் அமைகிறது. கிராமங்களில் இதனை இன்றும் நடைமுறை பயன்பாட்டில் செய்வதை காணலாம். அவ்வாறு குப்பைமேனி இலைகளை அரைத்து பற்றுபோடும்போது தொண்டுகட்டு ஒரிரு நாளில் குணமடைந்து, பழய நிலைக்கு குரல் திரும்பிவிடும். பாடகர்களின் குரலில் ஏற்படும் மாற்றங்களை குணமாக்க, உடனடித்தீர்வாக குப்பைமேனி இலைகளை அரைத்து பற்றுப்போடலாம்.
  • காதுவலிக்கும், காது அடைப்பிற்க்கும் குப்பை மேனி கீரையின் இலைகள் சிறந்த மருந்ததாக பயன்படுகிறது. காது அடைப்பிற்கு குப்பைமேனி இலைகளுடன் கல் உப்பு சேர்த்து அரைத்து காதினை சுற்றி, பற்று போல போட குணமடையும். 
  • உடலில் ஏற்படும் பித்தத்தை குறைக்கவும், உடல் சூட்டை குறைக்கவும் உதவுகிறது. உடல் வெப்பநிலை அதிகரிப்பதால் பல்வேறுநோய்கள் ஏற்படுகிறது. உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைத்துக்கொள்ள விரும்புபவர்கள்  குப்பைமேனி கீரையை காசாயம் வைத்து அருந்தலாம்.
  • பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் நோய்கள், தீப் புண், வாத நோய்கள், வயிற்றுவலி, தாவர வகை நஞ்சுகள், மூலம், நமைச்சல், போன்றவற்றிற்கும் மருந்தாக பயன்படுகிறது. மூச்சிரைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல் போன்ற பிரச்சனைகளுக்கும் அருமருந்து.
Sudagar krishnan channels
Kuppaimeni 

  • நோய்களால் படுத்த படுக்கையாய் இருந்தவர்களுக்கு, முதுகில் நிறைய புண்கள் ஏற்பட்டு படாய் படுத்தும். படுக்கை புண்களை குணம் செய்கிறது, சொறி, சிரங்கு போன்றவற்றிற்கும் குப்பை மேனி இலைகளின் பொடிகளை பயன்படுத்தலாம்.
  • குப்பைமேனி இலைகளில் இப்பொழுது குளியல் சோப்புகளும் தயாரிக்கப்படுகிறது. வீட்டிலேயே நாமும் குளியில் சோப்புகளை தயாரித்து பயன்படுத்தலாம், அல்லது காய்ந்த இலைகளை நாம் அன்றாடம் பயன்படுத்தும் குளியல் பொடியுடன் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளிக்கலாம். குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம். தோலில் ஏற்படும் தோல் நோய்களை கட்டுபடுத்துகிறது.
  • மூட்டுவலி இருக்கும் இடங்களில் குப்பைமேனி இலைகளை கட்டு போட பயன்படுத்தலாம், உடல்வலிக்கு இலைகளை நல்லெண்ணெய்யுடன் காய்ச்சி பயன்படுத்தலாம். உடல்வலி உள்ள இடங்களில் தடவிவர விரைவில் குணம்பெறமுடியும். 
  • முக அழகிற்கு, குப்பை மேனி இலைகளை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வர, பருக்கள் மறைந்து, முகம் நல்ல பொலிவு பெறும். மேலும் முகத்தில் தேவையற்ற முடிகளை கட்டுபடுத்துகிறது. பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற இடங்களில் முடிகள் வளர்ந்து, முக அழகை குறைப்பதுடன், அவர்களுக்கு ஒருவித மன அழுத்தையும் கொடுத்துவிடுகிறது. இவர்களெல்லாம் குப்பைமேனி இலைகளை பயன்படுத்திவரலாம். இதற்கென்று அழகுநிலையங்களில், அறுவை சிகிச்சைகளுக்கும் அதிக பணம் செலவு செய்யச் தேவையில்லை.
  • குப்பை மேனி கீரைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கசாயம் செய்து அருந்தினால் மலச்சிக்கல் குணமடையும். குப்பை மேனி இலைகளுடன் உப்பும், மஞ்சளும் சேர்த்து அரைத்து தோல்நோய்கள், சொறி மற்றும் சிரங்கு இவற்றின் மீது பூசி, குளித்து வர, குணமடையலாம்.
  • கோழை சளியாக தொண்டையிலும், மார்பிலும் இருந்து படாய்படுத்தும், நாளடைவில் சளிதொற்று தொண்டை பகுதியிலே தங்கி, வீசிங் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். வீசிங் பிரச்சனைகள் சிலநேரங்களில் உயிரை பறிக்கும் பிரச்சனைகளாக உருவாகிடலாம். அதிலும் குளிர்காலங்களில் பாதிப்பு அதிகமாகி, மூச்சுவிடுவதிலும் சிரமம் ஏற்பட்டு படாய்படுத்திவிடும். இதற்கு குப்பைமேனி சிறந்த தீர்வாக அமைகிறது. 
  • ஈறுகள் வன்மை பெற, வாய்நாற்றம், பல் சொத்தை இவற்றையும் குணமடையச் செய்கிறது. குப்பை மேனி இலைப் பொடியினை கொண்டு வாய் கொப்பளிப்பது சிறந்த பலனை தரும். குப்பைமேனி இலைகளுடன் வேப்பம் இலைகளை  பயன்படுத்தி பற்பொடி தயாரித்து, அந்தப்பொடியினை தினமும் பல்துலக்கவும் பயன்படுத்தலாம்.
தந்த மூலப்பிணி தீத்தந்திடு புண்சர்வ விடம் உந்து, குன்மம் வாதம் உதிரமூலந்தினவு சூலஞ் சுவாசம் தொடர்பீநிசங் கபம்போம் ஞாலம்கொள் மேனி யதனால் தேரையர் குணவாகடம் , இந்தப்பாடலால் குப்பை மேனியின் குணப்பயன்களை அறிந்து கொள்ளலாம். குப்பை மேனி தகுந்த அளவில், பக்குவமாக பயன்படுத்தினால் அளப்பறிய நன்மைகளை பெறலாம். அதிகம் பயன்படுத்தினால், வயிற்று உபாதைகளும், வாந்தியும், பேதியும் ஏற்பட வாய்ப்புள்ளது. மூலிகைகளைப்பற்றியும், அவற்றின் பயன்களைப் பற்றியும், மூலிகைகளை பயன்படுத்தும் முறை, மூலிகைகளின் வளர்ப்பு, மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள எங்கள் வலைதளத்தோடு இணைப்பிலிருங்கள். தொடர்ந்து பயணிப்போம் மூலிகைகளின் பாதையில். நன்றி!




Post a Comment

0 Comments