MANORANJITHAM FLOWER
Manoranjitham flower |
Yalang-Yalang Vine Plant, Manorangini, Hari champa, Artabotrys hexapetalus, tail grape.
இறைவனை வழிபாடு செய்வதில் மலர்களே முதலிடம் பெறுகின்றன. ஒவ்வொரு மலருக்கும் ஒரு தனி சிறப்பாம்சம் உள்ளது. அழகிலும், நறுமணத்திலும் மலர்கள் தனிதனி இடம் பெறுகின்றது. அலங்காரத்திற்கும், திருமணத்திற்கும், திருவிழாக்களுக்கும் என பல்வேறு நிகழ்வுகளுக்கென மலர்கள் வகைப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஆனால் பூஜைக்கென்றே சிறப்பாக வளர்க்கப்படும் தாவரம் "மனோரஞ்சிதம்" தான்.. தேவர்களால் இறைவனுக்கு பூஜிக்கப்படும் மலர் மனோரஞ்சிதம் மலர்தானாம். எல்லா பூக்களுமே கிலோகணக்கில் விற்கப்படும் பொழுது, மனோரஞ்சிதம் மட்டும் தனி ஒரு பூ- 5 ரூபாய் முதல் எட்டு ரூபாய் வரை, விலை வைத்து விற்க்கப்படுகிறது..
மனோரஞ்சிதம் பூவின் வாசனை, சுமார் எட்டு மீட்டர் வரை வீசும். இந்தப் பூவை கைகளில் வைத்துக்கொண்டு, எந்த வாசனையை நாம் நினைத்தாலும் அந்த வாசனையை உடனே உணர முடியுமாம்.. ஆனால் நான் முதன்முதலில் முகர்ந்தபோது எதையும் நினைக்கவில்லை; மனோரஞ்சிதத்தை தவிற!!😊ஆக, எனக்கு நினைவில் நின்றது, மனோரஞ்சிதப் பூவின் வாசனை மட்டுமே!!
அறிவியலாளர்கள் இந்த பூவில் Methyl benzoate என்ற இராசயனம் உள்ளது. இந்த ரசாயணம் பொதுவாக நிறைய பழங்கள், பூக்களில் உள்ளது. அதனால் தான் மனோரஞ்சித மலரை கைகளில் வைத்து கொண்டு, வேறு பழத்தையோ, பூவையோ நினைத்தால், அந்த வாசனையை உணர முடிகிறது என்று விளக்கம் தருகிறார்கள்.
மனோரஞ்சிதம் தாவரம்:
மனோரஞ்சிதம் இரண்டு முதல் மூன்று மீட்டர் உயரம் வளரக்கூடியது. சீதாபழ மர வகையை {Annonaceae} சார்ந்தது. அடர்ந்து புதர் போல வளரக்கூடியது. இரண்டுமீட்டர் உயரம் வளர்ந்ததும், கொடி போல மேலெழும்பி படரும். கொக்கி போன்ற காம்புகளில், பூக்கள் வர ஆரம்பிக்கும். பூக்கள் ஆரம்பத்தில் பச்சை நிறத்தில் தான் காணப்படும்.. நாளாக நாளாக அழகான மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும். வாசனை ஊரையே கூட்டும்.. இதன் வாசனைக்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை எனலாம். நீண்ட நாட்களுக்கு மலர் வாடாமல் மணம் வீசிக்கொண்டே இருக்கும். குறைந்தது நான்கு நாட்களுக்கு வாடாது. சிவபெருமான் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மலர்.
இந்த தாவரம் இந்தியாவிலும், ஆசியாவின் வெப்பமண்டலக் காடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் அதிகம் உள்ளது. மனோரஞ்சித தாவரத்தின் காய்கள் கொத்துகொத்தாக பச்சை நிறத்தில் காணப்படும். பழங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பார்பதற்கு எலுமிச்சை பழத்தை ஒத்திருக்கும். ஆமணக்கு விதை போல கொட்டைகள் இருக்கும்.
Manoranjitham flower |
மனோரஞ்சிதம் வளர்ப்பு முறை:
நல்ல செழிப்பான மண் வளம், நீர் வளம் உள்ள இடங்களில் செழித்து வளரும் தன்மை கொண்டது மனோரஞ்சித தாவரம். இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து பலன் தரக்கூடிய பணப்பயிராக விவசாயிகளுக்கு இது விளங்குகிறது. இதனை விதைகளின் மூலமும் கிளைகளை பதியம் போடுவதின் மூலமும் வளர்க்கலாம். விதைகள் மூலம் வளர்க்கும் பொழுது, குறைந்தது 5- ஆண்டுகளாவது ஆகும் பூக்கள் பூக்க. பதியம் போட்டு வளர்க்கும் போது இரண்டு ஆண்டுகளில் அடர்ந்து வளர்ந்து பூக்கள் பூக்கும். இதன் பூக்களை பறிப்பது அவ்வளவு சுலபமல்ல; மிகுந்த கவனத்துடன் பறிக்க வேண்டும். ஒவ்வொரு பூக்களுக்கு பின்புறம் மொட்டுக்கள் இருக்கும். அவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படாமல் பறிக்க வேண்டும். பூக்களை பறித்த உடன் தண்ணீரில் போட்டுவிட வேண்டும். ஈரப்பதத்துடன் பேக் செய்து பின்னர் தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.
மற்ற மலர் சாகுபடிகளை விட, மனோரஞ்சித மலர் சாகுபடி, விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும்.
இதன் காய்கள் பழுத்தால் மாம்பழம், கொய்யாப்பழம் போல நல்ல வாசம் வீசும். எப்பொழுதும் ஈரப்பதத்தோடு மண் இருக்க வேண்டும் என்பதால், இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சுவது சிறந்தது. இயற்கை உரங்களே போதுமானது. எந்த பூச்சி தாக்குதலும், நோய்தாக்குதலும் அதிகம் ஏற்படுவதில்லை.
5 Comments
நுகரும் நறுமணம் பொங்க அழகுற அருமையாக சொன்ன மைக்கு நன்றிங்க..
ReplyDeleteஆமாம். நீங்கள் சொல்வது 100க்கு நூறு உண்மை. படிக்கும் பழக்கமே இல்லை. மனோரஞ்சிதப் பூ பற்றி, அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள். படிக்க படிக்க மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.
ReplyDeleteI am searching for the saplings to my garden one of my favourite flower thanks for information
ReplyDeleteபாம்பு வரும் என்று பலர் கூறியதை நம்பி, இதுவரை வளர்க்காமல் இருந்தேன்
ReplyDeleteதங்களின் பதிவை வாசித்த பிறகு, வளர்க்கும் எண்ணம் மேலோங்கி நிற்கிறது.
Sir where can i get a saplings
ReplyDelete