Translate

Avuri Leaf Benefits

 அவுரி செடியின் நன்மைகள்


Sudagarkrishnanchannels
Avuri Leaf Benefits 


  • Indigofera tinctoria (அவுரி), 
  • True Indigo, நீலி

      அதிக விலை கொடுத்து கடைகளில்  கண்டகண்ட ஹேர் டையை வாங்கி பயன்படுத்துவதால் அலர்ஜி, அரிப்பு, முடி உதிர்வு ஏற்படுவது தான் மிச்சம். சிலர் இருந்த முடியையும் இழந்துவிடுவார்கள். என் நண்பர் ஒருவருக்கு, இரசாயண டையை பயன்படுத்தியதால், கண்பார்வை மங்கலாகி போனது. இரசாயண சாயங்களினால், புற்றுநோய் பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. 
  இயற்கையாகவே முடியை கருப்பாக செய்யும் அவுரி இலைகள். நீங்கள் இதனை எங்கோ கேட்ட ஞாபகம் இருக்கும். ஆனால், அந்த செடி எப்படி இருக்கும், எப்படி பயன்படுத்துவது, பயன்கள் என்ன? என்றெல்லாம் தெரியாது. இந்த கட்டுரையில், அவுரி மூலிகை செடியினை பற்றிய முழுமையான தகவல்களை தொகுத்து எழுதி இருக்கிறேன். படித்து பாருங்கள். வேண்டியவர்களுக்கு, பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அவுரிச்செடி:

    செயற்கை சாயங்கள் கண்டுபிடிக்காத காலங்களில் குகைகள், கல் மண்டபங்கள், கோவில்களில் வரையப்பட்ட ஓவியங்களில், அழகான  வண்ணங்களுக்கு அவுரி இலைகளே பயன்படுத்தபட்டன. இதைதான் சித்தன்ன வாசல், தஞ்சாவூர் போன்ற மூலிகை வண்ண, வரலாற்று ஓவியங்களும் சான்றாக பறைசாற்றி கொண்டிருக்கின்றன.
  வெள்ளையர்களிடம் இந்தியா அடிமைப்பட்டு கிடந்த பொழுது, அவர்களின் சாயத் தேவைக்காக, அவுரிச் செடி விவசாயத்தை செய்யச் சொல்லி விவசாயிகளை கொடுமைப்படுத்தினர் ஆங்கிலேயர்கள். அவர்களை எதிர்த்து, ஒரு கட்டத்தில் போராட்டம் வெடித்தது. இதுவே, "அவுரி போராட்டம்" என வரலாறு கூறுகிறது. இப்படி வரலாற்றில் இடம்பெற்ற அவரி இப்பொழுது இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது.

  குறைந்த செலவில் அதிக பராமரிப்பு இல்லாமல் வளர்க்கப்படும் தாவரம், அவரி செடியாகும். அவுரிச் செடியை ஆடு மாடுகள் மேய்வது இல்லை.

அவுரிச்செடி வளர்ப்பு:


      அவுரியின் வயது  12 மாதங்கள் தான், அதாவது ஓராண்டு. அவுரி செடி எல்லா மண்ணிலும் சிறப்பாக வளரும்., என்றாலும், செம்மண் மற்றும்  மணல் பாங்கான மண்ணில் செழிப்பாக வளரும். கார்த்திகை மாதம் முதல் ஆடி மாதம் வரை விதைக்கலாம். கார்த்திகை பட்டத்தில் விதைத்தால்  மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை அறுவடை செய்யலாம். மற்ற பட்டங்களில் விதைத்தால் இரண்டு முறை அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 7- கிலோ விதை சரியாக இருக்கும்.

 சாகுபடி நிலத்தில் ஐந்து டிராக்டர் எருவை கொட்டி களைத்துவிட்டு, மூன்று முறை உழுது, மண்ணை புட்டு பதத்திற்கு உதிரியாக மாற்றிக்கொள்ள வேண்டும். பிறகு ஏக்கருக்கு 7 கிலோ விதையை உளுந்து விதைப்பதை போல, உழுதுகொண்டே விதைத்து விட வேண்டும். 

விதைத்த ஏழாம் நாளில் அவுரி விதைகள் முளைக்க ஆரம்பித்துவிடும். 35வது நாளில் களை எடுக்க வேண்டும். 40வது நாளில் முதல் பாசனம் செய்யவேண்டும். அந்நாட்களில் மழை பெய்தால், பாசனம் செய்ய தேவை இல்லை. அதன் பிறகு ஈரப்பதத்தைப் பொறுத்து 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். பூச்சித் தொல்லையும், நோய் தாக்குதலும் பெரியதாக இருக்காது.

60 லிருந்து 70 நாட்களுக்குள் இரண்டு முதல் மூன்றடி உயரத்திற்கு வளர்ந்து, அவுரி செடி பூ வைக்க ஆரம்பித்து விடும். பூக்கள் பார்ப்பதற்கு ஊதா நிறத்தில் மிகவும் அழகாக இருக்கும். 120 நாட்களுக்கு மேல் அறுவடை செய்யலாம். தரையில் இருந்து அரை அடி அளவிற்கு, விட்டுவிட்டு, மேலிருந்து அறுவடை செய்ய வேண்டும். அதன் பிறகு 60 நாட்கள் இடைவெளியில் இரண்டு முதல் மூன்று முறை அறுவடை செய்யலாம்.

      
Sudagarkrishnanchannels
Avuri Leaf Benefits 


 றுதாம்பு விடும்போது, கரும்புக்கு இடை உழவு செய்வதுபோல, அவுரித்தூர்களுக்கு இடையே, இடை உழவு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் வளர்ச்சி நன்றாக இருக்கும். மறுதாம்பு பயிருக்கு, இருபது நாட்களுக்கு ஒரு முறை, பாசனம் செய்தால் போதும்.

   ஒரு ஏக்கருக்கு, செலவு போக அதிகபட்சம் 30,000 வரை லாபம் எடுக்கலாம். விவசாயிகளுக்கு நஷ்டம் இல்லாத பயிராகவே அவுரி உள்ளது.

 
இந்தியாவில் அவுரி உற்பத்தி

  •           கிபி 1850 ஆம் ஆண்டு முதல் - கிபி 1900 வரை உலகளவில் இந்தியாவில் தான் அதிகளவில் "அவுரி" உற்பத்தி செய்யப்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு, அவுரி உற்பத்தி குறையத் தொடங்கியது. 
  •  தற்பொழுது இந்தியா முழுவதும், ஆண்டுக்கு சுமாராக இரண்டாயிரம் ஏக்டர் பரப்பளவில் மட்டுமே பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் மிகமிக குறைந்த அளவே பயிரிடப்படுகிறது. விவசாயிக்களுக்கு நல்ல வருமானம் தரும் பயிர்தான். விவசாயிகள் இதை பயிரிடலாம்.



அவுரி செடியின் நன்மைகள்:

     பசுந்தாள் உரமாகவும், இயற்கை நீலம் எடுப்பதற்கும் , தலைச்சாயம் மற்றும் ஹேர் ஆயில் தயாரிக்கவும் , சில குறிப்பிட்ட மருந்துகள் தயாரிக்கவும் அவுரி இலைகள் பயன்படுத்தப்படுகிறது. 18 வகையான விஷங்களை நீக்கும் தன்மை கொண்டது. தீ கொப்பளங்களை குணமாக்க அவுரி இலைகள் பயன்படுகிறது. முடி உதிர்வு பிரச்சினைகளுக்காக தயாரிக்கப்படும் தைலங்களில், கரிசல் கரிசலாங்கண்ணி நெல்லிக்காய் இவைகளுடன் அவுரி இலைகளும் சேர்க்கப்படுகிறது. கப வாத நோய்களைை தீர்க்கிறது. மலச்சிக்கலையும் கட்டுப்படுத்துகிறது. வயிற்றுப் பூச்சிகளைக் கொல்கிறது. மாலைகாகண் நோயை குணமாக்குகிறது.

இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தாது பொருட்களை மருத்துவ ரீதியாக சுத்தம் செய்வதற்கு, அவுரி இலைகள் பயன்படுகிறது.

 காமாலை குணமாக:

    ஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்தாக, அக்கால மக்களால் வீட்டு வைத்தியமாக அவுரி இலை பயன்படுத்தப்பட்டது. இன்றும் கிராமங்களில் பயன்படுத்துபவர்கள் உண்டு. அவுரி இலையை அரைத்து கொட்டைப்பாக்கு அளவு, காய்ச்சிய வெள்ளாட்டுப் பாலில் கலந்து, வடிகட்டி காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாட்கள் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை விரைவில் குணமடையும். கல்லீரல் நலத்திற்கும் இவ்வாறு பயன்படுத்தலாம். 

புகைப்பிடிப்பதை மறக்கச்செய்ய:

     புகைப்பிடிப்பதனால் ஒரு மனிதனுக்கு ஏற்படும் விளைவுகள் மிகவும் கொடூரமானது. இது நாம் அனைவரும் அறிந்ததே. சிலர் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட மனதார எண்ணினாலும், முயற்சிகள் செய்தாலும் அவரால் முடியாமல் போய்விடும். அதற்கு சிறந்த தீர்வு அவரிச்செடி இலைகளாகும். புகை பிடிப்பதில் இருந்து விடுதலை கொடுக்கிறது அவுரி செடி மூலிகை இலைகள்.

 அவுரி இலையை தேவையான அளவு எடுத்து ஒரு 10 மிளகுடன் சேர்த்து அரைத்து சாறு பிழிந்து 10 மில்லி அளவிற்கு புகைப்பிடிப்பவர்களுக்கு கொடுத்து வந்தால் புகைப்பிடிப்பதால் ஏற்படும் நோய்கள் உடம்பை விட்டு வெளியேறி, நுரையீரல் நன்கு செயல்படும். சுவாச பாதையும் நன்றாக இருக்கும். இந்த  மூலிகை மருந்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள், வாரத்திற்கு மூன்று நாள் காலை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டு வரும்பொழுது புகைப்பிடிப்பதை அவர்கள் கைவிட்டு அந்த வாசனை அவர்களுக்குப் பிடிக்காமல் போய்விடும்.

மாதவிடாய், கருப்பைகோளாறுகள் நீங்க,:

     
   அவரி இலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி, கொட்டைகரந்தை, குப்பைமேனி, செருப்படை ஆகிய மூலிகை இலைகளை சம அளவு எடுத்து காய வைத்து பொடி செய்து, அந்த பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டு வரும்பொழுது, பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய், மற்றும் மாதவிடாய் பிரச்சினைகள், கர்ப்பபபை கோளாறுகள் அனைத்தும் நீங்கும். வயிற்றிலுள்ள பூச்சிகள் அனைத்தும் வெளியேறும்.

பாம்புகடிக்கு முதலுதவி:


    யாரையாவது பாம்பு கடித்துவிட்டால் பதட்டம் அடையாமல், பக்கத்தில் எங்கேயாவது அவரிச் செடி இருந்தால், இலைகளை பறித்து, அதனை அரைத்து சாப்பிட குடிக்க கொடுக்கலாம். இதனால் விஷம் முறிவு ஏற்பட்டு, உடல் முழுவதும் விஷம் பரவாமல் அந்த நம்பர் உயிர்பழைக்க அதிக வாய்ப்புகள் உண்டு. அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு உடனே அழைத்து சென்றால் 100% அந்த நபர் உயிர் பிழைத்து விடுவார்.


 நரைத்த முடிக்கு நிரந்தர டை:


       நரைத்த முடிகள் அனைத்தும் கருப்பாக, நிரந்தரமாக மாற, எந்த பக்கவிளைவுகளும் இல்லாத இயற்கை டையை இப்படி தயாரித்து பயன்படுத்துங்கள்.
  
  • அவுரி இலைகள் அல்லது காய வைத்து தயார் செய்த அவுரி இலைப்பொடி - இரண்டு ஸ்பூன்
 {உங்களுக்கு அவுரி செடி இலைகள் கிடைக்காவிடில், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், அவுரி இலை பொடியை கூட பயன்படுத்தலாம்.}
  • மருதாணி இலைகள் காய வைத்து பொடி செய்தது  - இரண்டுஸ்பூன்.
இரண்டையும் இரவில் சுடுதண்ணீரில் ஊறவைத்து, காலையில் ஒரு பின்ச் உப்பு, மற்றும் சிறிதளவு டீ டிக்காஷன் சேர்த்து, இந்த பேக்கை தலைக்கு தடவி, ஒரு மணிநேரம் ஊறவைத்து குளித்து வந்தால் நரைமுடிகள் கருப்பாகும். இது மிகச்சிறந்த இயற்கை டையாகும்.


Sudagarkrishnanchannels
Avuri Leaf Benefits 


 அவுரி இலை பொடியை வாரமிருமுறை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள், கெட்ட கொழுப்புகள் வெளியேறும். மருந்துகள் அடித்த காய்கறிகளு,ம் அதிக அளவு மாத்திரை எடுத்துக் கொள்ளும் போது உடலில் தேவையில்லாத நச்சுக்கள் சேருகின்றன. இந்த நச்சுக்கள் வெளியேறி உடல் நல்ல ஆரோக்கியமும் பலமும் பெறும்.


ஒவ்வாமை, தோல்நோய்கள் குணமாக:

  பசுமையான அவுரிச் செடி இலைகளை ஒரு கைப்பிடி அளவு சேகரித்து கொள்ள வேண்டும். இதனுடன் மிளகுத்தூள் சேர்த்து இரண்டு டம்பளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, ஒருடம்பளராக வற்றி வரும்போது, வடிகட்டி தினமும் இரண்டு வேளைகள் ஏழு நாள் குடித்து வர தோல் வியாதிகள் குணமடையும். 

சாதாரணமாகவே, தோல் நோய்களுக்கு அவுரி செடியின் இலைகளை பறித்து அரைத்து தேய்க்கலாம். 


  • குழந்தைகளின் தொப்புளை சுற்றி விளக்கெண்ணையுடன் அவுரி செடி இலைச்சாறும் கலந்து பூசி விடலாம். இதனால் மலம் சுலபமாக வெளியேறும். இது ஒரு பாதுகாப்பான வைத்தியமும் கூட.

"உரியலவுரித்துழைத்தான் ஓதிபதினென்

அரியநஞ்சை தின்றவனுக்காகும் 

தெரிவரிய வாத கெப்பு காமாலை மைந்தர் குறு மாந்தம்சிதம் அகற்றும் தெரி "


இவ்வாறாக அகத்தியர் குணபாட நூல் , அவுரி செடியின் நன்மைகளை விளக்குகிறது.


நன்றி!!


 

Post a Comment

1 Comments

  1. அவுரி மருத்துவ குணமுள்ள செடியா சாப்பிடலாமா காமாலைக்கு சாப்பிடலாம் என்று இப்போது நான் கேள்வி படுகிறேன்

    ReplyDelete