Translate

Senna auriculata (ஆவாரம் செடி)

 Avarampoo Benefits 


Sudagarkrishnanchannels
Avarampoo Benefits 


 "ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ" என்ற சித்தமருத்துவ பழமொழி தரும் விளக்கம் என்னவென்றால், ஆவாரம் பூக்கள் இருக்கும் இடங்களில், நோயுற்ற ஒருவரையும் காண முடியாதாம். {சாவாரை-நோய்அற்றவர்கள்}. ஏனெனில் ஆவாரையால் தீராத நோய் என்று ஒன்றுமே இல்லையாம். சர்க்கரை நோய், புற்றுநோய்  என  அனைத்து நோய்களுக்குமே சிறந்த மருந்தாக திகழ்கிறது. 

ஆவாரை சங்க கால மலர். நடிகர் சூர்யா பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் 99 சங்க கால {குறிஞ்சிபாட்டில் குறிபிடப்பட்டுள்ளது} பூக்களின் பெயர்களை கூறுவாரே.!  ஞாபகம் இருக்கிறதா? அவற்றில் ஆவரையும் ஒன்று.  குறிஞ்சிப்பாட்டு, தொல்காப்பியம், குறுந்தொகை, அகநானூறு, கலித்தொகை போன்ற சங்க இலக்கியங்களில், இடம் பெற்ற பூக்களில் ஆவாரை தனிச் சிறப்பிடம் பெற்று விளங்குகிறது.

ஆவிரை பூ என்ற பெயரே காலப்போக்கில் மருவி ஆவாரம் பூ என அழைக்கப்படுகிறது.

தைப்பொங்கல் கொண்டாட்டத்தின்போது காப்பு கட்டுவதற்கும், மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கு மாலை கட்டுவதற்கும், வீடுகளுக்கு தோரணம் கட்டுவதற்கும், ஆவாரம் பூவை இக் காலங்களில் பயன்படுத்துகின்றனர். சங்ககாலத்தில் மடல்-மா மாறி வருகையில் பயன்படுத்தப்பட்ட இந்த பூ தைப்பொங்கல் விழாவில் பயன்படுத்தப்படும் பூவாக மாறியுள்ளது. சங்க காலங்களில் வெற்றிவாகை சூடவும், மகிழ்ச்சியை கொண்டாடவும், திருவிழாக்களிலும் ஆவாரம் பூ மாலை சூட்டி மகிழ்ந்தனர்.

ஆவாரை செடி வளர்ப்பு:


  ஆவாரை பொதுவாக ஆற்றோரங்களிலும், காடுகள், மலைகளிலும் தானாகவே  வளர்ந்துகிடக்கும். அங்கிருந்து பறித்து கொண்டுவந்து தான் மார்கெட்டுகளில் விற்பனை செய்கிறார்கள். வறட்சியை தாங்கி வளரும் தன்மைகொண்டது. இதனுடைய பூர்விகம் தமிழ்நாடுதான். வியாபார சந்தையிலே நம்நாட்டை சார்ந்த பூக்களுக்கே மவுசு அதிகம். மாடிதோட்டத்தில் வளர்க்க 20 லிட்டர் கேன் போதும். நான் என் மாடிதோட்டத்தில் 20 லிட்டர் கேனில் தான் வைத்திருக்கிறேன். ஆடிபட்டத்தில் நடவு செய்யலாம். ஜனவரி பிப்ரவரி மாதங்களில் பூக்கள் பூக்கும். நர்சரியில் செடியாகவும், ஒட்டு கட்டிய செடியாகவும் கிடைக்கிறது. ஒட்டுகட்டிய செடியே மாடிதோட்டத்திற்கு சிறந்தது. கிளைகளை பதியம் போட்டும் வளர்க்கலாம். 
  • ரோஜா செடிகளுக்கு தயார் செய்வதை போல அதிக கவனத்துடன் மண்கலவை தயார் செய்ய வேண்டிய அவசியமில்லை. சாதாரண தோட்டத்து மண்ணே போதுமானது.
  • அதனுடன் உயிர் உரங்கள், வேப்பம் புண்ணாக்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • மண்புழு உரம், தொழு உரம், காய்கறி கழிவு உரம் ஏதேனும் ஒன்றை மண்கலவையின் 3 இல் ஒரு பங்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • பூச்சிதாக்குதல், நோய்தாக்குதல் அதிகம் ஏற்படாது. வேப்ப எண்ணெய், தேமோர் கரைசலே போதுமானது. 
  • இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மண்ணை கிளறிவிட்டு, ஒரு கைப்பிடி தொழு உரம் இடுவது சிறந்தது.
  • மாடிதோட்டத்தில் வளர்க்கும் போது, வருடத்தின் இரண்டு முறை கவாத்து செய்வது அவசியம்.
  • சிறிய செடியிலே அதிக பூக்களை பெறவேண்டு மெனில் நம் சேனலில் அதற்கென்றே நிறைய செலவில்லாத இயற்கை உரங்களை பதிவிட்டிருக்கிறேன். அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.



ஆவாரையின் மருத்துவ பயன்கள்:

      ஆவரையின் பூக்கள் மட்டுமின்றி, வேர் பட்டைகள், காய்கள், இலைகள் என அனைத்துமே மருத்துவ பயன்பாட்டில் இடம் பெறுகிறது. ஆவரையை சகல நோய் தீர்க்கும் "சர்வ ரோக நிவாரணி" என்கிறார்கள். ஆவாரை முழுத்தாவரமும் துவர்ப்பு குணமும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது.


கிராமங்களில் கொளுத்தும் வெயிலில் ஆடு மாடுகளை மேய்ப்பவர்கள் வெயிலின் சூட்டைத் தவிர்க்க,  ஆவாரம் இலைகளை தலையில் வைத்துக் கட்டிக்கொள்வர்கள். இக்காட்சியை இன்றைக்கும் பார்க்கலாம். சூட்டில் இருந்து உடலைக் காத்து குளிர்ச்சி அளிப்பதில், ஆவாரையின் பங்கு அலாதியானது. உலகை அச்சுறுத்தும்  கொடிய நோய்களான புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் இரண்டுக்கும் எதிரான ஆற்றல் கொண்டது ஆவாரை. அதனால்தான் உலகின் பல நாடுகளில் கேன்சருக்கான சின்னங்களில் ஆவாரம் பூ இடம் பிடித்திருக்கிறது. குறிப்பாக கனடா கேன்சர் சொசைட்டி சின்னத்தில் இதனை தெளிவாக பார்க்கலாம்.

நீரிழிவுக்கு சிறந்த மருந்து:

    சர்க்கரை நோயினை கட்டுபாட்டிற்குள் வைத்திருக்க, பன்னீர் பூ, கருஞ்சிரகம், வெந்தயம், வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீர் என பல வாட்ஸ்அப்பில் வந்த தகவல்களை படித்திருப்போம். இவற்றில் எவ்வளவு நம்பகத்தன்மை என்பதை யாராலும் கூற முடியாது. ஆனால் ஆவாரை பூக்கள், சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் என சித்த மருத்துவத்தில் 100 சதவீகிதம் உறுதியாக கூறப்படுகிறது. 
ஆவாரைப் பூ காய் இலை, பட்டை, வேர் ஆகிய ஐந்தும் சேர்ந்ததை ஆவாரை பஞ்சாங்கம் என்கிறார்கள். இவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி அளவு வாயில் போட்டு வெந்நீர் பருகி வந்தால், நீரிழிவு, உடல் சோர்வு நா வறட்சி, தூக்கமின்மை போன்ற பல நோய்கள் குணமாகும். ஆவாரம் பூவின் இதழ்களை நிழலில் காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து அருந்தி வந்தால் சர்க்கரை கட்டுக்குள் வரும். ஆவாரம் பூ குப்பைமேனி இலை, பூவரசு இலை, செம்பருத்தி இலை ஆகிய நான்கையும் சம அளவு எடுத்து அரைத்து முழங்காலுக்குக் கீழே பூசி வந்தால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கால் பகுதி உணர்ச்சி பெறும்.

ஆவாரை தேநீர்:


 தேநீர் அருந்தாமல் நம்மால் இருக்க முடிவதில்லை. அதனால் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த பலனும் இல்லை. பணம் செலவாவது தான் மிச்சமாக உள்ளது. ஆனால் அதைவிட ருசியான, மிகமிக செலவு குறைந்த, ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆவாரை தேநீரைப் பருகிப் பாருங்கள்; பிறகு அதை மட்டும்தான் பருகுவீர்கள். 
கையளவு ஆவாரம் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து அருந்தினால் உடல் புத்துணர்ச்சி பெறுவதுடன் சரும நோய்களும் குணமாகிறது என சித்த மருத்துவம் கூறுகிறது.
 கிரீன் டீ என்ற பெயரில் இன்றைக்கு அதிகமாக விற்பனையாகும் தேநீரை விட, ஆயிரம் மடங்கு அற்புதமானது ஆவாரை நீர். இதுமட்டுமல்ல ஆவாரை இலையைப் பறித்து கல்லில் அரைத்து அதை தலையில் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு கண்களின் வழியே வெளியேறுவதை உணர முடியும். தலைமுடி வளர உடலை மினுமினுப்பாக, உடல் துர்நாற்றத்தைத் துரத்த என அனைத்துக்கும் ஆவாரை பயன்படுகிறது.

மாதவிடாய் கால வயிற்று வலி:

 மாதவிடாய் காலத்தில் பெண்கள் அடிவயிறு வலியை அதிகம் சந்திக்கின்றனர். அவர்கள் ஆவாரை இலையை எடுத்து வயிற்றில் கட்டிக் கொள்ள வேண்டும். மாதவிடாய் நாட்களில் இவ்வாறு தினமும் கட்டிக்கொண்டால், வயிற்று வலி நிச்சயம் குறையும். அதிக ரத்தப்போக்கு இருப்பவர்கள் ஆவாரையை நிழலில் உலர்த்தி  பொடி செய்து, இதை மாதவிடாய்க்கு முன்பே, ஒரு டம்ளர் பாலுடன் கால் டீஸ்பூன் கலந்து எடுத்தால், அதிக ரத்தப்போக்கு குறையும். வெள்ளைப்படுதல் அதிகம் உணர்பவர்கள், ஆவாரை பிசினைப் பாலில் அல்லது மோரில் கலந்து குடித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்


தோல் நோய்களுக்கு:

 சருமத்தில் உண்டாகும் நோய்களுக்கு ஆவார பட்டையுடன் பால் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து குளித்து வந்தால், நாள்பட்ட நோயும் குணமாகும். நாட்டு மருந்து கடைகளில் ஆவாரை எண்ணெய் கிடைக்கிறது, இதையும் பயன்படுத்தலாம். குளியல் பொடி தயாரிக்க ஆவாரம் பூக்களை காய வைத்து சேர்க்கலாம். இவை உடலில் வியர்வை நாற்றத்தை போக்கும் என்பதோடு, உடலுக்கு நல்ல ஒரு மினுமினுப்பையும் நிறத்தையும் கொடுக்கும்.

 உடல் உஷ்ணத்தை குறைக்க கூடிய ஆவாரை கூந்தலுக்கும் வலு கொடுக்கும். அதனால்தான் முன்னோர்கள் மூலிகை குளியல் பொடியில், ஆவாரை முதன்மையாக சேர்த்து பயன்படுத்தினார்கள். குழந்தைகளுக்கு வியர்க்குரு, கோடையில் உடல் எரிச்சல் ஆகாமல் இருக்க, ஆவாரை இலையை அரைத்து பூசி குளிக்க வைத்தார்கள்.

குழந்தையின்மை நீங்க:


  குழந்தையின்மை குறையை போக்குகிறது ஆவாரை பூக்கள். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இலலாத பெண்களுக்கு ஆவாரை வரப்பிரசாதமாகும். 
ஆவாரம் பூவுடன் கருப்பட்டியை சேர்த்து உண்டு வந்தால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை நீங்கும். விரைவில் கர்ப்பம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.

Sudagarkrishnanchannels
Avarampoo Benefits 

முக அழகிற்கு:

எல்லோருக்கும் முகம் அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கதான் செய்யும். அதிலும் பெண்களுக்கு இந்த எண்ணம் எப்போதும் மேலோங்கியிருக்கும். முகப்பொலிவு பெற ரசாயனங்கள் கொண்ட பசைகள் போன்றவற்றை முகத்திற்கு பூசுவதை விட, காய்ந்த ஆவாரம் பூக்கள், பச்சைபயிறு சிறிதளவு எடுத்து பசும்பாலில் போட்டு அரைத்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் ,முகத்தில் இருக்கும் வடுக்கள் எண்ணெய் தன்மை போன்றவை நீங்கி, முகம் அழகு பெறும். குளியல் பொடி தயாரிக்கும் பொழுதும் ஆவாரம் பூக்களை சேர்த்து கொள்ளலாம்.

கல்லீரல் பலப்பட,


 ஆவாரம் பூக்களை பச்சையாக சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களின் நிறைந்து இருக்கும் அசுத்தங்கள் முழுவதும் வெளியேறுவதோடு, வயிறு தொடர்பான நோய்களும் குணமாகும் ஆவாரம்பூ தேநீர் பருகி வந்தால் கல்லீரல் உடலில் இருக்கும் நச்சுக்கள் நீங்கி கல்லீரல் பலப்படும் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் காக்கும்

கிருமிநாசினி:


 ஆவாரம் பூக்களை அரைத்து ஆறிவரும் காயங்கள் புண்கள் மீது தடவி வந்தால் அவை விரைவில் குணமாகும். ஆவாரம்பூ இயற்கையிலேயே கிருமிநாசினி தன்மை அதிகமாக கொண்டது. இப்பூக்களை அவ்வப்போது பக்குவப்படுத்தி சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று கிருமிகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்துகின்ற, ஒரு சிறந்த இயற்கை மருந்தாக திகழ்கிறது.

மூலம் குணமாக:


 ஆவாரம் பூ கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி, இடித்து ஒரு மெல்லிய துணியில் சலித்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.


ஆவாரை சமையல்:

ஆவாரம் பூக்களை குடிநீராக, துவையலாக, பருப்பு கலந்து கூட்டாக செய்து சாப்பிடலாம். பாசிப்பருப்புடன் வேகவைத்து நெய் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சாம்பார் செய்யும் பொழுது, காய்கறிகளைப் போலவே  ஆவாரம் பூக்களை பயன்படுத்திக்கொள்ளலாம். ரசம்  குழம்பு வைத்தும் சாப்பிடலாம். பூக்களை நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். ஆவாரை உடலுக்குள் செல்லச் செல்ல உறுப்புகளை பலப்படுத்தும் என்கிறது சித்த மருத்துவம். பக்க விளைவில்லாமல் உடலுக்கு நல்ல மருந்தாகவும், ருசியான உணவாககவும் இருக்கிறது என்றால் அது ஆவாரை தான். 




புராணங்களில், கதைகளில் சொல்வதுபோல, ஏழு கடல், ஏழு மலைகளுக்கு அப்பால் கிடைப்பதல்ல மூலிகைகள். சாதாரணமாக நாம் அன்றாடம் கடந்து செல்லும் பாதையில், கைக்கெட்டும் தூரத்திலேயே ஆயிரக்கணக்கான மூலிகைகள் இருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மஞ்சள் நிறப் பூக்களுடன் புன்னகைத்தவாறே, வறண்ட நிலத்தில்
தான் வளர்ந்தாலும் மனிதர்களின் நோய்களை நீக்கி நீண்ட ஆயுளைக் கொடுக்கும் அற்புத மூலிகை ஆவாரை. இந்தச் செடி இருக்கும் இடங்கள்தான் உண்மையில் ஆரோக்கிய மையங்கள். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலையும் மனித மனதுக்கு, செலவில்லாமல் கையருகே கிடைக்கும் இதன் அருமை தெரிவதில்லை; மனித சமுதாயத்துக்கு ஆவாரை அள்ளி அள்ளித் தரும் பலன்கள் சொல்லி மளாது.

நன்றி!!

Post a Comment

0 Comments