Translate

விதைகள் கிடைக்கும் இடம்

விதைகளே நமக்கு பேராயுதம்!

Sudagarkrishnanchannel
Country Seeds 


       வணக்கம்!. பதிவின் தலைப்பை பார்த்ததுமே ஊகித்திருப்பீர்கள். விதைகள் பற்றியதுதான் இன்றைய பதிவு. நம்முடைய மூதாதையர்கள் அந்தந்த மண்ணின் தன்மைக்கேற்ப நாட்டு விதைகள் பயிரிட்டு, விவசாயம் செய்தனர். இதன்மூலமாக விளைந்த தானியங்களை உணவாக கொண்டனர். அதனால் நோய்நொடிகளின்றி ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் வாழ்ந்தனர். அதற்கு பின்னர் தோன்றிய வழிதோன்றல்கள், {எதில் மாற்றம் கொண்டுவந்தார்களோ இல்லையோ! தெரியாது,} மண்ணிற்கு பழக்கமில்லாத அந்நிய, மரபணு மாற்றப்பட்ட விதைகள், ரசாயனங்கள், பூச்சிகொல்லிகள் இவற்றை பயன்படுத்தி விவசாயத்தில் புதுமையை புகுத்துகிறோம் என்று, மாற்றத்தை திணித்தனர். பயிர்களும் வேகவேகமாய் வளர்ந்தது. காய்கறிகள் வடிவங்களில் பெரியதாக அதிகமாக காய்த்தது. மரபணு மாற்றப்பட்ட காய்கறிகளால் கேன்சர், சக்கரைநோய்- இப்படி இன்னும் பெயர் தெரியாத பலநோய்கள். இளமையிலேயே பல்வேறு நோய்களுடனே வாழ்கின்ற வாழ்கை. இதற்கெல்லாம் காரணம் பாரம்பரிய விதைகளையும், வாழ்கைமுறைகளையும், பழக்கவழக்கங்களையும் மறந்ததுதான்.

 ஆனால் இன்றைய தலைமுறையில் இயற்கை விவசாயத்தின் மீது படித்த இளைஞர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். மக்களின் கவனம் இயற்கை விவசாயத்தை நோக்கி பயணிக்கிறது. நமது பாரம்பரிய நாட்டுவிதைகளை தக்கவைத்து கொள்வதே, நமது பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும். இல்லையென்றால் வேப்பிலைக்கும், மஞ்சளுக்கும் வெளிநாட்டினர் காப்புரிமை வாங்கியதை போல நாளை நமது பாரம்பரிய விதைகளுக்கும் காப்புரிமை வாங்கி விடுவார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. இந்தியா, இந்தியர் என சொல்லூம் நம்மையும், சிந்துசமவெளி நாகரித்தை வரலாற்றில் வைத்து படிப்பதைபோல, படிக்க வேண்டியது தான். 

இயற்கை விவசாயம் என்றதும் நமது நினைவுக்கும் வரும் நம்மாழ்வார் அய்யா அவர்களும் பாரம்பரிய நாட்டுவிதைகளை தக்கவைத்து கொள்ளவேண்டுமென மிகவும் பாடுபட்டார். அவருடைய கருத்துக்கள் பழைய பாரம்பரிய விவசாயத்திற்கு (பயிர் சுழற்சி முறை போன்றவை) திரும்பவேண்டும், நம்முடைய நாட்டு விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். யூரியா, பூச்சி மருந்துகள் இதனை தவிர்த்து பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் பயன்படுத்த மக்களுக்கு அறிவுறுத்தினார். இந்தியாவின் பாரம்பரிய நெல்ரகங்கள்-22,972. இதுபோல கிட்டதட்ட 50,000-த்திற்கும் அதிகமான நாட்டுவிதைகள் உள்ளது. கத்திரிக்காயில்- பொன்னி கத்தரி, பச்சை கத்தரி, வெள்ளை கத்தரி, பாளையம் கத்தரி, முள் கத்திரி இப்படி பல ரகங்கள் உள்ளது. அவரைக்காய்- கோழி அவரை, சிறகு அவரை, மூக்குத்தி அவரை, வெள்ளை அவரை இப்படி பல ரகங்கள் உள்ளது

எந்த மாதத்தில் என்ன விதைக்கலாம்:

     எந்தெந்த பயிர்களை எந்தெந்த காலங்களில் வளர்க்கலாம் என்பதை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். அதைதான் பட்டம் என்று கூறுகின்றனர் பட்டங்களில் ஆடிப்பட்டம், மாசிப் பட்டம், தைப்பட்டம் என்று பல்வேறு பட்டங்கள் உண்டு. ஆனால் மிகவும் சிறந்த பட்டம் என்று ஆடி பட்டத்தை விவசாயிகள் கூறுகின்றனர். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் உண்டு. ஆடிப்பட்டத்தை பற்றி கூற வேண்டுமானால் குழந்தையிடம் விதையை போட சொன்னால்கூட, அந்த விதையானது  மளமளவென வளர்ந்து தாறுமாறான அறுவடையை கொடுக்கும். ஏனென்றால் ஆடிப்பட்டத்தில் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் செடிகள்கொடிகள் வளர்வதற்கு உகந்த கால நிலை காணப்படும். ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களை ஆடிப்பட்டம் என்று  வரையறுக்கலாம். ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களில் என்னென்ன விதைகளை விதைக்கலாம் என்பதை பற்றி சற்றே விளக்கமாக பார்க்கலாம். மற்ற இரண்டு பட்டங்களையும் சேர்த்து பதிவிட்டால், கட்டுரை மிகவும் நீளமாகிவிடும். அதனை தனியான பதிவாக பதிவிடுகிறேன்.


ஜூன் மாதங்களில் என்னென்ன விதைக்கலாம்:

   ஜூன் மாதத்தினை எடுத்துக் கொண்டோமானால் மழை அவ்வப்போது லேசாக வந்து வந்து போகும். இத்தகைய காலநிலையில்  நாற்றுகள் விட்டு, எடுத்து நடக்க கூடிய செடிகளை ஆரம்பிக்கலாம். உதாரணமாக தக்காளி கத்தரிக்காய், மிளகாய் அடுத்தபடியாக வெண்டைக்காய், கீரைகள், முள்ளங்கி இவற்றை ஆரம்பிக்கலாம். கீரைகளில் எல்லா வகை கீரைகளையும் ஆரம்பிக்கலாம்.


ஜூலை மாதத்தில் என்னென்ன விதைக்கலாம்:

    ஜூலை மாதத்தினை எடுத்துக் கொண்டோமானால், கொத்தவரை செடி அவரைக்காய் காராமணி கீரைகள் சிவப்பு முள்ளங்கி வெள்ளை முள்ளங்கி சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் மிளகாய் தக்காளி கத்தரிக்காய் வெண்டைக்காய் புதினாக்கீரை இவற்றை  தாராளமாக ஆரம்பிக்கலாம்.


ஆகஸ்ட் மாதத்தில் என்னென்ன விதைக்கலாம்:

      ஆகஸ்ட் மாதங்களில் குளிர்கால காய்கறிகளையும், கொடிவகைக் காய்கறிகளையும் அழகு பூச்செடிகளையும தாராளமாக ஆரம்பிக்கலாம். ஆகஸ்ட் மாதத்தில் கொத்தமல்லிக்கீரையை  ஆரம்பிக்கலாம் பல பேர் கொத்தமல்லிக்கீரை வரவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டு கொண்டிருப்பார்கள். அவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கலாம். குளிர்கால காய்கறிகளை எடுத்துக் கொண்டோமானால், குடைமிளகாய் கொடி பீன்ஸ் முட்டைகோஸ் காலிஃப்ளவர் ப்ராக்கோலி உருளைக்கிழங்கு பீட்ரூட் நூல்கோல் சௌசௌ இவைகளை பயிரிடலாம். அடுத்ததாக கொடி வகைகளை எடுத்துக் கொண்டோமானால் எல்லா கொடி வகைகளையும் தாராளமாக ஆரம்பிக்கலாம். புடலங்காய் பீர்க்கன்காய் பூசணிக்காய், கொடி பீன்ஸ் கொடி அவரைக்காய் மொச்சை சுரைக்காய் போன்ற காய்கறிகளை ஆரம்பிக்கலாம். அடுத்தது அழகு பூச்செடிகள். உங்களுக்கு எந்த பூச்செடி பிடிக்குமோ, அவற்றை எல்லாமே ஆடி மாதத்தில் ஆரம்பித்தால், தாறுமாறாக வளரும். எடுத்துக்காட்டாக டாலியாப்பூ கிளாடியஸ்பூ ஜின்னியாப்பூ சாமந்திப்பூக்கள் லில்லிப்பூ இப்படி பலவகை பூச்செடிகளை ஆகஸ்ட்மாதத்தில் ஆரம்பிக்கலாம். ஆடி பட்டத்தில் என்னென்ன தாவரங்களை வளர்க்கலாம், என்பதில் உங்களுக்கு இப்பொழுது ஒரு தெளிவு கிடைத்திருக்கும். முடிந்தவரை நாட்டு விதைகள் மட்டுமே பயன்படுத்துங்கள் அதில் தான் அதிக சத்துக்கள் உள்ளது. ஒருமுறை நாம் பாரம்பரிய விதைகள் விதைத்து விட்டால் அதிலிருந்து அடுத்த சீசனுக்கு விதைகள் எடுத்துக் கொள்ளலாம்.

 

Post a Comment

12 Comments

  1. Sir I need some of those seeds whom should I contact I'm in Salem how much does the seeds costs and delivery charges and what about the courier facilities please tell ME

    ReplyDelete
    Replies
    1. You call kavin Traders and get to know your doubts.

      Delete
    2. Sir where I can get Amman pacharasi plant please tell

      Delete
  2. Hi.
    I need wdc waste decomposer.. Other than Amazon where can I get that

    ReplyDelete
  3. Kavin traders , Tirupur. They are very good, polite and send the seeds, bags , and gardenukku thevaiyana ellam kidaikarathu. They are sending by courier. Very good packing. Immediate response. Best place.

    ReplyDelete
  4. எனக்கு மரிக்கொழுந்து விதை தேவை. கிடைக்குமா?

    ReplyDelete
  5. Sir , I need parambariya paddy variety kidaikuma.

    ReplyDelete
  6. sir enaku muguthi avarai siraku avarai seeds venum

    ReplyDelete
  7. எனக்கு புரசை மரமோ விலையோ கிடைக்குமா

    ReplyDelete
  8. பீன்ஸ் விதை வேண்டும் எனக்கு

    ReplyDelete