Translate

Best Indoor Plants For Home

 வீட்டிற்குள் வளர்க்க சிறந்த உட்புற தாவரங்கள்


     உணவு உற்பத்தியை  விவசாயம் என்று குறிப்பிடும் கல்வியாலர்கள், வீட்டில் சிறியதாக தோட்டம் அமைத்து செடிகொடிகளை வளர்க்கும் போது அதை விவசாயம் என குறிப்பிடாமல், கலை "It is an Art" என்றே குறிப்பிடுகிறார்கள். "Horticulture" "தோட்டக்கலை" 

Sudagarkrishnanchannels
Best Indoor Plants For Home 


சில மாடி தோட்டங்கள் மிகுந்த கலைநயத்துடன் அமைக்கப்படுகிறது. அத்தகைய மாடித் தோட்டங்களில் புத்தர் சிலைகளும், வாட்டர் பால்ஸ் எனப்படும் நீரூற்றுகளும் அங்கங்கே தொட்டிகள் அமைத்து அழகிய குளத்தில் அல்லி, தாமரை போன்ற மலர்களும் அழகிற்காக வளர்க்கப்படுகிறது.
சிலரின் மாடி தோட்டங்கள் அவர்களுக்கு பொழுதுபோக்காகவும், மனதிற்கு அமைதியை கொடுப்பதாகவும், தியானம் தரும் இடமாகவும், பக்தி மிகுந்த இடமாகவும் கூட அமைகிறது. அங்கே சில நேரங்களில் கடவுள் சிலைகளும் கூட அமைக்கப்படுகிறது. ஏன்! எனக்கு தெரிந்து பூஜை அறையில் தாவரங்களை வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள். 

மாடிதோட்டங்கள் காய்கறி செடிகளுக்காக மட்டுமே என சிலர் நினைக்கிறார்கள். அழகிய மலர்செடிகளும் உட்புற தாவரங்களும் வளர்ப்பது பணமும் உழைப்பும் வீண் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உட்புற தாவரங்கள் பல நன்மைகளை நமக்கு கொடுக்கிறது. இதை பற்றி ஏற்கனவே விரிவான பதிவு ஒன்று நான் கொடுத்திருக்கிறேன். Kgf Chapter 2 போல உட்புறதாவரங்கள் வளர்ப்பின், இது இரண்டாம் பாகம் Part-2 எனலாம். அந்த கட்டுரையின் லிங்க் இங்கே கொடுத்திருக்கிறேன். படித்து பாருங்கள். உட்புற தாவரங்கள் வளர்ப்பில் ஒரு முழுமையான தெளிவு பெறலாம்.




கடையிலிருந்து வாங்கி வந்து, வைத்த உட்புற தாவரங்கள் சில நாட்களில் இறந்து போவது ஏன்?

 மில்லியன் டாலர்கேள்வி இது. கடையில் மிக அழகாக இருக்கும் செடிகள் வீட்டில் வைத்ததும் வாடியும், இறந்து போவதும் ஏன்?

உட்புற தாவரங்களை வளர்க்க விருப்பம் கொண்டவர்கள் அதிக விலை கொடுத்து அழகிற்காகவும்  ஆடம்பரத்திற்கும் வாங்கி வைத்துவிடுகிறார்கள். அதன் வரலாறு தெரிந்துகொள்ளவில்லை என்றால் பரவாயில்லை. அந்த செடியை பற்றிய ஒரு அடிப்படை தகவல் கூட தெரியாமல் வாங்கி வைத்துவிடுகின்றனர். சிலகாலங்கள் அந்த செடிகளும் , அந்த சூழ்நிலையை ஏற்றுகொள்ள முயற்சி செய்து முடியாமல் காய்ந்து இறந்துபோய்விடுகிறது. பிறகு, வருத்தபட்டு பிரயோஜனம் இல்லை.

  • ஒரு செடி நம்முடைய காலநிலைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றதா? 
  • குழந்தைகளுக்கும், வீட்டில் வளர்க்கும் செல்லபிராணிகளுக்கும் ஏற்றதா?
  • எந்தெந்த இடங்களில் வளர்க்கலாம்?
  • இதனை வீட்டில் வளர்க்கலாமா? 
{விருட்ச சாஸ்திரப்படியும், வாஸ்து சாஸ்திரப்படியும் இந்த செடிகள் நம் குடும்ப நன்மைக்கும், பொருளாதார நன்மைக்கும் உகந்தது என வரையறுக்கப் பட்டுள்ளது.}
என பலவற்றையும் நாம் தெரிந்து கொண்டு செடிகளை வாங்கிவந்து வளர்க்க வேண்டும். அப்பொழுது தான் செடிகள் வளர்க்கும் அழகிய கலையில் வெற்றி பெற முடியும்.

வீட்டிக்கேற்ற சிறந்த உட்புற தாவரங்கள்:

  இந்த பதிவில் வீட்டில் வளர்க்க ஏற்ற, சுலபமான, சிறந்த, சரியான தாவரங்களை உங்களுக்கு பட்டியலிட்டிருக்கிறேன். இவற்றில் சிலவற்றை என் அனுபவத்திலும் சிலவற்றை கண்டும், கேட்டும் ஆராய்ந்தறிந்தும் தெரிந்து கொண்டேன். நிச்சயமாக இந்த ஆலோசனைகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.


1. கற்றாழை:


  கற்றாழை வீட்டிற்குள்ளும் வெளியிலும் வளர்க்க {Indoor and Outdoor} பொதுவான ஏற்ற ஒரு தாவரமாகும். மிக சுலபமாக வளரக்கூடியது. கற்றாழை சக்யுலன்ட் Succulent இனத்தை சார்ந்தது. அதன் இலைகளில் தண்ணீரை சேமித்து கொள்ளும் ஆற்றல் கொண்டது. இதனால் வீட்டிற்குள் வைத்து வளர்க்கும் பொழுது, ஒரு வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் கொடுத்தாலே போதுமானது. கற்றாழையிலிருந்து புதியதாக முளைக்கும் செடிகளை {Baby Plants} உட்புற தாவரங்களாக நாம் வளர்க்கலாம். கற்றாழையை தண்ணீரிலும் வளர்க்கலாம். கற்றாழை ஒரு சிறந்த வாஸ்து தாவரமாகும். கற்றாழையை வீட்டின் உள்ளே வளர்க்கும் பொழுது, மின்னணு சாதனங்களில் இருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தன்னிடம் கவர்ந்திழுத்து சூழ்நிலையை சுத்தப்படுத்துகிறது. கற்றாழையின் பயன்களை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. கற்றாழை உடலுக்கு முக அழகிற்கும் மிகுந்த நன்மைகளை தரக் கூடியது.

2.மணிபிளாண்ட்ஸ்:


Sudagarkrishnanchannels
Best Indoor Plants For Home 


  மணிபிளான்ட் செடியில் ஏராளமான வகைகள் உள்ளது. 
  • Golden Money Plants - Epipremnum aureum 
  • Split leaf Money Plant - Monstera deliciosa 
  • Marble Queen Money Plants - Epipremnum aureum Marble Queen 
  • Marble Prince Money Plants - Epipremnum aureum Marble Prince 
  • Sliver Money Plants - Scindapsus Pictus 
  • Swiss Cheese Money Plant- Monstera Obliqua 
  • Big leaf Money Plant - Scindapsus aureus 
  • Jade Plants  - Epipremnum aureum Jade 
  • Neon Money Plants - Epipremnum aureum Neon 
எனக்கு தெரிந்தவரையில் இந்த ஒன்பது வகை மணி பிளாண்ட்ஸ் தான் உள்ளது. கடைகளில் பொதுவாக இந்த வகைகளே விற்பனையில் அதிகமாக உள்ளது.

மணி பிளான்ட் அனைத்து வகைகளையும் தண்ணீரில் வளர்க்கலாம் மேலும் தொங்கும் செடிகளாக, அழகு செடிகள் வளர்ப்பதற்கும், நம் விருப்பப்பட்ட வடிவத்தில் அமைப்பதற்கு ஏற்ற ஒரு தாவரம் மணி பிளாண்ட் ஆகும்.
வாஸ்துபடி மணி பிளாண்ட்டை தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும் அப்பொழுதுதான் வீட்டிற்கு செல்வம் அதிகமாக சேரும்.


3.மூங்கில் வகை தாவரங்கள் : Bamboo  Plants :


மூங்கில் மரங்கள் மற்றும் செடிகளை நாம் காடுகளில் தான் அதிகமாக பார்த்திருப்போம். ஆனால் தற்போது அந்த மூங்கில் செடி நம் வீட்டை அலங்கரிக்கவும் உதவுகிறது. இந்த செடிகள் காற்றில் கலந்துள்ள பார்மால்டிஹைடு நச்சுக்களை நீக்குவதோடு, இயற்கையான ஈரப்பதம் கொடுப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வகை செடிகளை நீங்கள் தாராளமாக வீட்டில் வளர்க்கலாம். மூங்கில் வகை செடிகளை நீங்கள் தண்ணீரிலும் வளர்க்கலாம், மண்ணிலும் வளர்க்கலாம். மண்ணில் வளர்க்கும் பொழுது மண் சற்று பொலபொலவென உதிரியாக இருக்க வேண்டும்.

4. ஸ்நேக் பிளாண்ட்ஸ்:

        தமிழில் மருள் என அழைக்கப்படும் Snake Plant தாவரங்கள் தண்ணீர் இன்றி பல நாட்கள் வாழக்கூடியது.  குறைந்த வெளிச்சத்திலும் நன்கு செழித்து வளரக்கூடியது. எல்லாவற்றுக்கும் மேலாக நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் பார்மால்டிஹைடு இவற்றை கிரகித்து ஆக்சிஜனை நாள் முழுவதும் வெளியிட கூடியது. அதனால் இது படுக்கை அறையில் வைப்பதற்கு ஏற்ற தாவரமாகும். நாசாவால் அடையாளம் காணப்பட்ட சிறந்த காற்று சுத்திகரிப்பு தாவரங்களில் இதுவும் ஒன்று.

5. ஐவி: Ivy 


Sudagarkrishnanchannels
Best Indoor Plants For Home 


 இது படரும் தன்மை கொண்ட அழகான கொடிவகையைச் சார்ந்தது. இதனை தொங்கும் தாவரமாக வளர்க்கலாம். பல வீடுகளில் அழகுக்காக முகப்பில் படரவிட்டு இருப்பதை பார்த்திருப்போம். இவ்வகை செடி அழகு மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட என்றால் நம்ப முடிகிறதா? அதிலும் குறிப்பாக ஆஸ்துமா மற்றும் அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் வீட்டில் இதனை வளர்ப்பது மிகவும் பயன் தரும்  இது காற்றில் உள்ள பார்மால்டிஹைடு மற்றும் அசுத்தத்தை நீக்கக்கூடியது. வறட்சியிலும் எளிதாக வளரக்கூடிய தன்மை கொண்டது.

6.எலுமிச்சைப் புல் :


   அருகம்புல், கோதுமை புல் போல எலுமிச்சை புல்லும், நமக்கு நன்மை பயக்கும் தாவர வகையாகும். நல்ல வாசனை தரக்கூடியது. இதனால் லெமன்கிராஸ் பாக்டீரியாக்கள் காற்றில் உள்ள நுண்ணுயிர்கள் இவற்றை அழித்து சுத்தமான காற்றை தருகிறது  இந்த செடியை மிதமான வெப்பத்தில்  வைத்து வளர்க்கலாம். பால்கனி வீட்டின் முற்றம் போன்ற இடங்களில் உட்புற தாவரமாக வளர்க்கலாம் தண்ணீரிலும் இந்த செடியை வளர்க்கலாம்.


7.ஆப்ரிக்கன் வயலட்: African Violet:


     உட்புற தாவர வகைகளில் ஆப்பிரிக்கன் வைலட் செடி பார்ப்பதற்கு சிறியதாக, அழகான பூக்களுடன் காணப்படும்.  இந்த செடியை ஜன்னல் மற்றும் படுக்கை அறையின் பக்கத்தில் வைத்தால் வீடே அழகுடன் தோற்றமளிக்கும். ஒரு மிதமான வெளிச்சமும் ஈரப்பதமும் இந்த செடிக்கு அவசியம். ஒரு செடி வைத்தாலே போதும்; அது தானாகவே தோட்டம் முமுவதும் பரவி, கொத்துக்கொத்தாக அழகான பூக்களை பூத்து காணப்படும். உட்புற தாவரங்களில் பூக்கள் பூக்கும் தாவரங்கள் ஒரு சில தான். அவற்றில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கக்கூடியது ஆப்பிரிக்கன் வைலட் தாவரங்கள். ஊதா நிறம், பிங்க், மஞ்சள், வெள்ளை போன்று பல அழகான வண்ணங்களில் இப்பொழுது இந்த தாவரங்கள் கிடைக்கிறது.

8.காக்டஸ்:

 காக்டஸ் வகை செடிகளை பராமரிப்பது மிகவும் சுலபமானது. இவற்றின் வளர்ப்பு, பராமரிப்பு எல்லாமே கற்றாழை செடியை போன்றதுதான். வீட்டிற்குள் அழகுக்காக வளர்க்கப்படும் செடிகளில் மிகவும் குறிபிடதக்கது காக்டஸ் செடிகள் 




9.ஸ்பைடர்பிளாண்ட்:

   எளிதில் வளரக்கூடியதும் மிக நீளமான இலைகளை கொண்டிருப்பதும் இந்த செடியின் சிறப்பு தன்மை. சிலந்தியின் கால்களை போன்ற தோற்றத்தில் இலைகளை கொண்டுள்ளதால் இது சிலந்தி செடி என அழைக்கப்படுகிறது. காற்றை சுத்திகரிக்கும் செடிகளில் சிறந்தது என்று நாசாவினால் பரிந்துரைக்கப்பட்ட செடியாகும்.

10. பீஸ் லில்லி:

 பீஸ் லில்லி ஒரு பூக்கும் தாவர வகையைச் சேர்ந்தது. அழகான வெள்ளைப் பூக்களைக் கொண்டது. கோடை காலங்களில் இதன் பூக்கள் பூத்து, அதன் மகரந்தங்கள் காற்றில் கலக்கின்றன. இதனால் மனதிற்கு புத்துணர்ச்சியும் நிம்மதியும் கிடைக்கிறது. காற்றை சுத்தப்படுத்தும் செடிகளில் இதுவும் குறிப்பிடதக்கது. உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பரிசளிக்க சிறந்த தாவரமாகும்.
இதற்கு மிதமான வெப்பம், ஈரப்பதம் அவசியம். அதனால் ஜன்னல் ஓரங்களிலோ அல்லது பால்கனியில் வைத்து வளர்க்கலாம்.

11.ஃபெர்ன்:

 நன்கு பராமரிக்கப்பட்டு கவர்ச்சிகரமான தொட்டியில் வளர்க்கப்படும்போது, வீட்டிற்கு தனி அழகை கொடுக்கக்கூடிய ஒரு செடியாக ஃபெர்ன்ஸ் உள்ளது. இது வீட்டில் நல்ல மனநிலையை ஏற்படுத்துகிறது. சூரிய ஒளி இல்லாமல் வளரக் கூடிய தாவரம் என்பதால், நமது குளியலறை, சமையலறை போன்ற இடங்களில் கூட இதை வளர்க்க முடியும். இது சுத்தமான காற்றை உற்பத்தி செய்தால் நமக்கு நல்ல காற்று கிடைக்கிறது. எனவே வீட்டின் உட்புறத்தில் வளர்க்க சிறந்த ஆதாரமாக ஃபெரன் வகை செடிகள் உள்ளது.

12.அரலியா:

அடர்த்தியாக வளரும் தன்மை பெற்றிருப்பதால், இதை எல்லா இடங்களிலும் வைத்துக்கொள்ள முடியும். டீபாய், டைனிங் டேபிள் மீது வைப்பதற்கு ஏற்ற செடியாகும். இந்த செடியின் இலை அமைப்பு அவுட்டரில் வெள்ளை கலர் இன்னர் அமைப்பில் பச்சை கலர் என பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். இதன் விலை 50 லிருந்து 250 ரூபாய் வரைக்கும் விற்கப்படுகிறது. நர்சரிகளில் அரலியாவில் இரண்டு வகை விற்கப்படுகிறது. எனக்கு மிகவும் பிடித்த செடி அரலியா. இந்த செடி இல்லாமல் என் தோட்டம் எப்போதுமே இருந்ததில்லை.

13. டிரசீனா Dracaena:


Sudagarkrishnanchannels
Best Indoor Plants For Home 


 ஒரு சிறந்த அலங்கார தாவரமாகும். தேவாலயங்கள், திருமண சுப நிகழ்ச்சிகளிலில் செய்யப்படும் பூக்கள் அலங்காரங்களில் இந்தச் செடி இல்லாமல் அலங்காரங்கள் நடைபெறுவதில்லை. மிகவும் அழகானது. இந்த செடியை வளர்ப்பது மிகவும் சுலபம். பராமரிப்பு இல்லாதது. வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் கொடுத்தால் போதுமானது. காற்றில் இருக்கும் ஈரப்பதத்திலே நன்றாக வளர்ந்துவிடும். ஒருமுறை வைத்தாலே போதும். பல ஆண்டுகள் பசுமையாக வளர்ந்து இருக்கும். இந்த செடியின் கிளைகளை கத்தரித்து வளர்ப்பதன் மூலம் மற்றொரு செடியை உருவாக்கலாம்.


14. ZAMIOCULCAS Plants 
ZZ Plants:

 காற்றை சுத்தப்படுத்தும் செடிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது சிசி பிளான்ட். சிசி பிளான்ட் வளர்ப்பது மிகவும் சுலபமானது. அதன் வேர் பகுதிகளில் கிழங்குகளை கொண்டுள்ளதால் அதற்குள் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளும். ஒரு மாதத்துக்கு ஒரு முறை தண்ணீர் கொடுத்தால் கூட சிசி தாவரங்கள் உயிர்வாழும். பராமரிப்பு பூச்சி தாக்குதலும் அதிகம் இல்லாமல் வளரக்குடியது.  இந்த செடிக்கு வெளிச்சமே தேவையில்லை. அதனால் குளியலறையிலும் கூட இந்த செடியை சுலபமாக வளர்க்கலாம். பார்ப்பதற்கே மிகவும் அழகானதொரு செடி. ஒருமுறை இந்த செடியை வாங்கி வளர்த்தால் அதிலிருந்து கிழங்குகளை எடுத்து, பதியம் போட்டு பலநூறு செடிகளை உருவாக்கிக் கொள்ளலாம்.


15. ரப்பர் பிளாண்ட்: Ficus elastica 

 ரப்பர் தாவரத்தின் இலைகள் பார்ப்பதற்கு பாதாம் மர இலைகளைப் போல பெரிய அகலமானது. ரப்பர் தாவரங்கள் வீட்டின் வரவேற்பறையிலும் படுக்கை அறையிலும் அலங்கரிக்க மிகவும் ஏற்ற ஒரு தாவரமாகும். பார்ப்பதற்கு மிகவும் அழகு வாய்ந்த தாவரம். பளபளப்பான இலைகளை கொண்டிருக்கும். இவற்றில் இப்பொழுது மூன்று வெவ்வேறு வகை  கிடைக்கிறது. விலை சற்று அதிகம் தான். ஆனால் ஒருமுறை வாங்கி வைத்தால் பல ஆண்டுகள் வரை எவ்வித பராமரிப்பும் இல்லாமல் அழகாக வளர்ந்து இருக்கும். தோல் நோய்களை குணப்படுத்த ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த செடி பயன்படுத்தப்படுகிறது.



தோட்டக்கலை என்பது ஒரு தியானம். மனதிற்கும் உடலிற்கும் அது புதிய புத்துணர்ச்சியை கொடுக்கிறது. இயற்கையோடு மனிதன் சேர்ந்து வாழ்ந்ததன் தொடர்ச்சியாகவே இன்றும் வீட்டுக்குள் செடியை வளர்த்து, அந்த இயற்கை அழகோடு வாழ்கிறோம்., இயற்கையின் அரவணைப்போடு ஒவ்வொரு நாளையும் துவங்கும்போது சொர்கத்திலே வாழும் மகிழ்ச்சியை பெற முடியும் என்பது உறுதி.







  நன்றி!!
அன்புடன்
இயற்கை விவசாயி

திரு.சுதாகர்கிருஷ்ணன்.

Post a Comment

1 Comments