Translate

கோவக்காய் பொரியல்

கோவக்காய்/cocoinia/Ivy Gourd:

Sudagar krishnan channel
Kovakkai Poriyal 

 கோவக்காயில், இரும்புசத்து அதிகமாக இருக்கின்றது. சீறுநீரகப் பிரச்சனைகளை சரி செய்கிறது. உடல் எடைய குறைக்க விரும்புவர்கள் கோவக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சிறந்த ஊட்டசத்துக்களை அளிப்பதுடன், கொழுப்புகளை கரைக்கவும் உதவிசெய்கிறது. சர்க்கரை நோயாளிக்களுக்கு ஏற்றதொரு சிறந்த உணவுப்பொருள் கோவக்காய். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுபாட்டிற்குள் வைப்பதுடன், சிறுநீரில் அதிகளவு சத்துக்கள் வெளியேறாமல் தடுக்கிறது. புற்றுநோயை நீங்கள் தடுக்க விரும்பினால், உணவில் அடிக்கடி கோவக்காயை சேர்த்து கொள்ள வேண்டும். பெருங்குடல் ஜூரண உறுப்புகளில் சேரும் கழிவுகளை வெளியேற்றுகிறது. இரத்த ஒட்டத்தை சீராக வைத்து கொள்ள உதவுகிறது. ஏனெனில் கோவக்காயில் பொட்டாஷியம் சத்து அதிகம் உள்ளது. குறைவான ஆற்றலைக்/Calorie கொண்டது. எலும்புகளின் வளர்ச்சிக்கும் ரத்த நரம்புகளின் சீரான இயக்கத்திற்கும், தேவையான அனைத்து சத்துக்களும் கோவக்காயில் உள்ளது. வாரத்தில் இரண்டு முறையாவது கோவக்காயை பொரியல், கூட்டு, சாம்பார் என்று எதாவது ஒரு வகையில் சேர்த்து கொள்வது சிறந்தது. மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகளையும் சரி செய்கிறது. வயது வித்தியாசம் இல்லாமல், அனைவரும் எடுத்துக்கொள்ளக்கூடிய உணவுப்பொருள். கோவக்காயை நீங்கள் மாடிதோட்டத்திலூம் கூட சுலபமாக பயிரிடலாம். சிறு தண்டினை பதியம் போடுதலின் மூலம் வளர்க்கலாம். ஒரு கொடி பலவருடங்கள் வரை பலன் தரும். மூவிரல் கோவக்காய், நாமக்கோவக்காய், கருங்கோவக்காய், ஐவிரல் கோவக்காய் என நான்கு வகை கோவைக்காய்கள் உள்ளது.

கோவக்காய் பொரியல்

Method -1
  • தயாரிப்பு நேரம்-10 நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்- 10 நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு-4 நபர்கள்

தேவையான பொருட்கள்:

  1. கோவக்காய்-1/4 கிலோ
  2. வெங்காயம்-1(பெரியது)
  3. தக்காளி-2
  4. குழம்பு மிளகாய்தூள்- 2 ஸ்பூன்
  5. கடலை எண்ணெய்-1 குழி கரண்டி
  6. கடுகு- 1ஸ்பூன்
  7. உளுந்து- 1ஸ்பூன்
  8. சீரகம்- 1ஸ்பூன்
  9. கறிவேப்பிலை- 1கொத்து
உப்பு-தேவையான அளவு

செய்முறை:

Sudagar krishnan channels
Kovakkai Poriyal

ஒரு கடாயில் கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, சூடானதும், கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் தாளித்து கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும். கறிவேப்பிலையை எண்ணெயில் தாளிப்பதை விட வதக்கி கொள்வது சிறந்த பலனைத் தரும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கி கொள்ளவும். தக்காளி நன்றாக மசிய வேண்டும். (சிறிது உப்பு போட்டு வதக்கினால், தக்காளி விரைவாக மசிந்துவிடும்). தக்காளி தொக்கு பதத்திற்கு வர வேண்டும். கோவக்காயை வட்ட வடிவமாக நறுக்கி கொள்ளுங்கள், இந்த ஸ்டைல் பொரியலுக்கு இதுவே சிறந்ததாக இருக்கும். வெட்டிவைத்த கோவக்காயை போட்டு கொஞ்சம் வதக்கி கொள்ளவும். இரண்டு நிமிடங்கள் வதக்கி கொள்ளவும். குழம்பு மிளகாய் தூள், உப்பு சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும். இப்பொழுது உப்பு காரம் சரி பார்த்து கொள்ளவும். உங்களிடம் தனிமிளகாய் தூள் மட்டுமே இருக்கிறதென்றால், அதனுடன் ஒருஸ்பூன் தனியா பொடி சேர்த்துக்கொள்ளவும். (முடிந்தளவு தனிமிளகாய் தூள் உபயோகிப்பதை தவிர்க்கவும். வீட்டில் தயாரிக்கப்படும் குழம்பு மிளகாய்தூளையே சமையலுக்கு பயன்படுத்துங்கள்) தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி விடவும். குறைந்த தீயில் ஏழு முதல் பத்து நிமிடங்கள் வரை வேக விட வேண்டும். தண்ணீர் வற்றியதும்,  பொரியலை ஒரு கிளறுகிளறி   அடுப்பை அணைத்துவிடுங்கள். கரம்மசாலா பொடி இருந்தால், 1/4-ஸ்பூன் கூட நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். மசாலா சேர்ப்பது புது சுவையை கொடுக்கும். கரம்மசாலா என்பது மசாலா பொருட்களின் பொடி தான் என்பதால், சீரணத்திற்கு உதவும். காய்கறிகளை எப்பொழுதும், குறைந்த தீயில், மூடி இட்டு வேக வைப்பதே சிறந்தது. ஊட்டச்சத்துக்கள் முழுவதுமாக கிடைக்கும். இப்பொழுது சுவையான கோவக்காய் பொரியல் தயாராகிவிட்டது. தயிர்சாதம்,சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கு சிறந்த காமினேஷன். 

கோவக்காய் பொரியல்:

Method -2

தேவையான பொருட்கள்:

  1. வெங்காயம் - 1பெரியது
  2. பச்சை மிளகாய் - 3
  3. தேங்காய் துருவல் - 2ஸ்பூன்
  4. கோவக்காய் - 1/4கிலோ
  5. கடலை எண்ணெய் - 1குழிகரண்டி
  6. கடுகு -1/2ஸ்பூன்
  7. சீரகம் - 1/2 ஸ்பூன்
  8. உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்

செய்முறை:

ஒரு அடி கனமான பாத்திரத்தில் அல்லது கடாயில் கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஒரு குழிக்கரண்டி ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சூடானவுடன் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை கடுகு, சீரகம் உளுத்தம்பருப்பு தாளித்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், மற்றும் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாயை பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் வதங்கிய பிறகு, நறுக்கி வைத்துள்ள கோவக்காயை போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும். இந்த வகை பொரியலுக்கு உங்களுக்கு பிடித்த வடிவங்களில் கோவக்காயை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு நிமிடங்கள் வதக்கிய பிறகு, தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து ஏழு முதல் பத்து நிமிடங்கள் குறைந்த தீயில் மூடியிட்டு வேகவிடவும். நன்றாக வெந்து, தண்ணீர் வற்றிய பிறகு அடுப்பை அணைத்து விடவும்.  இப்பொழுது துருவி வைத்த தேங்காய் துருவலை இரண்டு ஸ்பூன் சேர்த்து கிளறிக் கொள்ளவும். கோவைக்காய் பொரியல் தயாராகிவிட்டது. இந்த முறையில் கோவக்காய் பொரியல் செய்வது மிகவும் சுலபமானது. பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். தேங்காய் துருவல் சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும் தேங்காய் துருவல் சேர்த்து பின்னர்,  வேக விடக்கூடாது. ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடும். தேங்காய் சேர்க்கும் உணவுப் பொருட்களை வேக விடுவதால் எந்த ஊட்டச்சத்துக்களும் கிடைக்காது. இந்த இரண்டு பொரியல் முறைகளையும் செய்து பாருங்கள்.நன்றி!!

Post a Comment

0 Comments