Locust Attack-2020 பகுதி -1
பொருளடக்கம்:
👉 வெட்டுக்கிளிகள்
👉 வெட்டுக்கிளிகளின் வகைககள்
👉 பாலைவன வெட்டுக்கிளிகள்
👉 வெட்டுக்கிளி தாக்குதல் ஒரு பார்வை
👉 2020-ஆம் ஆண்டின் தற்போதைய நிலை
இன்று உலகினை அச்சுறுத்தும் விஷயங்களில் ஒன்று-இந்த பாலைவன வெட்டுகிளிகள். இதனால் மக்களின் வாழ்வாதாரமும் விவசாயமும் கேள்விக்குறியாகிவிடும் நிலை. நாள்தோறும் செய்திகளில் நாம் காணும் பாலைவன வெட்டுகிளிகள் பற்றிய செய்திகள் நம்மை இன்னமும் கலக்க மடைய செய்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை தக்காணபிடபூமியை தாண்டி இந்த பாலைவன வெட்டுகிளிகள் வராது-என நிபுணர்களும், ஆராய்ச்சியாளர்களும் கூறினாலூம் மக்களிடையே வெட்டுகிளிகள் பற்றிய அச்சம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. வெட்டுகிளிகள் என்பது விவசாய நிலங்களில், நமது விவசாயிகள் சந்திக்கும் புது பிரச்சனை ஒன்றுமில்லை. சரி முன்னோர்கள் இந்த வெட்டுகிளிகள் போல தீமை செய்யூம் பூச்சிகளை கட்டுபடுத்த எந்த மாதிரியான வழிமுறைகளை கடைபிடித்தார்கள் என்பதை பற்றி பார்க்கலாமா? இந்த கட்டுரை உங்களுக்கு வெட்டுகிளிகளை பற்றிய தெளிவும், பாதுகாப்பு முறைகளை பற்றியும் தெளிவாக விளக்கம் அளிக்கிறது.
வெட்டுக்கிளி வகைகள்:
வெட்டுகிளிகள் பூச்சியினத்தை சேர்ந்தது. பல்வேறு வண்ணங்களில் பலவகையான வெட்டுகிளிகள் உள்ளது. எல்லாமே தீமை செய்வதில்லை. நன்மை செய்யும் வெட்டுகிளிகளும் உள்ளது.
எடுத்துக்காட்டாக,
- நீள்கொம்பு வெட்டுக்கிளி,
- தொழு வெட்டுக்கிளி,
(பெருமாள் பூச்சி, கும்பிடு பூச்சி)
Locust Attack |
இதன் உணர் இழை (மீசை போன்றது) உடலை விட நீளமாக இருக்கும். இவை காய் பூழு, சாறு உறிஞ்சும் பூச்சிகளை திண்ணக் கூடியது. எருக்கம் செடிகளிலில் காணப்படும் வெட்டுகிளிகள் பறவைக்கு உணவாக பயன்படுகிறது. இது போன்ற வெட்டுகிளிகளை அழித்து விட கூடாது. இந்த வகையான வெட்டுகிளிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் நிலங்களில் காண முடியும்.
லோக்கஸ்ட் வெட்டுகிளிகள்:
வெட்டுகிளிகள்-முட்டையிலிருந்து சிறிய பூச்சியாக உருவாகி, பறக்க துவங்கிவிடும். பொதுவாக தனிமையில் தான் அதிகம் வாழும். ஆனால் சூழ்நிலை/காலநிலை மாற்றத்தினால், உணவு கிடைக்காமல் போகும் போது, படையாக திரளும். ஒரு பயங்கர அசுரனைப்போல செடி கொடிகளை வேட்டையாடி தீர்க்கும்.
Locust Attack |
தன் எடையை விட அதிகமான உணவினை உண்ணும். வெட்டுக்கிளிகளின் தனியொரு படையில் 1000- கோடி வரை வெட்டுகிளிகள் இருக்கும். இது 150-200கிலோ மீட்டர் வரை ஒர் நாளில் பயனிக்கும் ஆற்றல் கொண்டது. இந்த பாலைவன வெட்டுகிளிகள் 3-முதல் 5-மாதங்கள் வரை உயிர்வாழும். வேகமாக இனப்பெருக்கம் செய்யும். ஒரேயொரு வெட்டுகிளியால் சராசரியாக 270-வெட்டுகிளிகளை உருவாக்க முடியும். மூன்றே மாதத்தில் 20-மடங்காகவும், 6-மாதத்தில் 800-லிருந்து 1000-மடங்காகவும், 9-மாதத்தில் 8000- மடங்காகவும் பெருகிவிடும். ஒரு கிலோ மீட்டர் பகுதியில் 8-கோடி வெட்டிகிளிகள் வரை இருக்கும். நாளொன்றுக்கு சராசரியாக 35,000-பேர் சாப்பிட வேண்டிய உணவை காலி செய்துவிடும்.
வெட்டுகிளி தாக்குதல் ஒரு பார்வை:
இந்த லோக்கஸ்ட் வெட்டுகிளி தாக்குதல் புதியதல்ல. 1930,1940,1950-இந்த கால கட்டங்களிலூம் கூட வெட்டுகிளிகள் தாக்குதல் இருந்தது. 2003 -2005 வரையிலான காலகட்டத்தில், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 2.5-பில்லியன் டாலர் மதிப்புள்ள விவசாய பயிர்களை நாசம் செய்ததாக ஐ.நா அமைப்பு குறிபிட்டுள்ளது. அடுத்ததாக 27-ஆண்டுகள் கழித்து, சென்ற ஆண்டின் இறுதியில் ஆப்பிரிக்காவில் இருந்து ஈரான் இந்தியா வந்தது. இந்தியாவில் குஜராத், ராஜஸ்தானில் பரவல் தொடங்கியது. குஜராத்தில் 17,000-எக்டர், ராஜஸ்தானில் 3,50000-எக்டர் பயிர்களை அழித்தது.
பல நாடுகளுக்கு பாலைவன வெட்டுகிளி அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பாகிஸ்தான், சோமாலியா நாடுகள் நெருக்கடிநிலையை அறிவித்துள்ளது. ஹார்ன் ஆப் ஆப்பிரிக்கா என குறிப்படப்படும் நாடுகள் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. எத்தியோப்பியா, சோமாலியா நாடுகளை தொடர்ந்து, கென்யாவில் 70-ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெட்டுகிளிகளால் மோசமான ஒரு அழிவினை அந்த நாடு சந்தித்து வருகிறது. இந்தியாவை பொருத்தவரையில், ஈரான் துவங்கி ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மத்தியபிரதேசம் வரை பரவி வருகிறது. இந்தியாவின் மேற்கு மற்றும் மத்திய பிரதேசங்களில் அதிகமாக பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. ஜீன் மாதத்தில் நிலைமை இன்னும் மோச மடையும், என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
1993-ஆம் ஆண்டிற்க்குப் பிறகு இவ்வளவு மோசமான தாக்குதலை இந்தியா எதிர் கொண்டதில்லை- என ஆராய்ச்சியாளர்களின் கூற்று. தமிழகத்தை பொருத்தவரை, அந்தளவுக்கு பாதிப்பில்லை என்பதே வல்லுணர்களின் கருத்து.
உலகின் சில நாடுகளில் இந்த வெட்டுகிளிகள் உணவாக உட்கொள்கின்றார்கள். மெக்ஸிகோ ,சீனா- போன்ற நாடுகளை கூறலாம்.
பத்தில் ஒருவரது வாழ்வாதாரத்தை இந்த வெட்டுகிளிகள் அழித்துவிடுகின்றது. இதனை கட்டுபடுத்தாவிட்டால், விளை நிலங்கள் நாசமாகும். பெரும் பஞ்சங்கள் கூட ஏற்படலாம். உலகளவில் 90-நாடுகள் வெட்டுகிளி தாக்குதலுக்கு உள்ளாகலாம் என ஐ.நா உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது. எத்தனை இடர்பாடுகள் வந்தாலூம் நம்பிக்கையோடு எதிர்கொள்வதே நமக்கிருக்கும் மிகப்பெரிய பலம், ஆயுதம். நன்றி!!
நன்றி!!
0 Comments