Best Immune Boosting Foods
![]() |
Immune Boosting Foods |
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!! ஒரு மனிதனின் வாழ்நாளில் அவனுடைய அதிக பட்ச ஆசையே ஒரு வீடு, கார், அன்பான குடும்பம், இரண்டு குழந்தைகள், அழகானதொரு வாழ்கை இவ்வளவு தான். 200,300-வருஷம் வாழ வேண்டும், நிலவில் வீடு கட்டி குடியேற வேண்டுமென்றெல்லாம் ஒருத்தரும் ஆசை படுவதில்லை. வாழ்கின்ற காலத்தில் எந்த நோய் நொடியும் இல்லாமல் வாழ்ந்தாலே போதும். இது மிகவும் நியாயமான, நேர்மையான ஆசையும் கூட. நிம்மதியான வாழ்கை என்பது ஆரோக்கியத்தினை அடித்தளமாக கொண்டே அமைக்கப்படுகிறது என்பதை உணர்ந்தே இன்றைய சமுதாயம் விழிப்புணர்வுடன் பயணிக்கிறது என்கிற கருத்து மறுக்கப்படுவதற்கில்லை. சிறுதானியங்களும், சிகப்பரிசி, மட்டரிசி போன்ற தானியங்களை எல்லாம் பெரியபெரிய நிறுவனங்களே விற்க ஆரம்பித்துவிட்டது. சந்தைபடுத்துதல் இப்பொழுது பரவலாகிவிட்டதே இதற்கு சான்று. நன்று! கட்டுரைக்குள் வருவோம். உணவும் மருந்தும் ஒன்றே என பெரியவர்கள் கூறுவார்கள். எல்லா நோய்களுக்கும் இயற்கையிலேயே நமது உடலிலே எதிர்ப்பு சக்திகள் அடங்கி இருக்கும்! பிட்சா, பர்கர் போன்ற சில வகை உணவுகளால் மழுங்கி போய், தனது ஆற்றலை மறந்து போய் விடுகிறது நமது உடல். அதனை மீட்டெடுக்கவும், இயற்கையிலே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய் வராமல் பாதுகாக்கவும் நாம் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகளை பற்றியது தான் இந்த கட்டுரை.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இயற்கையான வழிமுறைகள்:
உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க மருந்து மாத்திரைகள் தேவையில்லை. நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுகளின் மூலமே நோய் எதிர்ப்பு காரணிகளை உடலில் உருவாக்கலாம். இயற்கையில் விளைந்த பழங்களிலும், காய்கறிகளிலும், மூலிகைகளிலும் கொட்டிகிடக்கிறது ஊட்டசத்துக்கள். உடலில் தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முதலிடம் வகிப்பது வைட்டமின் சி, அடுத்தது வைட்டமின் ஏ மற்றும் பி.
- வைட்டமின் சி பெரிய நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்கொடி குடைமிளகாய், போன்றவற்றில் வைட்டமின் சி அதிகமாய் காணப்படுகிறது. புற்று நோயை கூட கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. திசுக்களின் வளர்ச்சிக்கும், உயிரணுக்களை பாதுகாக்கவும் பயன்படுகிறது. வைட்டமின் சி அடங்கிய எலுமிச்சைபழச்சாறு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்க உதவுகிறது. அமிலத்தன்மை வாய்ந்த சூழ்நிலையில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ச்சியுறும். மேலும் நன்மை செய்யும் பாக்டீரிக்கள் வாழ்வதற்குரகய வெப்பமான சூழ்நிலையை பராமரிக்க எலுமிச்சைபழச்சாறு உதவுகிறது. சாலட், அசைவ உணவுகள் போன்றவற்றில் எலுமிச்சை பழச்சாறு கலந்து எடுத்துக்கொள்ளலாம்.
- கொய்யாப்பழம், சுலபமாக எல்லோராலூம் வாங்கக்கூடிய பழம். ஆனால் அளப்பறிய வைட்டமின்களை தன்னகத்தே கொண்டது. வைட்டமின் பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. எலும்புகள் வளர்ச்சிக்கும், உடலுக்கு உறுதியையும் தருகிறது. பொட்டாசியம் சத்து கொய்யப்பழத்தில் அதிகம் உள்ளது. கொய்யாப்பழத்திலிருக்கும் மெக்னீஷியம் பிற உணவுகளிலிருந்து சத்துக்களை உறிஞ்சு எடுத்து உடலுக்கு அளிக்கிறது. இதன் காரணமாக நாம் உண்ணும் உணவுகளில் உள்ள முழு ஊட்டச்சத்தும் உடலுக்கு சென்றடைகிறது. நோய் காரணிகளை எதிர்த்து போராடுவதோடு, நோய் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.
- வைட்டமின் ஏ அகத்தி கீரை, பொன்னாங்கன்னி கீரை, முருங்கைகீரை, கேரட், சக்கரை வள்ளி கிழங்கு, முட்டை, பப்பாளி பழம், மாம்பழம், பசலைக்கீரை, ஆட்டிறைச்சி, கோழி, மாட்டிறைச்சி இவற்றின் ஈரல், வெண்ணெய், நெய் ஆகிவற்றில் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
- வைட்டமின் பி- நோய் எதிர்ப்பு மண்டலத்தின் உயிரி ரசாயன விளைவுகளுக்கு (Bio chemicals reactions) உதவுகிறது. பாதாம், ப்ரோக்கோலி, பால், முட்டை, சிறு தானியங்கள், கீரை வகைகளில் அதிகம் காணப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு தாய்பாலிலே அனைத்து சத்துக்களும் அடங்கி உள்ளது.
- ஓமேகா 3 பாலி அன்ச்சாச்சுரேட் கொழுப்பு அமிலங்கள் இதயத்தின் வளர்ச்சிதை மாற்றம், அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற திறனை மேம்படுத்துகிறது. சால்மன் மீன், ஆளிவிதை, அவகோடா, வால்நட், முட்டை, ஆலிவ் ஆயில் ஆகியவற்றில் நிறைந்துள்ளது. பூசணி விதைகளில் ஆளிவிதைகளுக்கு அடுத்தபடியாக ஓமேகா 3 உள்ளது. இதனையும் சாலட் போன்ற உணவுகளோடு சேர்த்து எடுத்து கொள்ளலாம்.
- தயிர்: தயிரிலுள்ள நல்ல பாக்டிரியாக்கள்(புரோபயாடிக்) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உடலுக்கு நல்ல சக்தியையும் அளிக்கிறது. தயிராக இல்லாமல் மோராக தினமும் எடுத்துக்கொள்ளலாம். உடல்எடையை குறைப்பதிலும், உடலை குளிர்ச்சியாக வைப்பதிலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதிலும் மிக முக்கிய இடம் வகிக்கிறது மோர்.
- மக்னீஷயம், சிறுநீரகச் செயல்பாட்டிற்கும், ஒவ்வொரு உறுப்புகளின் செயல்பாட்டிற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் அவசியமானது. நட்ஸ், கீரைகள், கோதுமை, விதைகள் இவற்றில் காணப்படுகிறது. துத்தநாகம்-பீன்ஸ், தேங்காய், கடலை பருப்பு, சிப்பி வகை மீன்கள், பருப்புக்கள், எள், தயிர், பால்பொருட்கள் இவற்றில் காணப்படுகிறது.
- ப்ராகோலியில் மினரல்ஸ், வைட்டமின் சி, ஏ அடங்கியுள்ளது. இதனை வாரத்தில் இரண்டு முறை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. மஞ்சள், இஞ்சி, சோம்பு, மிளகு இவை போன்ற மூலிகைகள் பல்வேறுவகையான நோய்களை அண்டவிடாமல் ஆரம்பத்திலே அழிக்கிறது
- பச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ,சி,பி1,பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாய் உள்ளது கராட்டினாய்டுகள், பினோலிக் அமிலங்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளது. இந்த சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. பாதாம், வைட்டமின் ஈ அடங்கிய ஊற வைத்த பாதாம். அதிக நோய் எதிர்ப்பு சக்தியையும் ஆரோக்கியத்தையும் தரக் கூடியது. இரும்பு சத்து, கால்சியம், நார்ச்சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது. புரதமும், நார் சத்துக்களும் நிறைந்த பருப்புக்களை உணவில் சேர்த்து கொள்வது அவசியம். துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, சுண்டல் வகைகள், தானியங்கள் இவற்றில் எதேனும் ஒன்றை தினமும் எடுத்து கொள்ளலாம். நாளொன்றிற்கு முப்பது கிராம் வரை பருப்புகளை சேர்த்து கொள்ள வேண்டும்.
- தண்ணீர், காலையில் வெறும் வயிற்றில் காபி, தேநீர் குடிப்பதை தவிர்த்து, தண்ணீரை குடிக்க வேண்டும். இரத்த ஓட்டம் சீராகி, நச்சுக்கள் அகற்றபட்டு, உடல் ஆரோக்கியம் பெறும். நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதில் இயற்கை உணவுகள், இயற்கையில் விளைந்த பழங்கள், காய்கறிகள் இவற்றிற்கே முதலிடம். இயற்கை உணவுகளினால் உடலுக்கு முழுமையான விட்டமின்கள், தாதுஉப்புகள், ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. எனவே ரெடிமேட் உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நலம்.
மருந்தெனவேண்டாவாம்யாக்கைக்கருந்திய
தற்றதுபோற்றிஉணின். குறளெண்-942
உணவு இடைவெளியே இல்லாமல் சாப்பிட்டு கொண்டே இருக்ககூடாது. உண்ட உணவு நன்றாக செரிமானம் அடைந்த பிறகே, செரிமானம் அடைவதற்கு இடைவெளி தந்து, அடுத்தவேளை உணவை உண்ண வேண்டும். இவ்வாறு பழக்கமாக்கி கொண்டால், உடலுக்கு வேறெந்த மருந்தும் தேவையே இல்லை. என்பதே வள்ளுவப் பெருமானின் அறிவுறுத்தல். நன்றி!
1 Comments
மிகவும் தெளிவாக, புரியும் படி உள்ளது உங்கள் பதிவு.போட்டோக்களும் அழகாக உள்ளது. வாழ்த்துக்கள் இந்திரா மேடம்..💌💌
ReplyDelete