கேழ்வரகின் பயன்கள்
![]() |
Ragi Health Benefits |
Finger Millet, கேழ்வரகு, ELEUSINE CORACANA, குரக்கன் {இலங்கை வழக்கு} ஆரியம்.
தாய்பாலுக்கு அடுத்தபடியாக மிகவும் ஊட்டசத்துள்ள உணவாக கேழ்வரகு உள்ளது. தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு இயற்கை அளித்திருக்கும் கொடையாக கேழ்வரகு பால் பயன்படுத்தப்படுகிறது. சிறியர்வர்கள் முதல் வயதான முதியவர்கள் வரை அனைவருக்குமே எளிதில் ஜீரணிக்க கூடிய எளிமையான, அதே நேரத்தில் ஊட்டசத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கொண்டுள்ளது கேப்பை, ராகி என அழைக்கப்படும் "கேழ்வரகு ".....
முன்பெல்லாம் கேப்பை களியும், கூழும் இல்லாத வீடுகளையோ, அம்மன் கோயில் திருவிழாக்களையோ, பார்ப்பது அரிதான ஒன்று. உணவாக மட்டுமில்லாமல் நமது கலாச்சாரத்துடன் நீண்டகால தொடர்பு உடையது கேழ்வரகு.
கேழ்வரகு தோன்றிய வரலாறு:
எத்தியோப்பியாவின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர், ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. ஆரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே கேழ்வரகு கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்தது.
- கேழ்வரகு முதலில் இந்தியாவில் தோன்றி பின்னர் அரேபியாவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும் சென்று அடைந்து விட்டதாக டிகாண்டில் {1886} கூறுகிறார். அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இந்த பயிர் அதிகமாக பயன்படுத்தப்படுவதால், இந்த இடமே முதல் நிலைத் தோற்ற இடமாக, இருக்கக் கூடும் என்று எழுதிவைத்துள்ளார்.
- வாவிலோவ் 1951 - கேழ்வரகு அபிசீனியாவில் {எத்தியோபியா} தோன்றியிருக்கும் என்று கூறுகிறார்.
- ஆனால் மெஹ்ரா 1963 தன்னுடைய பயணக் குறிப்புகளில், கேழ்வரகு முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி பின்னர் சோபியன் வழியாக இந்தியாவை சென்றடைந்து இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் பயன்பாட்டில் இருக்கும் கேழ்வரகு இந்தியாவில் கர்நாடகா, தெலுங்கானா ஆந்திரா, தமிழ்நாடு, பீகார் மற்றும் இமாச்சல பிரதேச மலைபகுதிகளில் பிரதான பயிராக பயிரிடப்படுகிறது.
கேழ்வரகு பயிரிடும் முறை
- கேழ்வரகு பயிரை ஈரப்பதம் இருக்கும் பட்சத்தில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.
- வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டல பயிராக இருப்பதால் மலைச்சரிவுகள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் வெற்றிகரமாக பயிரிட்டு சிறந்த அறுவடையை எடுக்க முடியும்.
- கடின வகை பயிர் என்பதால், மானாவாரி மற்றும் தமிழ்நாட்டின் பாசனப் பயிர் என இரு முறையிலும் பயிர் செய்யலாம்.
- கேழ்வரகு பயிருக்கு அதிக மழை நல்லதல்ல. கதிர் முதிரும்போது, மழை இருக்கக்கூடாது. எனவே நல்ல வடிகால் வசதியுடைய, போதுமான அளவு நீர் தேக்க தன்மையுடைய, வண்டல் மண் கேழ்வரகு சாகுபடிக்கு ஏற்றது.
- சிறிதளவு நீர் தேக்கத்தினை தாங்கும் தன்மை பெறுவதற்கு, போதுமான அளவு வடிகால் வசதியுடைய களிமண்ணில் கேழ்வரகு சாகுபடி செய்யலாம்.
கேழ்வரகின் பயன்கள்:
எலும்புகளை உறுதிப்படுத்துகிறது:
உடல்எடையை குறைக்க உதவுகிறது:
புரதச்சத்து நிறைந்தது:
ரத்தசோகை நோயை கட்டுப்படுத்துகிறது:
மலச்சிக்கலை போக்குகிறது:
மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணம் நார்ச் சத்து குறைவான உணவுகளை உட்கொள்வதே ஆகும். தினமும் கேழ்வரகு உணவினை சிறிதளவு சேர்த்து உண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படாது. ஏன் என்றால் இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை கட்டுப்படுத்துகிறது. மேலும் உடல் ஆரோக்கியத்தையும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளையும், வயிற்றுப்பொருமல் வயிற்றுக் கோளாறுகளை குணமாக்க உதவுகிறது.
உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது:
கடினமான உடல் உழைப்பு உள்ளவர்கள் கேழ்வரகை எடுத்துக்கொண்டால் தங்கள் வேலைகளில் மேலும் சிறந்து விளங்க வேண்டிய சக்தியினை கேழ்வரகு அளிக்கிறது. இதனால் தான் கல் உடைப்பவர்கள், விவசாய வேலை செய்பவர்கள், கட்டிட வேலை செய்பவர்கள் போன்ற கடுமையான வேலைகளில் ஈடுபடுபவர்கள், கிராமங்களில் இன்றளவும் கூட கேழ்வரகு களி, கூழ் இவற்றை சாப்பிட்டு வருகின்றனர்.
சர்க்கரை நோயினைக் கட்டுபடுத்துகிறது:
இரத்த சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள், தினமும் கேழ்வரகு உணவில் சேர்த்து வந்தால் அவர்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும். இதனால் தான் மருத்துவர்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு, கேழ்வரகு ஒரு வரப்பிரசாதம் என கூறுகிறார்கள். எனவே அரிசி, கோதுமை உணவுகளை மட்டும் உண்ணாமல், உங்கள் உணவு பட்டியலில் சிறுதானியம் சேர்த்து வாருங்கள் உறவுகளே!!.. சிறுதானியங்கள் உங்கள் உடலுக்கு பல வித நன்மைகளை செய்ய வல்லது.
![]() |
Ragi Health Benefits |
தைராய்டு நோயாளிகளுக்கு உகந்தது:
இளமை தோற்றதிற்கு:
கேழ்வரகு உணவுகள், சருமத்தை பாதுகாத்து வயதான தோற்றத்தை குறைத்து, என்றும் இளமையோடு வாழ உதவுகிறது. இதில் உள்ள மெத்தியோனைன் மற்றும் லைசின் சருமச்செல்களை எப்பொழுதும் புத்துணர்ச்சியாக வைக்கிறது. விட்டமின் டி யும் இருப்பதால் மேலும் பலன் தருகிறது.
குழந்தைகளுக்கு ஏற்ற மிகச்சிறந்த உணவு :
- பழங்காலம் தொட்டே கேழ்வரகை முளைக்கட்டி சிறு குழந்தைகளுக்கு கொடுக்கும் வழக்கம் நமது நாட்டில் இருந்து வந்தது. இன்றும் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது.
- பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகளுக்கும் கேழ்வரகை கூழாக கொடுக்கலாம். கேழ்வரகை ஊறவைத்து அரைத்து வடிகட்டி, தயாரிக்கப்படும் கேழ்வரகு பால் - குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் தாய்ப்பாலுக்கு இணையான சத்துக்களை பெறமுடியும்.
- குழந்தைக்கு ஒரு வயது தொடும்போது கேழ் வரகை ஊறவைத்து, முளைகட்டி பின் உலர்த்தி, பொடி செய்து அதில் கஞ்சி காய்ச்சிக் கொடுத்தால், சரியான எடையில் குழந்தை போஷாக்காக வளரும். இது குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
- அரிசியைவிட அதிக சத்துக்களை கொண்டுள்ள கேழ்வரகை குழந்தைகளுக்கு கொடுப்பதால் நீண்ட நேரம் பசி அடங்கும். கேழ்வரகில் உள்ள டிரிப்டோபான் எனப்படும் பொருள், பசி அதிகம் ஏற்படுவதை அடக்கி, உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு வலு சேர்க்கிறது. இதனால் சிறு குழந்தைகள் அதிக எடை அதிகரிப்பதை கட்டுபடுத்துகிறது. சிறுவயதில் பூப்படைவதையும் தடுக்கிறது..
- குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவும், நல்ல உடல் மன வளர்ச்சி பெறவும் அவர்கள் சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு உண்ணவேண்டும். கேழ்வரகு மாவில் செய்யப்பட்ட கேழ்வரகு கஞ்சி, கேழ்வரகு தோசை போன்றவற்றை குழந்தைகளுக்கு உண்ண கொடுப்பதால், அவர்களின் உடல் பலம் பெறும்; நோய் எதிர்ப்பு சக்தி அவர்கள் உடலில் அதிகரிக்கும்.
உடலுக்கு ஓய்வு:
கேழ்வரகில் உள்ள ஊட்டசத்துக்கள்
100 கிராம் தானியத்தில்
சத்துக்கள் |
அளவு |
---|---|
புரதம்(கி) | 7.3 |
கொழுப்பு (கி) | 1.3 |
பொட்டாசியம் (கி) | 2.6 |
நார்சத்து (கி) |
3.6 |
கார்போஹைட்ரேட் (கி) | 72.0 |
ஆற்றல் கிலோ (கலோரி) | 328 |
கால்சியம் | 344 |
இரும்புசத்து ( மி.கி) | 3.9 |
தயாமின் (மி.கி) | 0.42 |
ரிபோபிளேவின்( மி.கி) | 0.19 |
நியாசின் (மி.கி) | 1.2 |
கேழ்வரகு உணவு வகைகள்
- கேழ்வரகு களி
- கேழ்வரகு கூழ்
- கேழ்வரகு தோசை
- கேழ்வரகு இட்லி
- கேழ்வரகு இடியாப்பம்
- கேழ்வரகு புட்டு
- கேழ்வரகு உப்புமா
- கேழ்வரகு வடை
- கேழ்வரகு கொழுக்கட்டை
- கேழ்வரகு பக்கோடா
- கேழ்வரகு முருங்ககீரை அடை
0 Comments