Translate

வல்லாரை கீரையின் மருத்துவ பயன்கள்

Vallarai Keerai Medicinal uses   

Sudagarkrishnanchannels
Vallarai keerai medicinal uses 

வல்லாரை கீரை/Centella Asiatica  

 வல்லாரை சுலபமாக வளர்க்க கூடிய  தாவரம். வல்லாரை கீரையின் இலை தண்டுகள், பூக்கள் அனைத்துமே மருந்தாக பயன்படுகிறது. வேர்கள் மற்றும் விதைகளிலிருந்தும் பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. வல்லாரையை மாடிதோட்டத்தில் சுலபமாக வளர்க்கலாம். வல்லாரைகீரை வளர்ப்பது மிகவும் சுலபமான காரியம். ஈரப்பதம் உள்ள இடங்களில் வல்லாரை தாறுமாறாக விளையும். சிறிய தண்டுகளை நட்டு வைத்தாலே போதும். அதுவாகவே படர்ந்து செழித்து வளர்ந்துவிடும்.  வல்லாரை  வளர்ப்பு, உரங்கள், பூச்சிகள் கட்டுப்பாடு, பாராமரிப்பு முறைகளை பற்றி சென்ற பதிவில் விளக்கமாக கூறியிருந்தேன். அதனையும் நேரமிருந்தால் வாசியுங்கள். 

வல்லாரைகீரையின் மருத்துவப் பயன்கள்:

 வல்லாரை கீரையில் இரும்புசத்து, சுண்ணாம்புசத்து,  தாதுஉப்புக்கள் உயிர்சத்து, விட்டமின் A,C அதிகம் உள்ளது. மூளைவளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் உதவுகிறது. இது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். மூளை நன்கு செயல்பட தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. மாத்திரைகள், பொடிகள், லேகியம் போன்ற வடிவங்களிலும் தயாரிக்கப்பட்டு, கடைகளில் சுலபமாக கிடைக்கிறது. வல்லாரைகீரை இலைகளை பற்களின் மீது தேய்ப்பதால், (காய வைத்து தயாரித்த வல்லாரை பொடியை கூட பயன்படுத்தி கொள்ளலாம்) மஞ்சள் கறை நீங்கி, பற்கள் மின்னும். பற்கள் ஈறுகள் வலுவடையும். வாய்புண் வாய்நாற்றம் நீங்க, வல்லாரைகீரை இலைகளை காலைவேளையில் மென்று தின்று வரலாம். படை போன்ற சருமநோய்கள் குணமாகும். முடி, தோல் நகம் நல்ல பொலிவினை பெறும். கீரை இலைகளுடன் கல்கண்டு, பசும்பால், குங்குமப்பூ அரைத்து 96-நாட்கள் சாப்பிட்டுவந்தால், முகம் பளப்படையும். இளமைத் திரும்பும். இவ்வாறு சாப்பிடும் காலங்களில் மாமிசத்தை தவிர்த்துவிடுதல் நல்லது. யானைக்கால் நோய் உள்ளவர்கள் வல்லாரைக் கீரையின் இலைகளை அரைத்து பற்று போல போட்டு வந்தால், கால் வீக்கம், நோயின் தாக்கம் குறையும். தொழுநோய் போன்ற கொடிய நோய்களையும் குணப்படுத்துகிறது.


Sudagarkrishnanchannels
vallarai keerai medicinal uses 


இரத்தசோகை- இரத்தில் ஹூமோகுளோபின் அளவினை அதிகரிக்கிறது. இரத்தசோகை நோயை குணப்படுத்துகிறது. இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. ஆஸ்துமா, சளி இருமல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவோர் வல்லாரை இலைகளை தேனீருடன் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம். நல்ல பலனடைவீர்கள். பார்வைதிறனை அதிகரிக்கிறது. கண் எரிச்சல், கண்களில் நீர்வடிதல்  போக்கி, கண் நரம்புகளை பலமடைச்செய்து பார்வை கோளாறுகளை சரி செய்கிறது. காய்ச்சல் இருமல், சளி குணமடைகிறது. வல்லாரை இலையுடன் துளசி இலைகள், மிளகு சம அளவு எடுத்து, விழுதாக அரைத்து மாத்திரைகளாக சாப்பிட்டு வந்தால், காய்ச்சல் குணமாகிவிடுவதோடு அல்லாமல் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். உடற்சோர்வு தொண்டைக்கட்டு இதனையும் சரிசெய்கிறது. மலச்சிக்கலை போக்கி, வயிற்றுப்புண் குடல் புண்ணை ஆற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லது. வல்லாரை கீரைபயன்படுத்தி எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். இதனால் உடல் சோர்வு, மனச்சோர்வு உடம்பு எரிச்சல், உடல் சூடு குறையும். சிறியவர்களுக்கு 10-வல்லாரை இலைகளை பச்சையாகவே சாப்பிட கொடுக்கலாம். மூளை நரம்புகள் பலம்பெறும். நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும். காசநோய் உள்ளவர்களுக்கும் சிறந்த பலனை தருகிறது. வல்லாரை இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து, இரவில் தூங்கப்போகும் முன், பாலில் கலந்து குடித்துவந்தால் வயிற்று பூச்சிகள் அழிந்துவிடும். வல்லாரை இலைகளை விளக்கெண்ணெய்யில் வதக்கி வீக்கம், கட்டிகள் மேல் கட்டி வர, விரைவில் குணமடையலாம்.

 விளம்பரங்களிலும், பெரிய கடைகளிலும் கண்ணைகவரும் நிறங்களில் வடிவங்களில் அதிக விலைகளில் ஏராளமான ஊட்டத்து பானங்கள் விற்கப்படுகின்றன. அதையெல்லாம் விரும்பி வாங்கும் நாம், நமது முன்னோர்கள் காட்டிய எளிய வழியில் பயணிக்க விரும்புவதில்லை. சுலபமாக கிடைக்கும் இந்த கீரைகள், காய்கறிகள் இதனை தவிற வேறெந்த ஊட்டச்சத்து பானங்களும் சாப்பிட்டு அவர்கள் ஆரோக்கிய வாழ்கை வாழவில்லை என்பதை மறந்துவிடாதீர்கள்! குழந்தைகளுக்கு சொத்துக்கள் சேர்க்கத்தேவையில்லை. ஆரோக்கிய வாழ்கையை அடித்தளமாக கொடுங்கள். அதுபோதும் அவர்களை சாதனையாளனாக மாற்றுவதற்கு. நன்றி!

வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே-பழமொழி

                        
         

வல்லாரைகீரை சமையல்/Gotu kola Simple Recipes:

வல்லாரைகீரை இலைகளை பயன்படுத்தி, வல்லாரை ஜூஸ், வல்லாரை தோசை, வல்லாரை கடையல், வல்லாரை கூட்டு, வல்லாரைகீரை சாம்பார் இவ்வாறு பல்வேறு வகையான உணவுகளை தயாரிக்கலாம். அவற்றில் சுலபமான இரண்டை மட்டும் இங்கு காணலாம். வல்லாரை கீரையை பயன்படுத்தி சமைக்கும் பொழுது, கொஞ்சம் கசப்பு தன்மை வாய்ந்ததாக உணவு இருக்கும். காம்பை மட்டும் கிள்ளி எடுத்துவிட்டு, இலைகளை சமையலுக்கு பயன்படுத்தலாம்.


வல்லாரைகீரை கடையல்:

தேவையான பொருட்கள்:

  1. வல்லாரை இலைகள்- 1 கப் ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. பாசிபருப்பு-1/2 கப்
  3. வெங்காயம்-1 (சிறிய அளவு)
  4. தக்காளி-4
  5. பூண்டுபல்-4
  6. பச்சைமிளகாய்-1
  7. மஞ்சள்பொடி-சிட்டிகை அளவு
  8. பெருங்காய பொடி-1/4 ஸ்பூன்

தாளிக்க:

கடுகு-1/4 ஸ்பூன்
சீரகம்-1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு-1/4 ஸ்பூன்
கடலை எண்ணெய்-1 குழி கரண்டி
வரமிளகாய்-4

செய்முறை:

குக்கரில் வல்லாரைக் கீரை இலைகள், பாசிப்பருப்பு வெங்காயம் தக்காளி பூண்டு பச்சை மிளகாய் மஞ்சள் பொடி பெருங்காயப் பொடி எல்லாவற்றையும் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். நான்கு விசில் போதுமானது. பாசிப்பருப்பு என்பதால் சீக்கிரம் குழைந்துவிடும். பிரஷர் நீங்கிய பிறகு குக்கரை திறந்து, மத்து அல்லது கரண்டியால் மசித்து விடுங்கள். தண்ணீர் குறைவாக இருந்தால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். உப்பு சரி பார்த்து சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடான பின்னர், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு தாளித்துக் கொள்ளவும். ஏற்கனவே நாம் தயார் செய்து வைத்த பாசிப்பருப்பு கீரை மசியலில், தாளித்த இவற்றை சேர்த்துக் கொள்ளவும். சூப்பரான சுவையான பாசிப்பருப்பு வல்லாரைக் கீரை கடையல் தயார். இந்த வகை கீரை கடையல், சாதத்திற்கு சூப்பராக இருக்கும். குழந்தைகளுக்கு நெய் சேர்த்து ஊட்டி விடலாம். மிகவும் ஆரோக்கியமானது. வாரமிருமுறை  வல்லாரைகீரை கடையல் உணவில் சேர்த்துகொள்வது மிகவும் சிறந்த பலனைக் கொடுக்கும்.

வல்லாரைகீரை தோசை:

தேவையான பொருட்கள்:

  1. வல்லாரைக் கீரை -1கப்
  2. பச்சை மிளகாய்- 4
  3. சீரகம்-1 ஸ்பூன் 
  4. எண்ணெய் அல்லது பசு நெய்-தேவையான அளவு 
  5. உப்பு- தேவையான அளவு
  6. தோசைமாவு-1கப்


செய்முறை:

வல்லாரை கீரை இலைகளை சுத்தம் செய்து அலசி, பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். வல்லாரைக் கீரை, பச்சை மிளகாய் 4, சீரகம் ஒரு ஸ்பூன், உப்பு இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். தோசை மாவில் வல்லாரை கீரை அரைத்த விழுதை கலந்து கொள்ளவும். தோசை மாவினை  அப்படியே பத்து நிமிடம் வைத்துவிடவும்.  தோசைமாவினை எடுத்து எப்பொழுதும் போல தோசை சுடலாம். இந்த தோசை பச்சை கலராக பார்ப்பதற்கு, மொறு மொறுவென்று அழகாக இருக்கும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சத்துக்களும் சுலபமாக கிடைத்துவிடும்.

    

Post a Comment

0 Comments