Translate

பாலைவன வெட்டுகிளிகளை கட்டுபடுத்துவது எப்படி?

Locust control methods 

வெட்டுக்கிளிகளை கட்டுபடுத்த விவசாயிகள் பின்பற்றிய வழிமுறைகள்.

வெட்டுக்கிளிகளின் வகைகள், வெட்டுக்கிளிகளின் பரவல் பாதிப்பு, உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள தாக்கம் இதனை பற்றி முந்தைய பகுதியில் விரிவாக பார்த்தோம். இந்த பகுதியில் பாலைவன வெட்டுகிளிகளை கட்டுபடுத்தவும், வரும் முன்னரே மேற்கொள்ள வேண்டிய சில வழிமுறைகளையும் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம். வெட்டுகிளிகளை இயற்கையிலேயே அழிக்கும் பூச்சிகளை உருவாக்குவதிலும், பூச்சிகொல்லிகள் தயாரிப்பதிலும் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக பணிகளை மேற்கொண்டுள்ளனர்.


அதிக பாதிப்புகள் அடைந்த பகுதிகளில் தற்பொழுது பின்பற்றப்படும் நடைமுறைகள் என்ன?

👉ஒலிகளை எழுப்புதல்.

👉தார்பாய்களை கொண்டு பயிர்களை முடுதல்.

👉தரைவழியே பூச்சி மருந்துகளை தெளித்தல்.

👉வான்வழியே ஆளில்லாத விமானங்கள் மூலம் பூச்சிகொல்லி மருந்துகளை தெளிப்பது (ஒரு ஆளில்லா விமானம் 15-நிமிடத்தில் 2.5ஏக்கர் நிலத்தில் பூச்சி கொல்லியை தெளித்துவிடும்)

👉 ஆளில்லா விமானங்களை மோதச் செய்து  அழிப்பது.

அக்கால விவசாயிகள் பின்பற்றிய வழிமுறைகள்:


வழிமுறை /Method -1


மிளகாய் வயலில் அறுவடை முடிந்த பிறகு, இருக்கின்ற மிளகாய் செடிகளை நாம் தேவையற்றதாக பிடுங்கி எறிந்துவிடுவோம். அத்தகைய மிளகாய் செடிகளை வெயிலில் காய வைத்து, மாடி தோட்டம் அல்லது வீட்டு தோட்டத்தில்- நன்றாக எரிய விட வேண்டும். நன்றாக எரிய துவங்கும் நேரத்தில் தண்ணீர் தெளித்து அணைத்து, அதன் புகையை தோட்டம் முழுவதும் பரவ விட வேண்டும். இவ்வாறு செய்வதால் வெட்டுகிளிகள், பாலைவன வெட்டுகிளிகள் மட்டுமல்ல; பிற பூச்சிகளும் தோட்டத்திற்கு வராது. வயல்வெளிகளை பொருத்தவரை வரப்பின் ஓரங்களில்  காய்ந்த மிளகாய் செடிகளை எரிய வைத்து புகையை வயல் முழுவதும் பரவ செய்து வெட்டுகிளிகளை கட்டுபடுத்தலாம். இந்த முறையை நீங்கள் பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.


SudagarKrishnanChannels
Locust control Methods 

வழிமுறை/Method-2

மிளகாய் செடிகள் கிடைக்காதவர்கள் இந்த முறையை பயன்படுத்தி கொள்ளலாம். காய்ந்த புல் அல்லது வைக்கோல் எடுத்து கொள்ளுங்கள். இதன் மீது, வீட்டின் சமையலில் பயன்படுத்தும் மிளகாய் தூளை தூவி கொள்ளவும். இதனை மேற்குரிய முறையில் எரிய வைத்து, இந்த புகையினை தோட்டம் முழுவதும் பரவ விட வேண்டும். இந்த புகையானது பூச்சிகள்/வெட்டுகிளிகள் போன்றவைகளுக்கு ஒரு வித எரிச்சலை உண்டு பண்ணும். அதனால் அவை வந்த திசையே தெரியாமல் ஓடிவிடும்.

வழிமுறை/Method -3

மெட்டாரைசியம்அனிசோபிலியே, Metarhizium Anisophliea 
இது ஒரு நன்மை செய்யூம் இயற்கை பூஞ்சான். இது அமேசான், ப்ளிகார்ட் போன்ற வலைதளங்களிலும் கிடைக்கிறது. உரக்கடைகள், ஆர்கானிக் பொருட்கள் விற்கும் அங்காடிகள், தோட்டம் சம்பந்தமான பொருட்கள் விற்கும் கடைகள், நர்சரி கடைகளிலும் கூட கிடைக்கிறது. மெட்டாரைசியம் அனிசோபிலியே பூஞ்சையிலிருந்து 10-மில்லி அளவு எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். இலைகள் மீது ஸ்பிரே செய்து விட வேண்டும். பூச்சிகள் வருவதற்கு முன்பாகவே  தெளிக்க வேண்டும்.

இது எப்படி வேலை செய்கிறது?

பூச்சிகள் உடம்பு முழுவதும் உள்ள துளைகள் வழியாக சுவாசிக்கிறது. இந்த பூஞ்சைகள் காற்றோடு கலந்து, பூச்சிகளின் உடலுக்குள் சென்று, அவற்றை சுவாசிக்க முடியாமல் செய்துவிடுகிறது. பூச்சிகள் உணவு சாப்பிடுவதை நிறுத்திவிடும்.

SudagarKrishnanChannels
Locust control Methods 

இந்த படத்தில் நீங்கள் பார்ப்பது வெட்டுகிளி தான். மெட்டாரைசியம் பூஞ்சை பாதித்த வெட்டுகிளி. இப்படிதான் அவை மாறிவிடும். இந்த வெட்டுகிளி வெடித்து நிறைய பூஞ்சான்கள் உருவாகி, தோட்டம் முழுவதும் பரவி, எல்லா பூச்சிகளையும் அழித்துவிடும். நமக்கு எந்த வேலையும் இல்லை. இந்த பூஞ்சான்களே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும். இது கெமிக்கல் அல்ல, நன்மை செய்யும் ஒரு பூஞ்சை. மாலை வேளையில் தோட்டத்தில் தெளிக்க வேண்டும்.

வழிமுறை/Method -4 


 வேப்பங்கொட்டை +பூண்டு கரைசல்.


SudagarKrishnanChannels
Locust control Methods


100-கிராம் வேப்பங்கொட்டையுடன், 4-பல் பூண்டு சேர்ந்து அம்மிகல் அல்லது உரலில் இடித்து கொள்ளுங்கள். இடித்த பொடியினை பொடியினை காட்டன் துணியில் கட்டி,  இரண்டு லிட்டர் தண்ணீரில் (முழ்குமாறு) இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை ஊறவிடுங்கள். பின்னர் வேப்பங்கொட்டை பொடி ஊற வைத்த தண்ணீரை எடுத்து, நேரிடையாக செடிகளின் மீது தெளித்து விடலாம். வேப்பங்கொட்டை கரைசலுடன் காதி சோப்பு கரைசல் -(இதனை ஒட்டு திரவம் என குறிப்பிடுவார்கள்) கலக்க வேண்டும். இரண்டும் நன்றாக கலந்த பின்னர், செடிகளின் மீது மாலை வேளையில் தெளிக்க வேண்டும். இந்த வேப்பங்கொட்டை கரைசலில் உள்ள "அசாட்டிராக்டின்" என்ற வேதிபொருள் பூச்சிகளை செடிகளின் அருகில் வரவிடாது. அப்படியே பூச்சிகள், வெட்டுகிளிகள், பாலைவன வெட்டுகிளிகள் இலைகளை செடிகளை சாப்பிட்டாலூம் இந்த கரைசலின் தன்மை, பூச்சிகளுக்கு மலட்டு தன்மையை உருவாக்கிவிடும். அவற்றின் இனம் அடுத்த சந்ததியினை உருவாக்க முடியாமல் அழிந்தே விடும். இந்த வழிமுறைகளெல்லாம் நமது முன்னோர்கள் பின்பற்றிய வழிகள் தான். இவை சாதாரண வெட்டுகிளிகள், பாலைவன வெட்டுகிளிகளுக்கு மட்டுமல்ல. மற்ற பூச்சிகள், புழுக்களுக்கும் தான்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை,

நான் இரண்டே இரண்டு தகவல்களை மட்டும் அளித்து இந்த கட்டுரையை முடித்து கொள்கிறேன்.

Indian Remote sensing agency IRS :

பாலைவன வெட்டுகிளிகள் பறக்கின்ற உயரம் வேகம் பறக்கின்ற திசை இதனை தீவிரமாக கண்கானித்து வருகிறார்கள். அவர்களின் கருத்துப்படி, இந்த பாலைவன வெட்டுகிளிகள் தமிழ்நாட்டை தாக்க வாய்ப்பில்லை என்கின்றனர். அப்படியே பாலைவன வெட்டுகிளிகள் தமிழ்நாட்டிற்கு வந்தாலூம் அரசாங்கம் தயார் நிலையில் தான் உள்ளது.

 ஆளில்லாத குட்டி விமானங்கள் ஏறக்குறைய (30ட்ரோன்) தயார் நிலையில் உள்ளது. 4-பிளேட்கள் பொருத்தப்பட்ட இந்த குட்டி விமானங்கள் நிமிடத்திற்கு 5000-முதல் 10000-பாலைவன வெட்டுகிளிகளை கொல்லூம் ஆற்றல் கொண்டது.

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழக அரசின் வேளாண் உற்பத்தி ஆணையர் சுகன்தீப் சிங், பூச்சியல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 அதில் ஆணையர் பேசிய கருத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் உள்ளது. ரசாயான உரங்களை தவிர்ப்பதால் நன்மை செய்யூம் பூச்சிகள் அதிகரிக்கும். விவசாயபயிர்களுக்கும், மக்களுக்கும் நன்மை பயக்கும் இத்தகைய பூச்சிகள் தொடர்பான ஆராய்ச்சிகளும் நடைபெறுகிறது- என்று கூறினார்.

 இதற்கெல்லாம் தீர்வு இயற்கை விவசாயம் என்பதை வலிமையாக பதிவிட விரும்புகிறேன்.!

நன்றி!!


Post a Comment

0 Comments