Translate

நிலக்கடலை (Peanuts)

 வேர்கடலை 


Sudagarkrishnanchannels
Peanuts 



groundnut, goober, pindar, monkey nut, Arachis hypogaea


   நிலக்கடலை நடு தென் அமெரிக்காவை தாயகமாக கொண்டது. வேர்கடலையை கண்டுபிடித்தவர் "மைக்கேல் கென்னடி" என்கின்ற ஒரு வழக்கறிஞர். 

சீனா, இந்தியா, நைஜூரியா போன்ற நாடுகளில் வேர்கடலை அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் நிலக்கடலை தேவையில், 90% சதவீகித பங்களிப்பு தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், ஆந்திரா, ராஜஸ்தான் நாடுகளிலிருந்து பெறப்படுகிறது. உலகளவில் வெப்பமண்டல பகுதிகளில் அதிகமாக தற்காலங்களில் பயிரிடப்படுகிறது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிலக்கடலையில் பலரகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் உள்ளது.

உலகளவில் நிலக்கடலை உற்பத்தில் இந்தியா மூன்றாவது இடத்தை வகிக்கிறது.

    வேர்கடலை வயலில் காய்கள் {கொட்டைகள்} பிடிக்கும் தருவாயில் அதுவரை இல்லாத அளவிற்கு, உயிரினங்களின் பெருக்கம் அதிகரிக்கும். அதாவது வேர்கடலையை சாப்பிடும் எலிகள், பறவைகள், ஆடுகள், மாடுகள், நாய்கள் இவற்றின் இனப்பெருக்கம் அதிகரித்து பலுகிப் பெருகிவிடும். ஏனெனில் வேர்கடலையில் அதிகம் நிறைந்து காணப்படும் போலிக் அமிலத்தால், அதனை சாப்பிடும் ஆடு, மாடு, எலிகள், பறவைகள் எல்லாம் கருவுறுவது எளிதாகிறது. இனப்பெருக்கம் அதிகரித்து அதிக குட்டிகளை ஈனுகிறது.

வேர்கடலையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளும் போது, பெண்கள் கருவுறுவதும், ஆண்பெண் மலட்டுதன்மையை முழுவதுமாக நீங்கி, குழந்தைபேறும் விரைவில் நடைபெறும். மேலும் கர்ப்பப்பை பிரச்சனைகள் நீர்கட்டிகள் போன்றவையும் குணமாகி, கர்ப்பபை சீராக செயல்படுகிறது. 

அதனால் கர்ப்பம் அடைய நினைக்கும் பெண்கள் உடனே வேர்கடலை உணவுகளை சாப்பிட துவங்குங்கள்.


வேர்கடலையின் அளப்பரிய, ஆச்சரியமூட்டும் நன்மைகள்:

   வேர்க்கடலையில் கார்போஹைட்ரேட், வைட்டமின், இரும்புச்சத்து, போலிக்அமிலம், கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு, கரையும் நல்ல கொழுப்பு {Good HDL}, நார்ச்சத்துக்கள் மற்றும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தும் முழுவதுமாக நிறைந்துள்ளது. வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அவற்றில் குறிப்பிட்ட சிலவற்றை பற்றி மட்டும் இங்கே விளக்கமாக தெரிந்து கொள்வோம்.

100-கிராம் வேர்கடலையில் நிறைந்துள்ள ஊட்டசத்துக்களின் விபரம்

வைட்டமின்கள்/சத்துக்கள்  அளவுகள் [ 100 g]

  • இரும்புச்சத்து
  • கார்போஹைட்ரேட்
  • நார்சத்து
  • கரையும்கொழுப்பு
  • புரதம்
  • ட்ரிப்டோபன்
  • கால்சியம்/சுண்ணாம்புச்சத்து
  • திரியோனின்
  • ஐசோலூசின்
  • லூசின்
  • லைசின்
  • கிளைசின்
  • குலுடாமிக் ஆசிட்
  • காப்பர்
  • மெக்னீஷியம்
  • மேங்கனிஸ்
  • பாஸ்பரஸ்
  • சோடியம்
  • தூத்தநாகம்
  • நீர்சத்து
  • பொட்டாசியம்
  • விட்டமின் பி1 பி2 பி3 பி4 பி5
  • விட்டமின் சி
  • போலிக் அமிலம்

  • 4.59 mg
  • 21 mg
  • 9 mg
  • 40 mg
  • 25 mg
  • 0.24 g
  • 93 mg
  • 0.85 g
  • 0.85 mg
  • 1.625 mg
  • 0.901 g
  • 1.512 g
  • 5 g
  • 11.44 mg
  • 168.0 mg
  • 1.934 mg
  • 376.0 mg
  • 18.0 mg
  • 3.27 mg
  • 6.50 g
  • 705 mg


 


கொழுப்பை குறைக்கும்:


 பொதுவாக வேர்க்கடலை கொழுப்பை அதிகரிக்கும் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

    ஆனால் வேர்க்கடலை உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பை LDL {LowDensity Lipoprotein} அதிகரித்து, 

 கெட்ட கொழுப்பை HDL குறைக்கிறது {High Density Lipoprotein}.
வேர்கடலையில் உள்ள தாமிரச்சத்து உடலுக்கு தேவையான, நோய்எதிர்ப்புசக்தியை அதிகரிக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பை குறைக்க உதவுவதால், உடல்எடையையும் சீராக கட்டுக்குள் இருக்கிறது. வேர்கடலை உடல் எடையை அதிகரிக்கும் என எந்த கிறுக்குப்பயலாவது சொன்னால், தயவு செய்து அதனை நம்பாதீர்கள். 

மன அழுத்தம்:

         
     depression எனப்படும் மனச்சோர்வு மன அழுத்தம் குறைக்க நிலக்கடலையில் உள்ள tryptophen Acid பெரிதும் உதவுகிறது. இந்த அமிலம் மனதிற்கும், புத்திக்கும் புத்துணர்வு அளிக்கும் , மூளை நரம்புகளை செறிவுடன் இயங்கச் செய்யும் செரோட்டனின் என்ற , வேதிப்பொருள் சுரக்க உதவுகிறது. இனி, நீங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கும் போது, ஒரு கிண்ணம் வேர்கடலையை சாப்பிடுங்கள். ஆய்வுகள் இவ்வாறே கூறுகிறது.


பித்தப்பைகற்கள் Gall Bladder Stone :

  
     தினமும் முப்பது கிராம் அளவு வேர்க்கடலையை  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்தப்பையில் கல் உருவாவது தடுக்கப்படுகிறது. தொடர்ந்து இருபது ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த கூற்று உண்மை என கண்டறியப்பட்டுள்ளது.

ஞாபசக்தி அதிகரிக்க:

       இப்பொழுதெல்லாம் குழந்தைகள் படிப்பில் ஆர்வமில்லாமலும், படிப்பது உடனே மறந்து போய்விடுவதுமாக இருக்கிறார்கள். வேர்கடலை மூளைவளர்ச்சிக்கு  சிறந்த டானிக்காக உள்ளது. ஞாபசக்தியையும், புத்திக் கூர்மையையும் அதிகரிக்கும் நியாசின் 3 விட்டமின் வேர்கடலையில் உள்ளது. மேலும், மூளையில் ஏற்படும் நோய்களையும் தடுக்க உதவுகிறது. மூளை நரம்புகளையும் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. மனிதனின் அத்தனை செயல்களுக்கும் அடிப்படை மூலமாக திகழும் மூளை பலத்தையும், ஞாபத்திறனை அதிகரிக்க தினமும் வேர்கடலையை உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுங்கள்.

 அல்சைமர் எனப்படும் ஞாபகமறதி நோய் வயதானவர்களை அதிகம் பாதிக்கிறது. நம் நாட்டை விட, மேலைநாடுகளில் இந்த நோயின் தீவிரம் அதிகம். வேர்கடலையை அதிகம் சாப்பிடும் 70% சதவீகித வயதனவர்களை அல்சைமர்நோய் அதிகம் பாதிப்பதில்லை என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

எலும்புக்கு வலுவை தருகிறது:

  வேர்கடலையில் கால்சியம் மற்றும் மாங்கனிசு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டசத்துக்கள் எலும்புகளை வலுவாக்குவதுடன், எதிர்காலத்தில் தோன்றும் மூட்டு தேய்மானப் பிரச்சனைகளையும் குறைக்கிறது. பெண்களின் இடுப்பு மற்றும் சதைப்பகுதிகளுக்கு நல்ல வலுவைத்தருகிறது.

நிலக்கடலையில் "பாலிஃபீனல்" என்ற ஆண்டிஆக்ஸிடண்ட் உள்ளது. இது நமக்கு நோய்கள் வருவதை தடுப்பதுடன், இளமையுடன் இருக்கவும் உதவுகிறது.

புற்றுநோய்:

         மிக கொடிய நோயான புற்றுநோயில் பல வகைகள் உள்ளது. ஐ.நா சபையின் உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, { WHO } வயிறு, குடல் தொடர்பான புற்றுநோய் தான் உலகில் அதிகம் மக்களை பாதித்துள்ளதாக 2012- ஆம் ஆண்டின் கருத்துக்கணிப்பு குறிப்பிடுகிறது. வேர்கடலை வயிறு, குடல் புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது. வாரத்தில் குறைந்தது மூன்று முறையாவது வேர்கடலையை சாப்பிடுவதால் புற்றுநோய் செல்கள் வளராமலும், குடற்புண்கள் ஏற்படாமலும் தடுக்கிறது. இதனை அமெரிக்க மருத்துவகுழு ஆராய்ச்சியில் உறுதிபடுத்தியுள்ளது.


Sudagarkrishnanchannels
Peanuts 


தலைமுடி உதிர்வை தடுக்க:

         
       உலகெங்கிலும் தலைமுடி உதிர்வு, சொட்டை விழுதல், முன்வழுக்கை பிரச்சனைகள் இளைஞர்கள், மற்றும், நடுத்தரவயதினருக்கு அதிகம் வருத்தமளிக்கும்  விஷயமாகவே உள்ளது.  வேர்கடலையில் வைட்டமின் பி- யினைச் சேர்ந்த, பயோட்டின் அதிகம் உள்ளது. இந்த பயோட்டின் சத்து தான் முடி வளர்ச்சியை அதிகரிக்க ஷாம்புக்களில் சிறிதளவில் சேர்க்கப்படும். பயோட்டின் தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, முடி வளர்தலையும் ஊக்குவிக்கிறது. முடி உதிர்ந்த இடங்களில், புதிய முடிகள் வளர்வதையும் ஊக்குவிக்கிறது.

தோல்நோய்கள்:


   எக்சிமா, சோரியாஸிஸ் போன்ற தோல்நோய்களால் உலகளவில் பலகோடி மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய தோல் நோய்கள் பொதுவாக பரம்பரை காரணங்கள், உடலில் செல்களில் தோன்றும் மாற்றங்களினாலும் ஏற்படுகிறது. இத்தகைய நோய்களை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் இருக்கிறது என்றாலும், முழுமையாக குணப்படுத்த மருந்துகள் மருத்துவ உலகில் தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் முடிந்தவரை எக்சிமா, சோரியாஸிஸ் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுப்பதே சிறந்தது. வேர்கடலையில் அதிக புரதங்களும், கொழுப்பு அமிலங்களும் {நன்மை செய்யும் கொழுப்பு} நிறைந்துள்ளது. வேர்க்கடலையை தினமும் சாப்பிடுபவர்களுக்கு இயற்கையாகவே செல்களில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது. இத்தகைய தோல் நோய்கள் அவர்களை பாதிப்பதில்லை

     "நிலக்கடலை ஏழைகளின் பாதாம்" என குறிப்பிடபட்டாலும், பாதாமை விட பல மடங்கு ஊட்டசத்துக்களை கொண்டது. நிலக்கடலையை வேகவைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். மாலைநேர சிற்றுண்டியாக சாலட் வகைகளிலும் கூட சேர்த்து சாப்பிடலாம். கடலைஎண்ணெய், கடலைமிட்டாய்கள் இப்படி எதேனும் ஒருவகையில் உணவில் தினமுமே எடுத்துக்கொள்ளவேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் நிலக்கடலையின் மகிமையை உணர்ந்து, அதிகமாக பயன்படுத்தும் அடிப்படை உணவாக வேர்கடலை இடம்பெற்றுள்ளது.

     வளரும் இளம் தலைமுறையினருக்கு, ஊட்டசத்துள்ள உணவு அவசியம். உணவில் அமினோ அமிலங்கள், தீமை தராத நல்ல கொழுப்பு, புரதசத்துக்கள் அவசியமாகிறது. வேர்கடலையில் இவை அனைத்துமே உள்ளது. நிலக்கடலை உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதால் உடல் வலிமை பெற்று, வயதிற்கேற்ற எடையும், உயரமும் அவர்கள் பெறுகிறார்கள். தசையும், மூளையும் நல்ல வளர்ச்சிபெற்று ஆரோக்கியமாக அவர்கள் வளர முடியும். 



நன்றி.

இயற்கைவிவசாயி!!
திரு.சுதாகர்கிருஷ்ணன்




வேர்கடலையை மாடிதோட்டத்திலே சுலபமாக வளர்க்கலாம். இந்த வீடியோவை பாருங்கள்👇👇








Also Read:


👉 உடல் எடையை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க


👉ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்க 5- பானங்கள் Weight loss Drinks 


👉பார்த்தசாரதி கோவில் புளியோதரை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?


Post a Comment

0 Comments